தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மாங்கல்யம் தண்டட்டி பதக்கம் டிசைன்களில் வெள்ளி நகைகள்!

நன்றி குங்குமம் தோழி

Advertisement

தங்க நகைகள் மேல் பெண்களுக்கு மோகம் இருந்தாலும், தங்கத்தின் விலை நாளுக்கு நாள் ஏறிக்கொண்டே போகிறது. அதற்கு மாற்றாக வெள்ளி மற்றும் ஃபேன்ஸி நகைகளை வாங்க துவங்கியுள்ளனர் இளம் பெண்கள். இவர்களின் விருப்பத்தினை படம் பிடித்த நிதி, ஸ்வேதா சகோதரிகள் தங்களின் சகோதரர் ஸ்ரீ சரணுடன் இணைந்து, பல வித்தியாசமான, பாரம்பரியமான மற்றும் மார்டன் டிசைன்களில் வெள்ளி நகைகளை ‘ஸ்ரீ வாசவி த அமெதிஸ்ட் ஸ்டோர்’ என்ற பெயரில் பிரத்யேக கடையினை சென்னையில் திறந்துள்ளனர்.

‘‘2018ல் நான்தான் இந்த பிராண்டினை அறிமுகம் செய்தேன்’’ என்று பேசத் துவங்கினார் நிறுவனர் மற்றும் இயக்குனரான நிதி. ‘‘எங்களின் அப்பா நகை வியாபாரி. திண்டுக்கல்தான் எங்களின் பூர்வீகம். அங்கு வாசவி தங்க மாளிகை நகைக் கடையை தெரியாதவர்கள் இல்லை. எங்க கடையில் தங்கம் மற்றும் வைர நகைகள் தான் பிரபலம். வெள்ளிப் பொறுத்தவரை கொலுசு, பூஜை பாத்திரங்கள் மற்றும் வெள்ளிப் பொருட்கள் இருக்கும்’’ என்றவர் நகை வடிவமைப்பு குறித்து படித்துள்ளார்.

‘‘நகை வடிவமைப்பு எங்களின் ரத்தத்தில் சின்ன வயசில் இருந்தே ஊறிய விஷயம். அதனால்தான் அதன் வடிவமைப்பு குறித்து படித்தேன். படிக்கும் போது இறுதியாண்டு பிராஜக்டுக்காக வெள்ளியில் 10 கம்மல்களை அப்பாவின் உதவியுடன் வடிவமைத்தேன். நாங்க நகை வியாபாரி என்பதால், ஜெய்ப்பூர், மும்பை, கொல்கத்தா, ஐதராபாத் ஊர்களில் உள்ள நகை வடிவமைப்பாளர்களை தெரியும். அங்கு பயணம் செய்து வெள்ளியில் நகைகளை வடிவமைப்பவர்களை கண்டறிந்தேன். அவர்களிடம்தான் கம்மல்களை வடிவமைத்தேன். வெள்ளியில் குந்தன் கற்கள் பதித்து அழகான கம்மல்களை செய்து கொடுத்தார்கள்.

பொதுவாக நகைகளை வெள்ளியில் வடிவமைக்கமாட்டார்கள். காரணம், வெள்ளி கடினமான பொருள். ஆனால், தங்கம் மிருதுவானது. நாம் நினைக்கும் விதத்தில் அதனை வளைத்து டிசைன் செய்யலாம். வெள்ளியினை அப்படி செய்ய முடியாது. அதில் நகைகளை வடிவமைக்க தனிப்பட்ட திறமை மற்றும் டெக்னாலஜி தேவை. இப்போது வெள்ளியில் நகைகளை வடிவமைக்க நிறைய டெக்னாலஜி மற்றும் திறமையானவர்கள் இருக்கிறார்கள்.

வெள்ளியிலும் நகைகளை வடிவமைக்க முடிகிறது. அது எனக்கு ஒரு இன்ஸ்பிரேஷனாக இருந்தது. அதனால்தான் நான் இந்த பத்து கம்மல் டிசைன்களை என்னுடைய இறுதியாண்டு கல்லூரியின் பிராஜக்டாக செய்தேன். இதில் கம்மல் மட்டுமில்லாமல் மற்ற நகைகளும் செய்ய முடியும் என்பதை உணர்த்த இதை செய்தேன். ஆனால், குந்தன் செட் நகைகளை தங்கத்தில்தான் செய்யமுடியும்னு சொல்லி என்னுடைய பிராஜக்டினை நிராகரிச்சிட்டாங்க. நான் அதில் நிறைய ஆய்வுகள் செய்து, குறிப்பிட்ட வடிவமைப்பாளர்களிடம் கொடுத்துதான் இந்த கம்மலை டிசைன் செய்தேன். பிராஜக்டில் நிராகரிக்கப்பட்ட என்னுடைய கம்மல்களை எங்க கடையில் விற்பனைக்காக வைத்தேன். ஒரு வாரத்தில் அனைத்து கம்மல்களும் விற்பனையாயின. அப்போதுதான் தெரிந்தது இந்த நகைகளுக்கும் மக்கள் மத்தியில் விருப்பம் உள்ளது என்று.

