தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

கிச்சன் டிப்ஸ்

* சாதம் வடித்தவுடன் கஞ்சியைக் கீழே கொட்டி விடாமல், அதனை அடுப்பில் வைத்து நன்றாக சுண்டியவுடன் கோதுமை மாவை உப்புப் போட்டுக் கரைத்து நன்றாகக் கொதித்தவுடன் கீழே இறக்கவும். பிளாஸ்டிக் பேப்பரில் கரண்டியால் கொஞ்சம் கொஞ்சமாக தேய்த்து வெயிலில் காய வைக்கவும். நன்கு காய்ந்தவுடன் எண்ணெயில் பொரித்து சாப்பிட்டால் மிகவும் ருசியாக இருக்கும்.

* நிறைய உருளைக்கிழங்கு சிப்ஸ் செய்யும்போது வறுப்பதற்குமுன் நீரில் அலசும் தண்ணீரில் ஸ்டார்ச் படிந்திருக்கும். அதை அடுப்பில் வைத்துக் கிளறினால் கூழாக மாறும். வடித்த கஞ்சியுடன் கூழ் கலந்து அரைத்த மிளகாய், உப்புப் போட்டு ஸ்பூனால் வெயிலில் ஜவ்வரிசி வடாம் மாதிரி உலர்த்தி, காய்ந்த பின் வறுத்துச் சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.

* பழைய சாதம் மீந்துவிட்டால் கவலைப்படாதீர்கள். சாதம் எவ்வளவு இருக்கோ அதற்கேற்ப மிளகாய் வற்றல், புளியங்கொட்டை அளவுப் பெருங்காயம், 1 தேக்கரண்டி மிளகு, தேவைக்கேற்ப உப்பு சேர்த்து மிக்ஸியில் விழுதாக அரைத்துக்கொள்ளவும். பழைய சாதத்தை பிழிந்து ஆட்டுரலில் (அ) கிரைண்டரில் அரைக்கும்போது மேலே அரைத்து வைத்துள்ள விழுதையும் நன்றாக கெட்டியாக அரைத்து, சிறிது சோடா உப்பு சேர்த்து நன்றாக பிசைந்து முறுக்குப் பிழியும்குழாயில் போட்டு ஒரு சுத்தமான துணியில் பிழிந்து வெயிலில் காய வைக்க வேண்டும். காய்ந்தவுடன் ஒரு டப்பாவில் போட்டு வைத்துக்கொண்டு, தேவைப்படும் போது எண்ணெயில் பொரித்துக் கொள்ளலாம்.- ஆர்.ஜெயலெட்சுமி, திருநெல்வேலி.

* வதக்கிச் செய்திருக்கும் காய்கறியில் ஒரே எண்ணெய் மயமா? கவலையே வேண்டாம். கொஞ்சம் கொள்ளு மாவைத் தூவினால் போதும்.

கொள்ளுக்கு எண்ணெயை உறிஞ்சும் தன்மை உண்டு.

* மைதா, ரவா டப்பாக்களில் கல் உப்பை ஒரு துணியில் முடிந்து போடலாம். உலர்ந்த வேப்பிலை போடலாம்.

கசக்காது. புழு, பூச்சி வராது. சுக்குத்தூளும் தூவலாம்.- எஸ்.மேரி ரஞ்சிதம், சிவகங்கை.

* பாகற்காயை நறுக்கி, உப்பு, மஞ்சள் பொடி சேர்த்து பிசிறி வைத்து, சற்று நேரம் கழித்து பிழிந்தால் அதிலுள்ள கசப்பு, நீராக வடிந்து கசப்பு வெகுவாகக் குறைந்துவிடும்.

* பாகற்காய் பொரியல் செய்யும்போது, தேங்காய்த்துருவல், வெல்லப்பொடி சேர்த்தால் சுவை கூடி கசப்பு குறையும்.

* பாகற்காய் வேகும்போது எலுமிச்சைச்சாறு சிறிது சேர்த்தால் சுவை கூடும். கசப்பு குறையும்.

* பாகற்காயைப் பொடியாக நறுக்கி சிறிது எண்ணெயில் வதக்கிவிட்டு வேக வைத்தால் கசப்பு குறைந்துவிடும்.

* பாகற்காய் புளிக்குழம்பு செய்யும்போது சிறிது வெல்லம் சேர்த்தால் குழம்பு இனிப்பு, புளிப்பு, உப்பு, கசப்பு, காரச்சுவையுடன் ருசியாக இருக்கும்.- எஸ்.ராஜம், திருச்சி.

* கொதிக்கும் நீரில் வெங்காயத்தைப்போட்டெடுத்து, பிறகு குளிர்ந்த நீரில் கொட்டி எடுத்து தோல் உரித்தால் சுலபமாக இருக்கும்.

* கோதுமை மாவை சூடான பால், சூடான நீர் சேர்த்துப் பிசைந்தால் மிருதுவாக சப்பாத்தி செய்யலாம்.

* முட்டைக்கோஸ் நறுக்கும் போது தண்டுகளை சாம்பாரில் சேர்த்தால் சுவை கூடும்.- ஆர்.பத்மப்ரியா, ரங்கம்.

* அரிசி உப்புமா செய்யும் போது தாளித்து தண்ணீர் விட்டதும் அதில் ஒரு கப் பால் அல்லது ஒரு கப்

மோர் விட்டு கொதித்தபின் உப்புமா கிளறினால் உப்புமா வெளுப்பாகவும், சுவையாகவும் இருக்கும்.

* ஒரு சுத்தமான துணி மூலம் அப்பளத்தின் இரு பக்கங்களிலும் நன்கு துடைத்துவிட்டு, பிறகு எண்ணெயில் பொரித்தெடுத்தால் எண்ணெய் காரலெடுக்காது.

* தக்காளி, கேரட், வெங்காயம் போன்ற சாலட்டுகள் செய்யும்போது ஒரு மாறுதலுக்காகத் தயிருக்குப் பதில் இரண்டு டேபிள் ஸ்பூன் தேங்காய்ப்பாலை ஊற்றிப் பிசைந்து சாலட் செய்ய மிகவும் சுவையாக இருக்கும்.- ஆர்.பூஜா, சென்னை.

* மோரில் இஞ்சியும், பச்சை மிளகாயும் அரைத்துச் சேர்த்து அதில் சப்பாத்தி மாவையும் பிசைந்தால் புளிப்பும், காரமும் சேர்ந்த சுவையான சப்பாத்தி கிடைக்கும்.

* உருளைக்கிழங்கை சீவி, உப்புத் தண்ணீரில் ஊற வைத்து உலர்த்தி வறுத்தால் வறுவல், மொறுமொறுஎன்று இருக்கும்.

* வறுத்த புழுங்கல் அரிசியை மாவாக்கி வைத்துக்கொண்டால் கூட்டு, கறிகளை இறக்கும் போது லேசாகத் தூவி இறக்கினால் வாசனை கூடுதலாக இருக்கும்.

* நெய் வைத்திருக்கும் ஜாடியில் ஒரு துண்டு வெல்லத்தைப் போட்டு வைத்திருந்தால் நெய் மணம் மாறாமல் இருக்கும்.- கே.பிரபாவதி,