தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தொலைந்து போன தருணங்கள்!

Advertisement

நன்றி குங்குமம் தோழி

உன்னத உறவுகள்

நாம் சிறு பிள்ளைகளாக இருந்த காலத்தில், தாத்தா-பாட்டிகள் மற்றும் நெருங்கிய உறவினர்கள் நிறைய விஷயங்களை நமக்கு கதை போல் சொல்வார்கள். நாங்களெல்லாம் ‘அப்படி வளர்ந்தோம்’, ‘பத்து அணா’காசில் குடும்பம் நடத்தினோம். ‘தங்கம் கிராம் பதிமூணு ரூபாய்’, இப்பொழுது உங்களுக்கு காசின் அருமை தெரிவதில்லை என்றெல்லாம் கோபித்துக் கொள்வார்கள். ஆனால், இன்று நாம் வாழும் காலத்தே, மூன்றாவது சந்ததியைப் பார்க்கிறோம் என்றுதான் சொல்ல வேண்டும்.

முன்னேற்றங்கள் அதிகரிக்க பழைய உன்னத விஷயங்களையும், உறவுகளையும் மறந்து வருகிறோம். நாம் வாழ்ந்த இளைய பருவ வாழ்க்கையையும் சந்தோஷங்களையும் ஏதோ சரித்திரத்தில் படித்தாற் போல் பிள்ளைகளுக்குச் சொல்கிறோம். இயந்திரமயமான வாழ்க்கை சூழலில் அவர்கள் அந்த அனுபவத்தை உணர்வார்களா என்று கூட தெரியவில்லை. அவர்கள் வளர்ந்து ஆளாகி, குடும்பம் என்று அவர்களுக்கும் வந்த பிறகு தங்கள் பிள்ளைகளுக்கு என்னதான் சொல்லித் தருவார்கள். மூதாதையர்கள் பற்றி அவர்கள் அறிவார்களா?

காலத்தின் வேகத்தோடு, நாமும் ஓடிக்கொண்டேதான் இருக்கிறோம். நாம் அனுபவித்த சந்தோஷங்கள் நம் பிள்ளைகளுக்குக் கிடைக்கவில்லை. வேண்டிய பொருட்கள் கிடைப்பது அவர்களுக்கு மகிழ்ச்சியினை தருகிறது. உணர்வுபூர்வமாக நாம் அனுபவித்த மகிழ்ச்சி தருணங்கள், இன்று நினைத்தாலும் நமக்கு குதூகலத்தைத் தருகிறது. அம்மா, அப்பா மட்டுமில்லாமல் உறவுப் பட்டாளமே நம்மை உற்சாகப்படுத்திக் கொண்டிருந்தது.

திருவிழாக்களுக்கு குடும்பமாக செல்லும் போது, போலீஸ் சிப்பந்திகள் டிப்டாப்பாக வரிசையில் நின்று கொண்டிருப்பார்கள். கூட்டத்தில் ‘பார்த்துப் போப்பா’ என்று அவர்கள் சொல்லும் போது நம் மீது அவர்களுக்கு இருக்கும் அக்கறை, நினைத்தால் சந்தோஷமாக இருக்கும். அவர்களை கடந்தால், உப்பும் மிளகாய்த் தூளும் வைத்த மாங்காயை தருவார்கள். அதை பங்குப் போட்டு கடித்து சாப்பிடுவதில்தான் என்ன சுகம்? காரம் தாங்காமல், மூச்சு முட்டுமளவுக்கு தண்ணீர் குடிப்போம். அதன் பலன், வீட்டுக்கு மருத்துவர் வருவார்.

‘கோலி’ போன்ற சில மாத்திரைகளை முழுங்கச் சொல்வார். தும்மல், இருமல் அனைத்தும் பறந்து போகும். ஆஸ்பத்திரிக்குச் செல்வதோ, டாக்டர் ஊசி போடுவதோ எதுவும் கிடையாது. குழாயைத் திறந்து, வாயை வைத்து தண்ணீர் குடிப்போம். எந்தவிதமான ‘இன்பெக்‌ஷ’னும் ஏற்படாது. மொட்டை மாடியில் வெயில் காலங்களில் மாலை தண்ணீர் தெளித்து, இரவு அங்கு தரைவிரிப்பு விரித்து தூங்குவதும் சுகமாக இருக்கும். காலை விடிந்து பார்த்தால், இரண்டு கால்களும் அண்ணன் மீதோ, அக்கா மீதோ கிடக்கும். கைகள் தம்பி மீது இருக்கும். ஏ.சி. போன்ற உபகரணங்கள் பற்றி தெரியாது.

