ஜாஸ்... பாலே... ஹிப்-ஹாப்...
நன்றி குங்குமம் தோழி
சிங்கப்பூரை கலக்கிய சென்னை டீம்!
27வது ஏசியன் பசிபிக் டான்ஸ் காம்பெடிஷன் சமீபத்தில் சிங்கப்பூரில் நடைபெற்றது. இந்தியா சார்பாக பங்கேற்க சென்னையில் இருந்து ஒரு டீம், புனேவில் இருந்து ஒரு டீம், ரஷ்யன் கல்சுரல் அகாடமியில் இருந்து ஒரு டீம் என மொத்தம் மூன்று டீமாக மாணவர்கள் பங்கேற்றனர். இது தவிர மலேசியா, சிங்கப்பூர், பாங்காக், தாய்லாந்து, கம்போடியா, ஆஸ்திரேலியா, பிலிப்பைன்ஸ் நாடுகளில் இருந்தும் டான்ஸர் டீம் வந்து போட்டியில் பங்கேற்றார்கள்.
இதில் சென்னை கீழ்ப்பாக்கத்தில் இயங்கி வரும் ஸ்பின் டான்ஸ் ஸ்டியோ மூலம் பங்கேற்ற டீம், ஹிப்-ஹாப் நடனத்தில் வென்று 3வது இடத்தைப் பிடித்துள்ளனர். ஏசியன் பசிபிக் டான்ஸ் காம்பெடிஷன் குறித்தும், ஸ்பின் டான்ஸ் ஸ்டுடியோ குறித்தும் தெரிந்துகொள்ள ஸ்பின் டான்ஸ் ஸ்டுடியோ உரிமையாளர் பாலாஜியை அணுகியதில்...
‘‘2011ல் தொடங்கிய டான்ஸ் ஸ்டுடியோ இது. 14 வருடமாக இயங்கி வருகிறது. இங்கு பாலே, ஜாஸ், ஹிப்-ஹாப், காண்டம்ரரி நடனங்களை மாணவர்களுக்கு கற்றுத் தருகிறோம். இந்த நடனங்களை ஆடுவதற்கான பிராப்பர் டெக்னிக்ஸ் சிலருக்குத் தெரியும். சிலருக்குத் தெரியாது. எங்கள் டான்ஸ் ஸ்டுடியோ மூலமாக முறையான டெக்னிக்ஸை பிராப்பராகக் கற்றுத் தருகிறோம். இதில் நாங்கள் கற்றுத் தருவது 10 முதல் 12 வருடத்திற்கான கோர்ஸ்.
மற்ற டான்ஸ் க்ளாஸ் மாதிரி இல்லாமல் ஆஸ்திரேலியன் சிலபஸுக்கு மாணவர்களுக்கு இங்கு பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. வருடத்திற்கு ஒருமுறை ஆஸ்திரேலிய நாட்டில் இருந்து எக்ஸாமினர் வந்து தேர்வுகளை நடத்துவார்கள். தேர்ச்சிப் பெற்ற மாணவர்களுக்கான சான்றிதழ் ஆஸ்திரேலியா நாட்டில் இருந்து வருகிறது.நமது நாட்டில் மாணவர்களுக்கு ஸ்போர்ட்ஸ் கோட்டா இருப்பது மாதிரி, வெளிநாட்டுக் கல்வி நிறுவனங்களைத் தேர்வு செய்து கல்வி பயில விரும்புகிற மாணவர்களுக்கு டான்ஸ், மியூசிக், எக்ஸ்ட்ரா கரிகுலர் ஆக்டிவிட்டீஸுக்கு முக்கியத்துவம் கொடுத்தே, கல்வி நிறுவனங்களில் தேர்வு செய்வார்கள்.
நமது கலாச்சாரம், படிப்பு, பாரம்பரியம் என அதை மட்டுமே சார்ந்து செல்வது. ஆனால், வெளிநாடுகளில் நடனத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து, வேறொரு படிப்பாக கொண்டு செல்வார்கள். விளையாட்டுத் துறை எப்படி ஒலிம்பிக் வரை செல்கிறதோ அதேபோல், நடனத்துக்கு வெளிநாடுகளில் மிகப்பெரிய காம்பெடிஷன்கள் நடைபெறுகிறது. தற்போது இந்தியாவிலும் இத்துறை மிகப் பிரமாண்டமாய் வளர்ந்து வருகிறது. எங்கள் அகாடமி மூலம் மாணவர்கள் நடனத்தில் பெறுகிற சான்றிதழ்கள் கிரேடு மாதிரி அவர்களுக்கான வாய்ப்புகளை இன்னும் கூடுதலாக்கும்.
கடந்த 4 வருடமாக ஏசியன் பசிபிக் டான்ஸ் காம்பெடிஷனுக்கு மாணவர்களை தொடர்ச்சியாக நாங்கள் அழைத்துச் செல்கிறோம். ஏசியன் நாடுகள் அனைத்தும் வந்து போட்டியில் கலந்து கொள்கிறார்கள். தவிர, ஆஸ்திரேலியா, லண்டன் நகரங்களில் இருந்தும் மாணவர்கள் வருகிறார்கள். காமன்வெல்த் சொசைட்டி ஆஃப் டீச்சர்ஸ் ஆஃப் டான்சிங் (CSTD) என்ற ஆஸ்திரேலியன் போர்ட் இந்த நிகழ்ச்சிக்கான ஆர்கனைசராக இருந்து செயல்படுகிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் ஏசியன் நாடுகளில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து, போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு சிங்கப்பூரில் இந்தப் போட்டி நடைபெற்றது.
