தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

கிச்சன் டிப்ஸ்

நன்றி குங்குமம் தோழி

*சப்பாத்தி மிருதுவாக இருக்க கோதுமை மாவுடன் ஒரு வாழைப்பழம், ஒரு கரண்டி தயிர் விட்டு, கொதிநீர் விட்டு பிசைந்து சுட்டால், சப்பாத்தி மென்மையாய் இருப்பதுடன் சிறிது இனிப்பாகவும் இருக்கும்.

*முற்றிய கோவைக்காயில் பொரியல் செய்யும் பொழுது, சிறிது வெல்லம் சேர்த்துச் செய்தால் மிகவும் நன்றாக இருக்கும். சுவையும் கூடுதலாகும்.

*வெண்டைக்காயை வதக்குவதற்கு முன் ஒரு தேக்கரண்டி புளித்த மோரை சேர்த்தால், வெண்டைக்காய் மொறு மொறுவென்று இருக்கும்.- டி.லதா, நீலகிரி.

*பருப்பு உருண்டை குழம்புக்கு உருண்டை பிடிக்கும் போது ஒரு டீஸ்பூன் அரிசி மாவை கலந்து உருட்டினால் உருண்டை கரையாமல் இருக்கும்.

*ரவா கேசரி, ரவா பர்ஃபிக்கு தண்ணீரை பாதியாக குறைத்து, கெட்டியான பாலை சேர்த்தால் சுவை அதிகரிக்கும்.

*ரசத்தில் ஒரு ஸ்பூன் தேங்காய்ப்பால் சேர்த்தால் ருசி பிரமாதமாக இருக்கும்.- மல்லிகா அன்பழகன், சென்னை.

*கோதுமை ரவையை வறுத்து, வேகவைத்து புட்டு செய்யலாம். கூடவே வெல்லம் சேர்த்தால் படு டேஸ்ட்.

*வடைக்கு அரைத்து எடுத்ததும் அதில் இரண்டு ஸ்பூன் அரிசி மாவைக் கலந்து வடை தட்டினால் மொறுமொறுவென சூப்பராக வரும்.

*நெல்லிக்காயை சீவிப்போட்டு பருப்பு தண்ணீரோடு ரசம் செய்தால் அருமையாக இருக்கும்.

*முருங்கைப்பூவை தேங்காய் எண்ணெயில் பொன்னிறமாக வதக்கி மோர்க்குழம்பில் போட்டு ஒரு கொதி வந்தவுடன் இறக்கிவிட்டால் அந்த நறுமணம் ஊரே வீசும்.- எஸ்.விமலா சடையப்பன், திண்டுக்கல்.

*கீரை மற்றும் முட்டைக்கோஸ் பொரியல் மீந்துவிட்டால் கடலை மாவு, அரிசி மாவு, வெங்காயம், கறிவேப்பிலை, உப்பு சேர்த்து பக்கோடாவாக செய்யலாம்.

*தோசை மாவு புளித்திருந்தால் சிறிதளவு சாதத்தை மிக்ஸியில் அரைத்து மாவுடன் கரைத்துக் கொள்ளலாம்.

*காராபூந்தியில் காரம் அதிகமானால் மாவுடன் உப்பு சிறிது, எலுமிச்சைச் சாறு, ஒரு தேக்கரண்டி அரிசி மாவு சேர்க்கலாம்.- ச.லெட்சுமி, தென்காசி.

*ரவா தோசைக்கு மாவு கரைக்கும் போது இரண்டு ஸ்பூன் கடலை மாவு சேர்த்து கரைத்து வார்த்தால் தோசை சிவந்து மொறுமொறுப்புடன் இருக்கும்.

*பாகற்காயுடன் உப்பு, வெல்லம், மஞ்சள் தூள், எலுமிச்சைச் சாறு கலந்து பிசைந்து அரை மணி நேரம் ஊறவைத்து பிறகு வறுத்தால் கசப்பே இருக்காது.

*தக்காளி, பூண்டு, உருளைக்கிழங்கு, தேன், ஆலிவ் எண்ணெய், நட்ஸ், காபி தூள், பிரெட், வெங்காயம் இதையெல்லாம் ஃப்ரிட்ஜில் வைக்கக் கூடாது. - எம்.ஏ.நிவேதா, திருச்சி.

*அரிசியை சமையலுக்கு உபயோகிக்கும் போது சிறிதளவு கல் உப்பையும் சேர்த்துக் கலந்து கழுவினால் அரிசியில் உள்ள அழுக்கு நீங்கி விடும்.

*கீரையை சமைக்கும் போது 1 டேபிள் ஸ்பூன் எண்ணெயும் சேர்த்து சமைத்தால் கீரை பச்சை நிறம் மாறாமல் இருக்கும்.

*அவல், ரவா, சேமியா உப்புமா செய்யும்போது தண்ணீரின் அளவை குறைத்து ½ கப் தயிரைக் கடைந்து மோராக்கி அதில் கலந்து வேகவைத்தால் உப்புமாவின் சுவை அதிகரிக்கும்.

*ஆப்பம் மாவினை ஊற்றி அதில் கொஞ்சம் கேரட் துருவலையும், தேங்காய் துருவலையும் மேலே தூவி மூடி வைத்து வெந்ததும் சாப்பிட்டால் கலர்ஃபுல் ஆக இருப்பதுடன் சுவையும் அதிகரிக்கும்.- எஸ்.ராஜகுமாரி, சென்னை.

*மிக்ஸி ஜாரில் மசாலாப் பொருட்களை பொடி செய்தவுடன், எவ்வளவுதான் கழுவினாலும் மசாலா வாசனை போகாது. சிறிதளவு பிரெட்டை ஜாரில் போட்டு பொடி செய்தால் வாசனை அறவே போய் விடும்.

*தோசைக்கு மாவு அரைக்கும் போது இரண்டு உருளைக்கிழங்குகளை தோலை நீக்கி நறுக்கி, சேர்த்து அரைத்து, தோசை வார்த்தால் தோசை பொன்னிறமாய் ஹோட்டல் தோசை போல மிருதுவாக வரும். சுவையாகவும் இருக்கும்.

*பிரஷர் குக்கரை உபயோகப்படுத்தாமல் இருக்கும் போது மூடி வைக்கக் கூடாது.- அ.சித்ரா, காஞ்சிபுரம்.

Related News