தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

அதிகரிக்கும் வெப்பமும் அவதிக்குள்ளாகும் பெண்களும்!

நன்றி குங்குமம் தோழி

பசிபிக் பெருங்கடலில் நிலவும் வானிலைக்கு ‘எல் நினோ’ என்று பெயர். பசிபிக் பெருங்கடலின் மேற்பரப்பு வெப்பநிலை இயல்பை விட அதிகரிப்பது எல் நினோ எனப்படும். இப்படி கடலில் வெப்பநிலை அதிகரிக்கும் போது வெப்ப அலைகள் அதிகமாக வரும். அதிலும் தற்போதைய மிக முக்கியமான பிரச்னையாக உள்ள காலநிலை மாற்றத்தாலும் பூமியின் வெப்பநிலை அதிகமாகிக் கொண்டே வருகிறது.

இதனால் வெப்ப அலைகள் அதிகமாக உருவாகி வருகிறது. இந்த ஆண்டு எல்நினோ ஆண்டாக இருக்கிறது. இந்த கடுமையான வெப்பநிலையில் மக்கள் அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள் என்றாலும் இதிலும் பெண்கள்தான் அதிகமாக பாதிக்கின்றனர். குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் கர்ப்பிணி பெண்கள் இந்த வெப்ப அலையால் அதிகமாக பாதிக்கப்படுவார்கள் என்று குறிப்பிட்டுள்ளனர். இது பற்றிய ஒரு ஆய்வில் அதிக வெப்பத்தால் 2% பேருக்கு கருச்சிதைவு ஏற்படுகிறது. மேலும் 6% பெண்களுக்கு குழந்தை இறந்தோ அல்லது முன்கூட்டியே குறை மாசத்தில் பிறக்கக்கூடிய வாய்ப்புள்ளது. இது ஒரு பக்கம் இருக்க அதிக எடையுடன் குழந்தை 8.40% பேருக்கு பிறக்க வாய்ப்பிருப்பதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதுகுறித்து கடல் சார் ஆராய்ச்சியாளரும் எழுத்தாளருமான நாராயணி சுப்ரமணியன் விளக்கம் அளித்தார்.

‘‘உலகின் மிகப்பெரிய கடலான பசிபிக் பெருங்கடலில் பலத்த காற்று, அவற்றின் திசை மற்றும் வெப்பநிலை போன்ற காரணிகள் ஒட்டுமொத்த உலக வானிலையையே பாதிக்கிறது. காலநிலை மாற்றத்தால் இதே போலதான் அதிகமாகவும், அடிக்கடி வெப்ப அலைகள் வரும் என்கிறது ஆய்வுகள். அதிகரிக்கும் வெப்பமும், காலநிலை மாற்றத்தால் அதிகமாக பாதிக்கப்படுவது யாரென்றால் பெண்கள் தான். வீட்டில் இருக்கும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை எல்லோரையும் கவனித்துக் கொள்கிற இடத்தில்தான் பெண்கள் இருக்கிறார்கள். அவர்கள் அதிகமாக செலவிடும் இடம் எதுவென்று பார்த்தால் அது சமையலறையாகத்தான் இருக்கும்.

சாதாரணமாக மூன்று வேளைக்கான உணவுகளையும் தயாரிக்க அவர்கள் சமையல் அறையில் இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. வெளியே வெயிலின் வெப்பம் அதிகமாக இருக்கும் போது சமையல் அறை என்பது அக்னி மூலை என்பதால் அது மேலும் சூடாக இருக்கும். சமைக்கும் போது வரும் புகை வெளியே செல்ல ஜன்னல் கதவுகள் இல்லாமல் இருந்தால் அந்த சூடான புகை சமையல் அறைக்குள்ளேதான் சுற்றிக் கொண்டு இருக்கும். இதனால் அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள்தான். சமையல் செய்யும் போது வெளியாகும் வெப்பம் மற்றும் புகையினால் குறிப்பாக வெயில் காலத்தில் பெண்கள் அதிகம் பாதிப்பினை சந்திக்கிறார்கள். இதனால் அவர்களின் உடல் நிலை கடுமையாக பாதிக்கப்படும்.