பொதுவாக நாம் தங்கம் அல்லது வைர நகைகளை வாங்குவோம். பட்ஜெட் இல்லை என்றால் ஃபேஷன் நகைகளை தேர்வு செய்வோம். இடைப்பட்ட வெள்ளியினை வாங்க மாட்டோம். ஆனால், இன்று வெள்ளி நகைகளுக்கும் மக்கள் மத்தியில் தனிப்பட்ட விருப்பம் ஏற்பட்டுள்ளது. காரணம், இது பார்க்க அப்படியே தங்க நகை போல் இருக்கும். அதுதான் எங்களின் யுனிக்னெஸ்னு சொல்லணும். இந்த நகைகள் லக்சுரி நகைகளில் வரும். தங்க நகைகளை டிசைன் செய்பவர்களால்தான் இதனை வடிவமைக்க முடியும்’’ என்றவர், தன் சகோதரர் மற்றும் சகோதரியுடன் இணைந்து இதனை ஒரு பிராண்டாக அறிமுகம் செய்து, இணையம் மூலமாகவும் விற்பனை செய்து வருகிறார்.

‘‘என் அப்பா திண்டுக்கல்லில் நகைக் கடை நடத்தி வருகிறார். அதில் வெள்ளி நகைகளுக்காகவே பிரத்யேகமாக நாங்க ஒரு செக் ஷனை துவங்கி இருக்கிறோம். நாங்க நான்காவது தலைமுறையினர். நாங்க திண்டுக்கல்லில் இருப்பதால், இது போன்ற நகைகளுக்கு அங்கு மட்டுமில்லாமல் மற்ற ஊர்களிலும் நல்ல வரவேற்பு கிடைக்கும் என்பதால்தான் இணையத்தில் விற்பனையை துவங்கினோம். துணை நிறுவனரான என் அண்ணன் அதனை பார்த்துக் கொள்கிறார். திண்டுக்கல் மட்டுமில்லாமல் இந்தியா மற்றும் உலகம் முழுதும் எங்களின் வாடிக்கையாளர்கள் உள்ளனர்.

தற்போது சென்னையிலும் நாங்க ஒரு கிளையினை திறந்துள்ளோம்’’ என்றவரை தொடர்ந்தார் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரான ஸ்வேதா.‘‘எனக்கு 2012ல் திருமணமானது. அதன் பிறகு ஆந்திரா, சித்தூரில் செட்டிலாயிட்டேன். குடும்பம் மற்றும் குழந்தைகள் என்று பிசியாக இருந்தேன். சரண் மற்றும் நிதி இந்த பிராண்டினை ஆரம்பித்த போது என்னையும் அதில் இணைய சொன்னார்கள். அவங்க நிறுவனம் ஆரம்பித்து இரண்டு வருடம் கழித்து தான் இதில் இணைந்தேன்.

எங்களின் பூர்வீகம் திண்டுக்கல் என்றாலும் நானும் ஸ்ரீ நிதியும் சென்னையில்தான் படிச்சோம். சென்னை எங்க இருவருக்குமே மனசுக்கு நெருக்கமான இடம். இங்கு ஒரு கிளை திறக்க வாய்ப்பு வந்த போது, அதன் மூலம் எங்க பிராண்டினை மேலும் விரிவுபடுத்த விரும்பினோம். எங்களுடையது முழுக்க முழுக்க வெள்ளி நகைக்கான பிரத்யேக கடை என்பதால், அதில் நாங்க மூவருமே முழு கவனம் செலுத்தினோம். சென்னைக்கு வரும் முன் நாங்க பல இடங்களில் நகை கண்காட்சிகளில் பங்கு பெறுவோம். அதன் மூலம் எங்களுக்கான வாடிக்கையாளர்களை உருவாக்க முடிந்தது. சென்னை மட்டுமில்லாமல் கோவை, பெங்களூரிலும் கிளையுள்ளது. அடுத்து ஐதராபாத்திலும் திறக்க இருக்கிறோம்’’ என்றவர், இவர்களின் புதிய அறிமுகமான ‘போஹோ காடெஸ்’ கலெக்‌ஷன் குறித்து விவரித்தார்.

