தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் கொம்புச்சா!

நன்றி குங்குமம் தோழி

கொம்புச்சா என்பது நொதிக்க வைக்கப்பட்ட ஒரு வகையான பானம். பல நூற்றாண்டுகளுக்கு முன்பு சீனாவிலிருந்து தோன்றிய இந்த கொம்புச்சா குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் தன்மை கொண்டது. மேலைநாடுகளில் பிரபலமாக பயன்படுத்தப்படும் இந்த பானம் தற்போது இந்தியாவிலும் பிரபலமடைந்து வருகிறது. சென்னையை சேர்ந்த ஊட்டச்சத்து நிபுணர் ரூபிணி தேவி மற்றும் அவரது கணவர் சூர்ய பிரகாஷ் ஆகியோர் பாரம்பரிய முறையில் ஆரோக்கியமான கொம்புச்சாவினை தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர்.

“நான் அமெரிக்காவில் வசித்த போதுதான் கொம்புச்சா பற்றி எனக்கு தெரிந்தது. என் அலுவலக நண்பர் ஒருவர் இதனை பாரம்பரிய முறையில் வீட்டில் தயாரிப்பதாக சொல்லி எனக்கு கொடுத்தார். புளிப்பு சுவை கொண்டிருந்ததால் எனக்கு ஆரம்பத்தில் பிடிக்கவில்லை. ஆனால் அவரோ ஒவ்வொரு வாரமும் புது நறுமண சுவையில் தயாரித்து எனக்கு கொடுத்தார். அதை குடிக்க குடிக்க எனக்கு அந்த சுவை பிடித்துப் போனது. இந்தியாவிற்கு திரும்பிய போது, கொம்புச்சா குடிக்க வேண்டும் என்று தோன்றியது. கடையில் வாங்கி குடித்தேன். ஆனால் என் நண்பரின் தயாரிப்பில் இருந்த சுவை இதில் இல்லை.

அதிக அமிலத்தன்மை கொண்டிருந்தது. அதனால் வீட்டில் நானே தயாரிக்கலாம்னு முடிவு செய்தேன். அதற்கான முயற்சியில் ஈடுபட்டேன். ஆனால் நான் நினைத்த சுவை வரவில்லை. புளிப்பு அதிகமாக இருந்தது. ஆனாலும் முயற்சியை கைவிடவில்லை. அப்போது ஊரடங்கு காலம் என்பதால், நேரமும் நிறைய இருந்தது. அதனை நான் கொம்புச்சா தயாரிக்கும் பயிற்சிக்காக பயன்படுத்திக் கொண்டேன்.

நானும் என் மனைவியும் இணைந்து பல்வேறு சுவைகளில் கொம்புச்சா தயாரித்து அதற்கான பரிசோதனையில் ஈடுபட்டோம். பல கட்ட தயாரிப்புக்குப் பிறகு நாங்க நினைத்த சுவையினை அடைய முடிந்தது. நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு கொடுத்தோம். சுவை நன்றாக இருந்ததால் கடைகளில் விற்பனை செய்ய சொல்லி யோசனை சொன்னார்கள். அந்த யோசனையில் பிறந்ததுதான் ‘ஹெவென்’ஸ் எலிக்ஸ் புரோபயாடிக்ஸ்’ என்றவரை தொடர்ந்தார் சூர்ய பிரகாஷின் மனைவி மற்றும் இணை நிறுவனரான ரூபிணி தேவி.

“எனது கணவரிடமிருந்துதான் கொம்புச்சா தயாரிக்கும் யோசனை வந்தது. அதனால் அதை சரியான சுவையில் கொண்டுவர வேண்டும் என்பதில் மிகவும் கவனமாக இருந்தோம். நான் ஊட்டச்சத்து நிபுணர் என்பதால் இதில் உள்ள ஊட்டச்சத்தினை ஆய்வு செய்த பிறகு அதை சந்தைப்படுத்த துவங்கினோம். வணிக ரீதியாக தயாரிக்கப்படும் கொம்புச்சாவில் செயற்கை சுவைகளை ப்ளாக் டீயில் சேர்த்து கார்பனேற்றம் செய்கிறார்கள். பாரம்பரிய கொம்புச்சாவில் இயற்கையான முறையில் ப்ளாக் டீ தயாரித்து பிறகு நொதிக்க வைப்போம்.

அதாவது, பாலை தயிராக மாற்றுவது போல், ப்ளாக் டீயில், SCOBY அதாவது, சிம்பியாடிக் கல்ச்சர் ஆஃப் பாக்டீரியா அண்ட் ஈஸ்டினை சேர்க்க வேண்டும். அதில் பாக்டீரியா, ஈஸ்ட் நிறைந்திருக்கும். இதனை பிளாக் டீயில் சேர்த்த பிறகு 7 நாட்கள் இறுக்கமாக மூடி வைக்க வேண்டும். ஒரு வாரம் கழித்து புளிக்க வைக்கப்பட்ட கொம்புச்சா கிடைக்கும். இதில் செம்பருத்தி டீ, சங்கு பூ போன்ற நமக்கு விருப்பமான சுவைகளில் ப்ளாக் டீ தயாரித்து அதனை நொதிக்க செய்தால் விருப்பமான சுவைகளில் கொம்புச்சா கிடைக்கும்.