கோடை காலங்களில் நீராதாரங்கள் வற்றி விடும். இதனால் தண்ணீர் பிரச்னை ஏற்படுகிறது. இந்தியாவில் விவசாயக் கூலித்தொழிலாளிகள் பாதிக்கும் மேல் பெண்கள்தான். இந்தச் சூழலில் காலநிலை மாற்றத்தால் ஏற்படும் மின் தட்டுப்பாடு, தண்ணீர் தட்டுப்பாடுகளும் பெண்களையும் பாதிக்கும். இன்றும் வெளி மாநிலங்களில் குறிப்பாக வட இந்தியா மாநிலங்களில் உள்ள கிராமப் பகுதியில் தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. ஒரு குடம் தண்ணீருக்காக பெண்கள் கடும் வெயிலில் காலிகுடங்களுடன் நெடுந்தூரம் நடந்து சென்று தண்ணீர் எடுத்து வருகிறார்கள். குறிப்பாக நீர்த்தட்டுப்பாடு ஏற்படும்போது, பெண்கள் கூடுதலான தொலைவு நடந்து சிரமத்திற்கு உள்ளாகிறார்கள்.

காலநிலை மாற்றத்தால் விவசாய தொழில் செய்து வருபவர்கள் கடுமையாக பாதிப்புக்கு உள்ளாகிறார்கள். பிழைப்பு தேடி ஆண்கள் வெளியூர்களுக்கு செல்லும் நிலை ஏற்படுகிறது. தனியாக குடும்பத்தை பார்க்கும் பொறுப்பு பெண்கள் மீது விழுகிறது. இப்படி மாறும் போது அந்த வீட்டில் இருக்கக்கூடிய பெண் குழந்தைகளின் படிப்பை நிறுத்தி விடுகிறார்கள். இதிலும் ஆண் குழந்தைகளை விட இருமடங்கு பெண் குழந்தைகளே பள்ளியை விட்டு நிறுத்தப்படுகிறார்கள். இந்த கால நிலை மாற்றம் குறித்து அரசு கவனம் எடுத்து திட்டங்களை செயல்படுத்த வேண்டும்’’ என்கிறார் நாராயணி சுப்ரமணியன்.

வெப்பத்தை தவிர்க்க செய்ய வேண்டியவை...

கர்ப்ப காலத்தில் சாதாரணமாகவே நீர் குடித்தால் வாந்தி வரும் என்பதால், பல பெண்கள் நீர் குடிப்பதை தவிர்த்து விடுவார்கள். இதனால் பிரசவிக்கும் ேபாது, பெரும் சிக்கலுக்கு உள்ளாகி, குழந்தையின் உயிருக்கே ஆபத்து ஏற்படும். பனிக்குடத்தில் குழந்தைக்கு தேவையான நீர் இருக்க வேண்டுமென்பதால், கர்ப்பிணிகள் சிரமப்பட்டாவது அடிக்கடி போதிய நீர் குடிக்க வேண்டும், குறிப்பாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் காலத்தில்.

3 - 12 வயதுள்ள குழந்தைகளை, குறிப்பாக காலை 11:00 - மாலை 4:00 மணி வரையில் வெளியில் விளையாட அனுமதிப்பதை கட்டாயம் தவிர்க்க வேண்டும். ஐஸ்கிரீம், கூல்டிரிங்ஸ்களை கொடுப்பதற்கு பதிலாக தயிர் சேர்த்த கம்மங்கூழ், பழச்சாறு, இளநீர், நுங்கு சாப்பிடக் கொடுக்கலாம். வியர்வையால் நம் உடலில் இருந்து தாது உப்புகள் வெளியேறி உடலில் டீஹைட்ரேஷன் ஏற்படும். இதைத் தடுக்க எலுமிச்சை ஜூஸ் தயாரித்து அதில் சர்க்கரை மட்டுமின்றி உப்பு சேர்த்து குடிக்க கொடுக்க வேண்டும். வேர்க்குரு அல்லது அம்மை போன்ற பாதிப்புகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.

தொகுப்பு: மா.வினோத்குமார்

Related News