தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

கிச்சன் டிப்ஸ்

 

நன்றி குங்குமம் தோழி

*தேன் குழல் செய்ய மாவு அரைக்கும் போது உருளைக்கிழங்கை வேக வைத்து அதனுடன் சேர்த்து அரைத்தால் தேன் குழல் மிக மிகச் சுவையாக இருக்கும். அதிரசம் செய்யும் போது சிறிது பேரீச்சம் பழமும் கலந்து மாவை பிசையுங்கள். சுவை ஜோராக இருக்கும்.

*உளுந்த வடைக்கு மாவை நைசாக அரைத்து, வேக வைத்த உருளைக் கிழங்கையும் சேர்த்து பிசைந்து வடை தட்டினால் வடை மொறு மொறுவென்று இருக்கும்.

*கேசரி தயாரிக்கும்போது இரண்டு பேரீச்சம் பழத்தையும் பொடிதாக அரிந்து போட்டால் அவை சற்று கூடுதலாக சுவையாக இருக்கும்.

- எம்.ஏ.நிவேதா, திருச்சி.

*எலுமிச்சைச் சாறு மற்றும் தண்ணீரை ஒரு பவுலில் கலந்து கொள்ளுங்கள். ஃப்ரூட் சாலட் செய்யும் போது, பழங்களை நறுக்கிய உடனே இந்தக் கலவையில் நனைத்து எடுத்தால், பழங்கள் நீண்ட நேரத்துக்கு கருக்காமல் இருக்கும்.

*ஒரு கப் புழுங்கலரிசியை பொன்னிறமாக வறுத்து, மிக்ஸியில் பொடி செய்து கொள்ளவும். தேங்காய்த் துருவல் தூவ வேண்டிய பொரியல்களில், தேங்காய்த் துருவலுக்கு பதிலாக இந்த அரிசிப் பொடியைத் தூவலாம். இப்படிச் செய்தால் பொரியல் நீண்ட நேரம் கெட்டுப் போகாமல் இருக்கும்.

- எம்.நிர்மலா, புதுச்சேரி.

*தோசை மாவு புளித்து விட்டால், அரை கப் வெள்ளை ரவையை மாவில் சேர்த்துக் கலக்கி கால் மணி நேரம் அப்படியே வைத்து விடவும். பிறகு எடுத்து தோசைகளாக வார்த்தால், புளிப்பு மறைந்து போய்விடும்.

*துவையல் செய்யும்போது கறிவேப்பிலை, கொத்துமல்லித் தழையுடன் துளசி, கற்பூரவல்லி இலைகள் சிலவற்றைச் சேர்த்தால் சளி பிடிக்காது.

*இட்லிப் பொடிக்கு அரைக்கும் போது, சிறிது வெந்தயம் அல்லது எள்ளை வறுத்துப் பொடி செய்து சேர்த்துப் பாருங்கள். மணமும், சுவையும் அள்ளும்.

- எச்.சீதாலட்சுமி, கேரளா.

*சாதம் வடிக்கும்போது, ஓரிரு துளி நல்லெண்ணெய் ஊற்றினால் சாதம் உதிரி உதிரியாகக் கிடைக்கும்.

*வற்றல், வடாம் இவற்றை தயாரிக்கும்போது, சின்னச் சின்னதாக பாக்கெட்டுகளில் போட்டு மெழுகுவர்த்தியில் சீல் செய்து வைத்துவிட்டால், நமத்துப் போகாமல் இருக்கும்.

*சர்க்கரைப் பொங்கல் செய்யும் போது சிறிது சுக்கு தட்டிப் போட்டுத் தயாரித்தால் மிகவும் மணமாக இருப்பதோடு, செரிமானத்துக்கும் நல்லது. வித்தியாசமான சுவையாகவும் இருக்கும்.

- எல்.ஆர். உமா ராதாகிருஷ்ணன், திருப்பத்தூர்.

*அடை செய்யும்போது பச்சரிசிக்கு பதிலாக கோதுமை ரவையை போட்டு ஊறவைத்து செய்தால் உடலுக்கு ஆரோக்கியம்.

*அப்பளம் பொரித்த எண்ணெய் மற்றும் பட்சணம் செய்த எண்ணெயில் சிக்கு வாடை வந்தால் அதில் வாழைப்பழ தோலை போட்டு பொரித்தெடுத்து பிறகு உபயோகித்தால் சிக்கு வாடை நீங்கிவிடும்.

*பீட்ரூட்டை குக்கரில் வேகவைத்து விட்டு பிறகு தோலை உரித்தால் எளிதாக நீங்கிவிடும்.