இந்தப் போட்டிகளில் பங்கேற்கும் மாணவர்கள் அனைவருமே மிகச் சிறப்பாக ஆடுவார்கள். ஸ்டெப்ஸ், டெக்னிக்ஸ், கோ ஆர்டினேஷன், குரூமிங் மற்றும் அவர்கள் அணிகிற காஸ்டியூம்ஸ் பாயிண்டாக எடுக்கப்படும். மைனூட் மிஸ்டேக்ஸ் மதிப்பெண்களே மாணவர்களுக்கு போட்டியில் குறையும். எமது ஸ்பின் டான்ஸ் ஸ்டுடியோ மூலம் சென்ற மாணவர்கள் ஓவரால் பெஸ்ட் டான்ஸர் அவார்டு வாங்கியிருப்பதுடன், சிலர் சில்வர், பிரான்ஸ் மெடல்களையும் பெற்றுள்ளார்கள்.’’
ஸ்டெப்பிங் ஸ்டோன் டூ குட் காலேஜ்
‘‘நான் சர்ச்பார்க் கான்வென்டில் 8ம் வகுப்பு படிக்கிறேன். அப்பா சாஃப்ட்வேர் இஞ்சினியர். அம்மா பிசினஸ் வுமன். கடந்த இரண்டு வருடமாக ஸ்பின் டான்ஸ் ஸ்டுடியோவில் டான்ஸ் கற்று வருகிறேன்.கொரோனா லாக்டவுனில், யு டியூப் பார்த்து ஜிம்னாஸ்டிக் ட்ரை பண்ணுவதைப் பார்த்த அம்மா, என்னை ஸ்பின் டான்ஸ் ஸ்டுடியோவில் சேர்த்தார். கேஷுவலாக நான் ஜிம்னாஸ்டிக் செய்வதைப் பார்த்த எனது மாஸ்டர், பாலே நடனத்திலும் பயிற்சி எடுக்கச் சொன்னார்.
தற்போது ஜிம்னாஸ்டிக், பாலே இரண்டிலுமே பயிற்சியில் இருக்கிறேன். வாரத்தில் இரண்டு நாட்களுக்கு வகுப்புகள் இருக்கும். மற்றபடி காம்பெடிஷன் நேரத்தில் மட்டுமே தினமும் இரண்டு மணி நேரம் பயிற்சி எடுப்போம்.ப்ரீ பிரைமரி, பிரைமரி, அண்ட் கிரேட்-1 தேர்வுக்கு ஒரு செட் ஆஃப் சிலபஸ் மற்றும் கோரியாக்ராஃபி இதில் உண்டு. இப்ப நான் கிரேட்-2ல் பயிற்சியில் இருக்கிறேன். பாலே நடனத்தில் கிரேட் 8 வரை உண்டு. நான் கிரேட் 7 முடித்திருக்கிறேன்.
ஒவ்வொரு 6 மாதத்திற்கு ஒருமுறை எக்ஸாம் நடக்கும். இது ஆஸ்திரேலியா சிஎஸ்டிடி போர்ட் சிலபஸ் என்பதால், எக்ஸாமினர் ஆஸ்திரேலியாவில் இருந்து வருவார்கள். அவர்கள் முன் ஆடும்போது, நமது ஹேண்ட் மூவ்மென்ட், லெக் மூவ்மென்ட் பார்ப்பார்கள். இவற்றைக் க்ளியர் செய்தவர்களுக்கு இன்டர்நேஷனல் சர்டிஃபிகேட் கிடைக்கும். கடந்த முறை எனக்கு ஹானர்ஸ் கிடைத்தது.
நான் 7வது படிக்கும்போதே இன்டர்நேஷனல் காம்பெடிஷனில் பங்கேற்று இருக்கிறேன். சமீபத்தில் சிங்கப்பூரில் நடந்த ஏசியா பசிபிக் டான்ஸ் காம்பெடிஷனில் பங்கேற்றதில், பல்வேறு நாடுகளில் இருந்து டீம்ஸ் பங்கேற்க வந்தார்கள். சென்னையில் இருந்து சென்ற எங்கள் ஸ்பின் டான்ஸ் ஸ்டுடியோ பாலே, ஜாஸ், ஹிப்-ஹாப், இந்தியன் ஸ்டைல் காண்டெம்ரரி என வெரைட்டியாக டான்ஸ் செய்தோம். இதில் நான் பங்கேற்றது அன்டர் 13 பிரிவு.
என்னோட எய்ம் ஓவர்சீஸ்ல இருக்கிற டாப் காலேஜ்ல சேர்ந்து படிக்க வேண்டும் என்பதே. இதற்காகவே, டிரினிட்டி மியூசிக் காலேஜ் மூலம் கீ போர்ட் வாசிக்கவும் கற்று வருகிறேன்.இது எல்லாமே எனக்கு stepping stone to getting into a good college. இதற்கு வெறும் படிப்பு மட்டுமே பத்தாது. என்னை ஆல் ரவுண்டர் எனக் காட்டணும். அதற்கான முயற்சியே இதெல்லாம்.’’
தொகுப்பு: மகேஸ்வரி நாகராஜன்
படங்கள்: ஆ.வின்சென்ட் பால்