தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

லண்டன் டயரிஸ்...

நன்றி குங்குமம் தோழி

Advertisement

‘‘இதுதாங்க யுகே பார்லிமென்ட். அட, நம்ம தேசத் தந்தை மகாத்மா காந்தியோட சிலை இங்க இருக்கு...’’

‘‘குரங்கில் இருந்துதான் மனிதன் வந்தான்னு சொன்ன சார்லஸ் டார்வின் வீட்டுல நாம இப்ப இருக்கோம்...’’

‘‘இந்த பிரிட்டிஷ் மியூசியத்திலதான் நம்மளோட பொக்கிஷங்கள் எல்லாம் இருக்கு. உள்ள போய் பார்க்கலாமா..?’’

‘‘நம்ம இந்தியாவுல இருந்து வெள்ளக்காரங்க எடுத்துட்டுப்போன சொத்துக்கள் எல்லாம் இந்த விக்டோரியா ஆல்பெர்ட் மியூசியத்துக்குள்ளதாங்க இருக்கு...’’

‘‘இதுதான் எடின்பெர்க் கேஸ்டில்... இதுக்குள்ள கோல்ட், டைமன்ட், பியல்ல செய்த கிரீடங்கள் இருக்காம். ஆனால், வீடியோ எடுக்க முடியாது.’’

‘‘லண்டன்ல நம்ம ஸாரி வேரிங் பார்த்து, லண்டன் மக்கள் என்ன சொல்றாங்கன்னு பார்க்கலாமா..?’’

‘‘லண்டன்ல இதுவொரு மெயின் பிளேஸ். பெயர் பிக் பென். யுகேவோட பார்லிமென்ட் இங்கு

தான் இருக்கு.’’ ‘‘இதுதாங்க லண்டன் ஐ...’’

‘‘லண்டன்ல இருக்கும் வீடு, ரோடெல்லாம் இப்படித்தாங்க இருக்கும்...’’‘‘இதுதாங்க ஸ்கை டைவ் ஆஃப் லண்டன். இங்க பறக்க கத்துக் கொடுக்குறாங்க. இதுக்குன்னு தனியா டிரஸ் எல்லாம் கொடுக்குறாங்க. பறந்து பார்க்கலாமா..?’’‘‘நாம இப்ப லிட்டில் இந்தியாவுல இருக்கோம். இங்க நிறைய நார்த் இந்தியன்ஸ் இருக்காங்க.’’ ‘‘மெஹந்தி வைக்கலாமா? பொட்டுக் கடை பார்த்தீங்களா? அட, வளையல் கடை பாருங்க..! கரும்பு ஜூஸ் குடிக்கலாமா? அட, நம்ம ஜாய் ஆலுக்காஸ் இங்கயும் இருக்கு. இந்த ஏரியா, நம்ம தி.நகர் மாதிரியே இருக்குல. ஐஸ்க்ரீம் சாப்பிடலாமா? இப்ப நான் குதிரை வண்டியில போகப் போறேன்...’’‘‘தமிழ் மக்கள் அதிகம் வாழுற ஈஸ்ட் ஹோம் வந்திருக்கோம். இங்க சரவண பவன், அஞ்சப்பர்னு நம்ம ஊர் ரெஸ்டாரன்ட்ஸ் எல்லாம் இருக்குங்க...’’

‘‘தமிழ் மக்கள் எங்க போனாலும் நம்ம கலாச்சாரத்தை மறக்குறதே இல்லங்க. லண்டன்ல நடக்கும் நலுங்கு பங்ஷனுக்கு போகப் போறோம்...’’‘‘லண்டன் தமிழ் வீடு தோட்டத்தைப் பார்க்கலாமா? அட, வீட்டுலேயே ஆப்பிள் மரம், வீட்லயே வாழை மரம், கத்திரிக்கா, புதினா வளர்க்குறாங்க...’’‘‘நம்ம டிரடிஷனல் வேர்ல லண்டன சுத்துவோமா?’’ ‘‘இது லண்டன் முருகன் கோயில். இங்க சாம்பார் சாதம் சூப்பரா இருக்கும்.