*முதல் நாள் பொரித்த அப்பளம் காகிதம் போல் ஆகிவிட்டால், மீண்டும் அதை எண்ணெயில் பொரித்து எடுத்தால் புதிது போல மொறுமொறுப்பாக இருக்கும்.

- சௌமியா சுப்ரமணியன், சென்னை.

*ஒரு காற்றுப்புகாத டப்பாவில் டிஷ்யூ பேப்பரை வைத்து சிறிதளவு அரிசி போட்டு, அதன் மேலே வேறு ஒரு டிஷ்யூ பேப்பரைப் போட்டு பிஸ்கெட்டுகளை அடுக்கி வைத்தால்

பிஸ்கெட்டுகள் நமுக்காது.

*கிரேவி தயாரிக்கும்போது தக்காளியுடன் சிறிதளவு பீட்ரூட்டையும் சேர்த்து அரைத்து, கொதிக்கும் கிரேவியில் ஊற்றினால் கிரேவி பார்ப்பதற்கு கலர்ஃபுல் ஆகவும், கூடுதல் சுவையுடனும் இருக்கும்.

*ரவையை நெய்விட்டு சிவக்க வறுத்து, காய்ச்சிய பாலில் ஊறவைத்து, பிறகு சர்க்கரைப் பாகு செய்து கேசரி கிளறினால் சுவை இரட்டிப்பாகும்.

- இரா.அமிர்தவர்ஷினி, வாணரப்பேட்டை.

*வடை மாவில் தண்ணீர் அதிகமாகி விட்டால், சிறிது ஜவ்வரிசியை போட்டு, பத்து நிமிடம் ஊற வைத்தால் மாவு கெட்டியாகி விடும். பின்னர் வடை தட்டினால், பார்ப்பதற்கு அழகாகவும், சுவையாகவும் இருக்கும்.

*கீரை வகைகளை மூடி வைக்காமல் திறந்து வைத்தே சமைக்க வேண்டும். இதனால் இயற்கை நிறம் மாறாமல் இருக்கும்.

- எஸ்.வளர்மதி, கன்னியாகுமரி.

*எவ்வளவு பக்குவமாக மாவடு தயாரித்தாலும் பூசனம் ஏற்படுவதை தடுக்க முடியவில்லை. இதற்கு வடு மாங்காய் தயாரித்து ஒரு வாரம் கழித்து, அந்த நீரை மட்டும் இறுத்து கல் சட்டியில் விட்டு முக்கால் பாகமாக சுண்டக் காய்ச்சி ஜாடியில் விட்டு அதில் ஊறிய மாவடுக்களைப் போட்டு வைத்தால் பூசனம் பிடிப்பதை தடுக்கலாம்.

*பீட்ரூட், கேரட் வேக வைத்து வடிகட்டும் நீரை கீழே கொட்டாதீர்கள். சிறிது நாட்டுச் சர்க்கரை போட்டு ஆறவைத்து சாப்பிட்டால் கிழங்கு சாப்பிட்டு கிடைக்கும் சத்துக்களை விட பல மடங்கு சத்து கிடைக்கும்.

- கவிதா, சிதம்பரம்.

புரோட்டீன் லட்டு

தேவையானவை:

வெள்ளை அவல் - ½ கப்,

பொட்டுக்கடலை - ¼ கப்,

தேங்காய்த் துருவல் - ½ கப்,

வேர்க்கடலை - ¼ கப்,

வெள்ளை எள் - 2 டேபிள் ஸ்பூன்,

துருவிய வெல்லம் - 1½ கப்,

நெய் - 2 டேபிள் ஸ்பூன்,

சீவிய பாதாம், முந்திரி - தலா 1 டீஸ்பூன்.

செய்முறை: வெறும் வாணலியில் அவல், பொட்டுக்கடலை, எள், தேங்காய்த் துருவல் முதலியவற்றை தனித்தனியே வறுத்து ஆறியதும் வேர்க்கடலையை வறுத்து தோல் நீக்கி அனைத்தையும் போட்டு நைசாக பொடியாக்கவும். அடிகனமான பாத்திரத்தில் வெல்லத்தை போட்டு கொதிக்க விட்டு வடிகட்டி, கம்பிப் பாகு பதம் வந்ததும் இறக்கி பொடித்து வைத்துள்ள மாவை சேர்த்து, நெய்யில் வறுத்த பாதாம், முந்திரியை போட்டு வறுத்த மாவில் கலந்து கை பொறுக்கும் சூட்டில் லட்டுகளாகப் பிடிக்கவும். மேலே பாதாம் அலங்கரித்து குழந்தைகளுக்கு மாலையில் சாப்பிட கொடுக்கலாம்.

- எம்.வசந்தா, சென்னை.

Related News