தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கிச்சன் டிப்ஸ்

Advertisement

நன்றி குங்குமம் தோழி

* தேன்குழல் செய்யும் போது தேங்காய்ப் பால் ேசர்த்துச் செய்தால் சுவை கூடுதலாக இருக்கும்.

* பொடியாக நறுக்கிய புதினா சேர்த்து பிசைந்து தட்டை தட்ட ருசி கூடும். நல்ல மணமாகவும் இருக்கும்.

* வெண்ணெய் சேர்த்து செய்யும் பலகாரங்களுக்கு மாவுடன் வெண்ணெயை நன்கு கலந்த பின் தண்ணீர் விட்டு பிசைய வேண்டும்.- ச.லெட்சுமி, தென்காசி.

* எந்த பர்ஃபி செய்தாலும் பாகு பதம் சரியாக இருக்க வேண்டும். கடைசியாக சுருண்டு நெய் பிரிந்து வர வேண்டும். நுரைத்து வெள்ளையாக கண்கண்ணாக வரும்போது, இறக்கி சமப்படுத்தி துண்டுகள் போட சரியாக இருக்கும்.

* கை முறுக்குக்கு மாவு பிசையும் போது 2 ஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்து பிசைந்து, முறுக்கு தயாரிக்க கரகரப்பாக, வாசனையாக இருக்கும்.

* பாசிப்பருப்பை சிவக்க வறுத்து ரவை போல் அரைத்து ஒரு பங்கு என்றால் வெள்ளை ரவை மூன்று பங்காக இருக்குமாறு கலந்து கொண்டு, வழக்கமான முறையில் கேசரி செய்ய அதிக ருசியோடு, வாசனையாக இருக்கும்.

* பர்ஃபி, மைசூர்பாகு போன்றவைகளை துண்டுகள் போடும் போது விழும் தூள்களை ஒன்றாகக் கலந்து கொண்டு சோமாஸுக்கு பூரணமாக பயன்படுத்தலாம்.- மகாலெஷ்மி சுப்ரமணியன், காரைக்கால்.

* முறுக்கு செய்வதற்கு முன் வெண்ணெயையும் உப்பையும் ஒரு அகன்ற பாத்திரத்தில் நுரைக்க கலக்கவும். பிறகு அரிசி மாவு, உளுந்து மாவு சேர்த்துப் பிசைந்து தயாரிக்க மிகவும் கரகரப்பாக வரும்.

* தேங்காய் பர்ஃபி கிளறும் போது ஒரு சிறிய கப் போர்ன்விட்டா சேர்த்து கிளற சாக்லேட் தேங்காய் பர்ஃபி டேஸ்டு கிடைக்கும்.

* அதிரசம் தயாரிக்க அரிசி மாவில் வெதுவெதுப்பான பாலை விட்டு பிசிறி பிறகு பாகு தயாரித்து அதில் ஏலப்பொடி சேர்த்து அதிரசம் தயாரிக்க சுவையாகவும், மென்மையாகவும் இருக்கும்.

* வெல்லத்தை அடுப்பில் கரைத்து வடிகட்டி ஆறிய பிறகு அதில் கோதுமை மாவு சேர்த்து அப்பம் தயாரிக்க மிகச் சுவையாக இருக்கும்.- இந்திரா கோபாலன், திருச்சி.

* மைசூர்பாகிற்கு கடலைப்பருப்பை மாவாக அரைக்கும் போது சிறிதளவு முந்திரிப் பருப்பையும் கூடச் சேர்த்து அரைத்தால் மைசூர்பாகின் மணமும், சுவையும் அருமையாக இருக்கும்.

* எந்த உப்பு பட்சணம் செய்தாலும் வெறும் வாணலியில் வெள்ளை உளுத்தம் பருப்பை லேசாக வறுத்து மாவாக்கி ஒரு கரண்டி சேர்த்து பிசைந்தால் சுவையாக இருக்கும்.

* 2 படி அரிசிக்கு அரைப்படி பொட்டுக்கடலை போட்டு அரைத்து தேன் குழல் பிழிந்தால் பொன்னிறத்துடன், கரகரப்பாக இருக்கும்.

* சோமாஸ் மாவை கொஞ்சம் கூடுதலாக நெய் விட்டு பிசைந்தால் சோமாஸ் கிரிஸ்பியாக வரும். மாவை சலித்துவிட்டு நன்கு அழுத்தி பிசைந்தால் எண்ணெயில் வேகும் போது

விரிசல் விடாது.- அபர்ணா சுப்ரமணியம், மயிலாப்பூர்.

* மைசூர்பாகு, பர்ஃபி செய்யும் போது கடாயின் அடியில் ஒட்டிக் கொண்டு எடுக்கவே வராது. அதை சுரண்டாமல் கடாயை மீண்டும் அடுப்பில் வைத்து மிதமாக சூடு செய்து லேசாகத் தேய்த்தால் ஒட்டிக் கொண்டிருப்பது சுலபமாக வந்து விடும்.

* குலோப்ஜாமூன் பாகு மற்றும் அதன் உதிரியில் மைதாவை சேர்த்து பிசைந்து, சப்பாத்தி மாவு போல் பிசைந்து சப்பாத்திகளாக இட்டு சதுர துண்டுகளாக்கி எண்ணெயில் பொரித்தெடுத்தால் அருமையான பிஸ்கெட் ரெடி.- ஆர்.ஜெயலெட்சுமி, திருநெல்வேலி.

* மிக்சர் போன்ற எண்ணெய் பலகாரங்கள் வைக்கும் டப்பா அல்லது சம்படத்தின் அடியில் பிளாட்டிங் பேப்பர் போட்டு வைத்தால், பலகாரம் நமத்துப் போகாமல் இருக்கும்.

* பலகாரங்களுக்கு மாவு பிசையும் முன் மாவை வெறும் வாணலியில் வறுத்து விட்டு வெந்நீர், வெண்ணெய் சேர்த்துப் பிசைந்தால் பலகாரங்கள் மொறுமொறுப்பாக வரும்.

* பூந்தி செய்யும்போது துளைக்கரண்டியில் மாவை வாணலிக்கு அருகில் வைத்து தேய்த்தால் பூந்தி முத்து முத்தாக விழும்.- ஆர்.பத்மப்ரியா, ரங்கம்.

 

Advertisement

Related News