சாப்பிடலாமா?’’ ‘‘இது நம்ம ஊர்ல இருக்க கோயில் கடை வீதி மாதிரியே இருக்குல...‘‘ ‘‘இப்ப நாம ரிக் ஷால ரவுண்ட் அடிக்கப் போறோம்…’’இப்படியாக... இந்தியா தொடர்பாக, தமிழர்கள் தொடர்பாக உள்ள விஷயங்களைத் தேடிப்பிடித்துக் கொண்டுவந்து, வீடியோவாக்கி, அதனை “லண்டன் டயரிஸ் தர்ஷினி” என்ற பெயரில் வெளியிட்டு, ஃபாலோவர்ஸை லட்சங்களில் சேர்த்து வைத்திருக்கும் ப்ரியதர்ஷினிக்கு, இன்ஸ்டாவில் 1 லட்சத்து 73 ஆயிரம்... யுடியூப்பில் 1 லட்சத்து 52 ஆயிரம்... ஃபேஸ்புக்கில் 1 லட்சத்து 26 ஆயிரம் என ஃபாலோவர்ஸ் உலகெங்கிலும் பறந்து விரிந்து கிடக்க... ஐ.டி. வேலை நிமித்தமாக லண்டன் நகரம் சென்றவராம் இந்த க்யூட்டான தர்ஷினி.வந்த இடத்தில் அதீத தனிமை ஆட்கொள்ள, அதில் ஃபீலாகி (என்னா, என்னா ஃபீலிங்கு), சோஷியல் மீடியா ப்ளாட்ஃபார்முக்குள் நுழைந்த க்யூட் பாப்பாவுக்கு கைகொடுத்தவர்களே இவரது ஃபாலோவர்ஸ்.

பிறகென்ன, தனது மந்திரப் புன்னகையாலும், துள்ளல் நடையாலும், க்யூட் க்யூட்டான பெர்பாமென்ஸ் காட்டி.. பார்ப்பவர் மனங்களில் பசக்கென ஒட்டிக்கொள்ளும் தர்ஷினி, பிறந்தது... வளர்ந்தது... படிச்சது எல்லாமே சென்னைதான். பக்கா வடசென்னைப் பொண்ணு. கல்லூரி முடித்து, ஐ.டி. நிறுவனம் ஒன்று வாம்மான்னு அழைத்து வேலை கொடுத்ததில்,

எக்ஸ்பீரியன்ஸாகி, பிறகு யு.கே.வில் வேலை தேடி அதே ஐ.டி. துறைக்குள் நுழைந்து, அங்கேயே நண்பர்களோடு டென்ட் அடித்து விட்டாராம்.

‘‘அம்மா, அப்பா, சொந்த பந்தம்னு குறுகிய வட்டத்திற்குள் வாழ்ந்துட்டு, திடீர்னு கடல் தாண்டி, கொஞ்சமும் ஒட்டாத நாட்டில், புரியாத மக்களோடு, நண்பர்களை மட்டுமே நம்பித் தொடங்கிய வாழ்க்கையில, தொடக்கத்தில் கஷ்டங்கள்தான் இருந்தது. ஆனால், இப்ப மகிழ்ச்சிய கிலோ கணக்குல அனுபவிச்சுக்கிட்டே இருக்கேன்’’னு புன்னகைத்த, இந்த வாலுப் பெண் அடிக்கும் லூட்டியில், லண்டன் நகரமே கதிகலங்கிப் போயிருப்பதாக அங்கிருக்கும் அவரின் நட்பு வட்டாரங்கள் சொல்ல, நம்மை நோக்கி கண்சிமிட்டியவர், ‘‘அப்படியெல்லாம் ஒன்னுமில்ல, கொஞ்சம் வாலுத்தனம் பண்றேன்தான்.

ஆனாலும், வீட்டில் எல்லோரையும் மிஸ் பண்றேன்’’ என செல்லமாய் சிணுங்குகிறார் லட்சங்களில் ஃபாலோவர்ஸோடு லண்டனை சுற்றும் தர்ஷினி.

‘‘ஃபாலோவர்ஸ் எதிர்பார்த்தெல்லாம் சோஷியல் மீடியாவுக்குள் வரலங்க. இதெல்லாம் தானா சேர்ந்த கூட்டம்’’ என காலரை உயர்த்தியவர், ‘‘எல்லோராலும் லண்டன் வர முடியாது இல்லையா?