நண்பர்களில் வயது வித்தியாசமே கிடையாது. எல்லோருமே ஒருவருக்கொருவர் ‘போடா, வாடா’தான். ஆண்களானாலும் சரி அப்படியொரு பாசப்பரிவு, அப்பா, அம்மா ஊருக்குச் சென்றுவிட்டால், நண்பர்கள் வீட்டில் தங்குவது கூட வழக்கம்தான். இரவு முழுவதும் நண்பனோடு மனம் விட்டு, விடியற்காலை தூங்க ஆரம்பித்தால், சூரியன் கதிர் கண்களில் படும் வரை உறக்கம் கலையாது. தொலைபேசிகள் இல்லாத காலக் கட்டம்.

கணிதப்பாடப் பிரிவில் மதிப்பெண் குறைந்தால் அப்பா 2 திட்டு திட்டுவார். சிறிது நேரத்தில் கூப்பிட்டு தட்டிக் கொடுத்து சொல்வார். ‘இனி உனக்கு பாடத்தில் சந்தேகம் இருந்தால் என்னிடம் கேள். அல்லது அண்ணனிடம் கேட்டுக் கொள்’ என்பார். எந்த கண்டிப்பும் மனதளவில் பாதிப்பை ஏற்படுத்தாது. பெரிய பையனுக்கு புதிய புதிய சட்டைகள் கிடைக்கும். அண்ணன் போட்டுக் கொண்ட சட்டைகளே பெரும்பாலும் தம்பிகளுக்குக் கிடைக்கும்.

அது போல் கல்லூரி செல்லும் அக்காவின் அழகு சாதனங்களை தங்கை பயன்படுத்த, முகமே அவளைக் காட்டிக் கொடுத்து விடும். தங்கையை கண்டித்தாலும், அவளே அலங்கரித்துக் கொள்வாள். சிறிய சிறிய வாக்குவாதங்கள் உடன் பிறப்புக்குள் ஏற்பட்டிருந்தாலும், அதுவே நெருக்கத்தை அதிகப்படுத்தியது.

‘தான் ஆடாவிட்டாலும், தன் தசை ஆடும்’ என்பார்களே! அதுதான் பாசபந்தம். ஆனால், இன்று சின்ன விஷயங்கள் கூட நமக்குள் விரோத மனப்பான்மையை வளர்த்து, சந்தேகம் ஏற்படுகிறது. சினிமா பார்க்க குடும்பமே குதூகலத்துடன் தயாராகும். பெரியவர்கள் ஒரு வரிசையிலும், சிறிசுகள் அனைத்தும் ஒன்றாகக் கிளம்பி அரட்டையடித்துக் கொண்டே செல்வர். ‘பஸ்ஸில்’ ஜன்னல் சீட் பிடிப்பதில் ஏற்படுமே ஒரு ஆனந்தம். அதை சொல்லி முடியாது. என்னதான் செல்ல உறவாக இருந்தாலும் அதை மட்டும் யாரும் விட்டுக் கொடுக்க மாட்டார்கள். கடைசியில் குட்டிப்பையன் ஆசை நிறைவேறாமல் யார் மடியிலாவது அமர்ந்துதான் செல்ல வேண்டும்.

படம் முடிந்து வீடு திரும்பும் போது மழையோ, வெயிலோ குல்ஃபி சாப்பிடுவது வழக்கமாக இருக்கும். அம்மாவும் அப்பாவும் ‘உடம்புக்கு ஆகாது’ என்று எடுத்துரைத்தாலும், தாத்தா, பாட்டி ‘ஒரு நாள் தானே, குழந்தைகள் சாப்பிட்டு விட்டுப் போகட்டுமே!’ என்று சிபாரிசு செய்வார்கள். சாப்பிட்டு சளி பிடித்தாலும் கஷாயமும் போட்டுத் தருவார்கள். அத்தகைய இன்பமான நொடிகள் இன்றுள்ள குழந்தைகளுக்கு கிடைப்பதில்லை.

இன்று போல் ஏ.சி, தியேட்டர்களில் சினிமா பார்க்கவில்லை. பீட்சா, பர்கர் வாங்கி சாப்பிடவில்லை. இருப்பினும் சந்தோஷம் நிரம்பிக் கிடந்தது. சிக்கனமாக இருந்தாலும், பாச பந்தத்திற்கு அளவில்லா அனுசரணை கிடைத்தது. பிள்ளைகள் எங்குமே தனித்து விடப்படவில்லை. கூட்டுக் குடும்பமாக இருந்தாலும், கணவன்- மனைவி பந்தத்தை நெருக்கமாக்கி, அவர்களையும் மகிழ்ச்சிப்படுத்தவே பெரியவர்கள் விரும்பினார்கள்.