‘‘நாங்க பல கலெக்‌ஷன்களை அறிமுகம் செய்திருக்கிறோம். ஒவ்வொரு முறை புதிய கலெக்‌ஷன்களை அறிமுகம் செய்யும் ேபாது மக்களின் விருப்பம், அன்றைய டிரெண்ட் என்ன என்பதை பார்த்து அதற்கேற்ப டிசைன் செய்வோம். மாங்கல்யம் டிசைன்கள், தண்டட்டி, மாட்டல், பதக்கம் போன்ற நகைகளை கேள்விப்பட்டிருப்போம். அவை எல்லாம் தங்கத்தில் இருக்கு. அதை ஏன் வெள்ளி நகைகளில் டிசைன்களாக இணைத்து வடிவமைக்கக்கூடாதுன்னு யோசித்தோம்.

இந்த போஹோ காடெஸ் நகைகளை, ஒளிவீசக்கூடிய பாரம்பரிய டிசைன்களை இன்றைய மார்டன் பெண்களுக்கு ஏற்ப மாற்றி அமைத்து கொடுத்திருக்கிறோம். மாங்கல்யத்தை பெரும்பாலும் மணப்பெண் கழுத்தில் அணிவது வழக்கம். அதையே ஒரு டிசைனாக எடுத்துக் கொண்டு இன்றைய டிரெண்டிற்கு ஏற்ப வடிவமைத்திருக்கிறோம். மாங்கல்யம் மட்டுமில்லாமல், தண்டட்டி, பதக்கம் என பல வடிவங்களை ஒரு நகையில் கொண்டு வந்திருக்கிறோம்.

ஒவ்வொரு கலெக்‌ஷன் அறிமுகம் செய்யும் முன் நாங்க மூவரும் அடுத்த டிரெண்ட் என்ன என்று எங்களிடம் இல்லாத டிசைன்களை மார்க்கெட்டில் கொண்டு வருவது பற்றி யோசிப்போம். நிறைய இடங்களுக்கு பயணம் செய்வோம். மக்களிடம் மற்றும் வடிவமைப்பாளர்களிடம் பேசுவோம். மேலும், நாங்க பார்க்கும் சில விஷயங்களை இதில் கொண்டு வர முயற்சிப்போம். இந்தியாவிலேயே மூன்று விதமான டிசைன்களை நாங்கதான் முதலில் அறிமுகம் செய்தோம். டீப் நாகாஸ் கலெக்‌ஷன், கைகளால் வடிவமைக்கப்படுவது. அடுத்து வைரம் போல் இருக்கும் ஜர்கான் கற்கள் கொண்டு செய்யப்பட்ட நகைகள், மூன்றாவது போஹோ கலெக்‌ஷன்.

நாங்க வெள்ளியில் நகைகளை கொடுப்பதால், பலரும் தங்க நகைப் போலவே வெள்ளியில் தரும் போது, எப்படி மக்கள் தங்க நகைகளை வாங்குவாங்கன்னு கேட்டாங்க. மக்களுக்கு அவர்களின் தேவை என்ன என்று தெரியும். தங்கத்தில் பத்து நெக்லஸ் வாங்க முடியாது. ஆனால், வெள்ளியில் வாங்கலாம். மேலும், அது வெள்ளி என்று சொன்னால் தான் தெரியும். குந்தன் கற்கள் பதிக்கப்பட்ட நகைகள் வெள்ளியில் பார்க்க அழகாக இருக்கும். திருமணம், ரிசெப்ஷன், மெஹந்தி, சங்கீத் என ஒவ்வொரு விழாவிற்கும் வெவ்வேறு நகைகளை போட விரும்புறாங்க. அவற்றுக்கு வெள்ளி நகைகளே பெஸ்ட் ஆப்ஷன். சின்னச் சின்ன விழாக்கள் மற்றும் பண்டிகை நாட்களிலும் இந்த நகைளை அணியலாம். பார்க்க அழகாக இருக்கும்.

எல்லா வயதினரும் அணியக்கூடிய வகையில் எங்களிடம் நகைகள் உள்ளன. ஒட்டியாணம் முதல் அனைத்து டிசைன்களும் எங்களிடம் உள்ளது. இப்போது ஐதராபாத்தில் கொஞ்சம் எக்ஸ்க்ளூசிவ்வா கொண்டு வர இருக்கிறோம். அதற்கான புதிய கலெக்‌ஷனும் சிந்தனையில் இருக்கு. வாடிக்கையாளரின் விருப்பத்திற்கு ஏற்ப அந்த கலெக்‌ஷன் இருக்கும்’’ என்றனர் வெள்ளி சகோதரிகள்.

தொகுப்பு: ரிதி

 

Advertisement