கொம்புச்சா இந்திய மக்களிடம் பிரபலமடையவில்லை. அதனை மக்களிடம் சேர்க்க புளிப்புத்தன்மை தெரியாத வகையில் 3 மற்றும் 5 சதவிகிதம் சர்க்கரை அளவினைக் கொண்ட இரண்டு வகையான கொம்புச்சாவினை தயாரித்தோம். பொதுவாக 0.3% சர்க்கரை அளவில்தான் முழுமையான ஆரோக்கியம் கிடைக்கும். ஆனால் அதில் புளிப்பு சுவை அதிகமாக இருக்கும் என்பதால் பலர் விரும்புவதில்லை. அதனால் முதலில் இனிப்பு சுவை அதிகமாக இருப்பதை எடுத்து பழகிவிட்டு அதன் பிறகு புளிப்பு அதிகமுள்ள கொம்புச்சாவிற்கு மாறலாம். ஃபிரிட்ஜில் வைத்தும் பருகலாம்” என்றவர் கொம்புச்சாவின் நன்மைகளையும் பகிர்ந்தார்.

“கொம்புச்சா புரோபயாடிக் நிறைந்தது. குடல் ஆரோக்கியத்திற்கு புரோபயாட்டிக் முக்கியம். குடலில் உள்ள கெட்ட பாக்டீரியாக்களை வெளியேற்றி நல்ல பாக்டீரியாக்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. Ibs எனும் இரிட்டபுள் பவுல் சிண்ட்ரோம் எனும் பிரச்னையை சரிசெய்ய உதவுகிறது. நீரிழிவு நோய் உள்ளவர்களும் எடுத்துக்கொள்ளலாம். மலச்சிக்கல் பிரச்னைக்கு ஒரு சிறந்த தீர்வாக இருக்கும். குடல் ஆரோக்கியம் சரியாக இருந்தால் உடலும் மனமும் ஆரோக்கியமாக இருக்கும். இன்று நம்முடைய உணவு முறைகள் எல்லாம் மாறிவிட்டது. சரியான நேரத்தில் உணவு உட்கொள்ளாதது, ஆரோக்கியமற்ற உணவுகள் போன்றவற்றால் வயிறு சம்பந்தப்பட்ட பிரச்னைகள் ஏற்படுகின்றன.

சிலர் உணவு சாப்பிட்ட பிறகு சோடா குடிப்பார்கள். சோடாவிற்கு பதில் கொம்புச்சாவை பருகினால் வயிறு உப்புசம், எரிச்சல் போன்ற பிரச்னைகள் சீராகும். கொம்புச்சா டீ, காஃபி போன்றவற்றுக்கு சிறந்த மாற்று என்றாலும் அளவோடு பருக வேண்டும். புரோபயாடிக் என்பது தினமும் உணவில் எடுத்துக்கொள்ள வேண்டிய ஒன்று. மோர், தயிர் போன்றவற்றில் இது உள்ளது. கலப்படம் இல்லாதவரை அதில் சிறந்த புரோபயாடிக் இருக்கும். கொம்புச்சா கலப்படம் ஏதுமின்றி பாரம்பரிய முறையில் தயார் செய்வதால் இதனை தினமும் எடுத்துக்கொள்ளலாம். சில உடல் சார்ந்த பிரச்னைகளுக்கு இந்த புரோபயாடிக் மற்றும் ப்ரீபயாடிக் மாத்திரைகள் மருத்துவர்களால் பரிந்துரை செய்யப்படுகின்றன.

ஆனால் இதனை இயற்கையாகவே கொம்புச்சா போன்ற உணவு பொருட்களிலிருந்து பெறலாம். செம்பருத்தி, ரோஜா, லாவண்டர், துளசி, கேமமைல், ஹாப்ஸ், சுலைமானி, லெமன் க்ராஸ், சங்கு பூ போன்ற சுவைகளில் கொம்புச்சாவினை தயார் செய்கிறோம். என் கணவரின் பூர்வீகம் உடுமலைப்பேட்டை. அங்கு எங்களின் பண்ணையில் செம்பருத்தி, சங்குப்பூ, லெமன் கிராஸ் போன்றவற்றை இயற்கை முறையில் விளைவித்து கொம்புச்சா தயாரிக்க பயன்படுத்துகிறோம்.

ஆரம்பத்தில் பொது மக்களிடையே கொம்புச்சாவை அறிமுகம் செய்ய பாப்-அப் ஸ்டால்களை அமைத்து, இலவசமாகவே வழங்கினோம். சுவையும் அதன் பலனையும் அறிந்தவர்கள் அடுத்தடுத்த முறை எங்களிடம் கொம்புச்சாவை வாங்க ஆரம்பித்தார்கள். மேலும் சில சூப்பர் மார்க்கெட்டிலும் விற்பனைக்காக வைத்திருக்கிறோம். தவிர, கொம்புச்சா தயாரிப்பு முறை குறித்த ஒர்க் ஷாப்பும் நடத்துகிறோம்’’ என்றார் ரூபிணி.

தொகுப்பு: ரம்யா ரங்கநாதன்