அதனால் நிறையவே கேலி, கிண்டல் பேச்சுக்கள் என குடும்பமே சந்தோஷமாக இருக்கும். சமையல் தெரியாத பெண்ணிற்கு கணவன் சமையலறையில் உதவி செய்வான். அதைப் பார்த்து கண்டு கொள்ளாத பெரியவர்களும், மறைமுக ஆதரவு அளித்தார்கள். பொழுது போக்கு அம்சங்கள், சமூக ஊடகங்கள் இல்லாத காரணத்தால், ரேடியோ சேனலுக்கு போட்டிகள் வலுக்கும். பழைய ‘கிராமஃபோன்’ தட்டுக்களில் பாடல்கள் ஒலிக்கும். ஆறு அல்லது வாய்க்கால் பக்கம் உள்ள மரத்தடியில் மாலை வேளைகளில், குடும்பமாக ஒன்று கூடி மகிழ்வார்கள். குறிப்பாக ஆண்கள் அரட்டையடிக்கும் இடம் என்று சொல்லலாம். இரவு சாப்பாட்டு நேரம் வரை அன்றைய செய்திகள் விவாதிக்கப்படும்.

அதே சமயம் பெண்கள் வீட்டு வாசலில் ஒன்று சேர்ந்து விஷயங்களைப் பரிமாறிக் கொள்வார்கள். பிள்ளைகள் வியர்த்துக் கொட்டும் அளவுக்கு விளையாடி ஓய்வார்கள். பாரதி சொன்ன ‘ஓடி விளையாடு பாப்பா’ உண்மையிலேயே நடந்தது. அதனால்தானோ என்னவோ நம் மூதாதையர்கள் பெயர் தெரியாத வியாதிக்கெல்லாம் அடிமையாகாமல் திடகாத்திரமாக வாழ்ந்தார்கள்.

மொத்தத்தில், மூதாதையர்கள் வாழ்ந்த காலம் அன்பாலும், பாசத்தாலும் அரவணைக்கப்பட்ட குடும்பங்களாகத்தான் இருந்திருக்கிறது. அந்தக் காலக்கட்டம் மீண்டும் அமையுமா என்பது காலத்தின் கையில்தான் உள்ளது. பாசமான வார்த்தைகளை பிள்ளைகள் மனதில் விதைப்போம். அன்பு என்னும் தண்ணீர் ஊற்றி வளர்ப்போம். ஊக்குவித்தல் என்னும் உரத்தையும் போட்டு அவர்கள் வாழ்க்கையை செழிக்கச் செய்வோம். நிறைய படிக்கிறார்கள், சாதனை புரிகிறார்கள், நல்ல உணவு, உடை, இருப்பிடம் அனைத்தும் சுலபமாக கிடைக்கிறது. வீட்டிலும் உறவுகள் ஒன்றுகூடி நம் குடும்பப் பாரம்பரியங்களை சொல்லித் தந்து, ஊக்குவிப்பதன் மூலம் நாளை பிள்ளைகள் தனித்து விடப்படமாட்டார்கள்.

பழமையில் புதுமைகள் புகுத்தப்படுவது போன்று, புதிய சந்ததியினரிடையே நம் பழைய உறவுகளை எடுத்துக்கூறி ஆரோக்கியமான - நம்பிக்கையான வாழ்க்கையை வாழ கற்றுத் தரலாம்! தொலைந்து போனவை நம் நாட்கள் மட்டுமல்ல. நம் சுகங்களும் தான். ‘டவுன் பஸ்ஸில்’ சென்றால் கூட நிம்மதியாக உட்கார்ந்து பயணித்தோம். இன்று பெரிய ஆடம்பர காரில் போனாக் கூட திரும்பி வரும் வரை நிம்மதியில்லை. சுகமான வாழ்க்கை மட்டுமே போதாது... மனதிற்கு சந்தோஷம்-நிம்மதி-அன்பு-பாசம்-பரிவு-அரவணைப்பு இவற்றால் மட்டுமே சாத்தியமாகும். உறவுகள் பற்றி ஊட்டி வளர்ப்போம்! அன்பு தந்து அரவணைப்போம்!

தொகுப்பு: சரஸ்வதி ஸ்ரீ நிவாசன்

 

Advertisement