அதனால இங்கன இருக்க லண்டன அங்கன இருக்க நம்ம மக்கள்கிட்ட சேர்க்குறேன்... அவ்வளவுதான். இதுல பெரிசா ஒரு குறிக்கோளும் இல்ல. தமிழ் மக்கள் எங்கிருந்தாலும் நமது கலாச்சாரத்தையும், நம்முடைய பழக்க வழக்கத்தையும் கைவிடுறதே இல்லை என்பதையும் கூடுதலாக காட்டுறேன்... அம்புடுதான்.லண்டனில் நம் மக்கள் தொடர்பான விஷயங்களை ஃபாலோவர்ஸுக்கு காட்டும் போதே, நமது இந்தியக் கலாச்சாரத்தையும், நமது பாரம்பரியத்தையும் பறைசாற்றும் உடைகள், பொருட்கள், ஆபரணங்கள், பழக்கவழக்கம் இவற்றையும் தேடித் தேடி காட்சி விருந்தாக்குறதுதான் என்னோட ஸ்பெஷல்’’ என்கிறார் துள்ளலோடு.

‘‘கூடவே மக்களோடு இன்ட்ராக்ட் செய்யறதெல்லாம் எனக்குப் பிடித்தமான விஷயம். இதில், பலரோடு பழகும் வாய்ப்பும், பேசும் வாய்ப்பும் தேடி வருது’’ எனப் புன்னகைத்தவர், ‘‘இன்னைக்கு தேதிக்கு லண்டன்ல நிறைய நிறைய ஃப்ரெண்ட்ஸ், நிறைய நிறைய ஃபேமிலிஸ் எனக்கு கிடச்சாச்சு. பிறகென்ன லைஃப் ஜாலியோ ஜாலிதான்...’’ மீண்டும் துள்ளிக் குதிக்கிறார் இந்த வாலுப்பெண்.

‘‘ஒரு விஷயத்தை சோஷியல் மீடியாவிற்குள் எப்படிக் கொண்டுபோய் சேர்க்கிறோம் என்பதில்தான் ஃபாலோவர்ஸுக்கான சூட்சுமமே இருக்கிறது’’ என்கிற தர்ஷினி, ‘‘நாம கொடுக்குற

கன்டென்ட் வியூவர்ஸுக்கு பிடிக்கலாம். அல்லது நாம பிரசென்ட் செய்யுற விதம் பிடிக்கலாம். இதில் எது வேணாலும் இருக்கலாம்.

லண்டனுக்கு வரும்போது நம்ம ஊரையும், அன்பான பெத்தவங்களையும், ஃப்ரெண்ட்ஸையும், சொந்த பந்தங்களையும் மிஸ் பண்ணப் போறோமேங்கிற உணர்வு இருந்துச்சு. ஆனால், இங்கு வந்த பிறகுதான் தெரிந்தது, எதையும் நாம மிஸ் பண்ணலன்னு. மளிகை சாமானாக இருக்கட்டும், கடைவீதியா இருக்கட்டும், கோயிலா இருக்கட்டும், தமிழக உணவகங்களாக இருக்கட்டும், அன்பான தமிழ் மக்களா இருக்கட்டும், தேவையான அத்தனையும் இங்கேயே கிடைக்கிது. லண்டன் வந்த பிறகு

இந்தியாவ நாம மிஸ் பண்றோமேங்கிற உணர்வே போயிருச்சு.

நம்ம நாட்டுக்கும் லண்டனுக்கும் பெரிய வித்தியாசம் கிடையாதுங்க. அதெல்லாம் நம்முடைய மைன்ட் செட்தான். இங்கிருக்கும் லண்டன் மக்கள் மாதிரி வாழணும்னாலும் வாழலாம். இல்லை நம் நாட்டில் எப்படி இருந்தோமோ அப்படியே வாழ்ந்துவிட்டும் போகலாம். என்ன வெதர் மட்டும்தான் மாறிக்கிட்டே இருக்கும்.லண்டன் மக்கள் குறித்து சுருக்கமா சொல்லணும்னா அவரவர் வாழ்க்கைய அவரவர் பார்ப்பாங்க. கணவன், மனைவியா இருந்தாலும், அவரவர் பில்லை அவரவர்தான் கொடுப்பாங்க...’’ பலமாய் சிரிக்கிறார்.

‘‘எதுக்கும் ஃபீல் பண்ணக் கூடாது. லைஃப்ப எப்பவும் என்ஜாய் பண்ணணும். கஷ்டம் வரும்... போகும். வயசு வருமா? அதனால் இளமை இருக்கும் போதே என்ஜாய் பண்ணணும்...’’ தத்துவத்தை உதிர்த்து சட்டென கேமராவோடு பறந்தது, சிறகுகளால் லண்டனில் வண்ணங்களைப் பரப்பும் தர்ஷினி என்கிற அழகிய பட்டர்ஃபிளை.

தொகுப்பு: மகேஸ்வரி நாகராஜன்

 

Advertisement

Related News