தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

2 மணி நேரம் செலவிட்டால் மாதம் ரூ.15 ஆயிரம் சம்பாதிக்கலாம்!

நன்றி குங்குமம் தோழி

Advertisement

பெண்கள் படிக்கிறாங்க... வேலைக்கும் போறாங்க... ஆனால், சிலர் திருமணத்திற்குப் பிறகு வேலைக்குப் போவதை நிறுத்திவிடுகிறார்கள். காரணம், குடும்பச்சூழல். வீட்டை விட்டு வெளியே சென்றுதான் வேலைக்குப் போகணும்னு அவசியம் இல்லை. வீட்டில் இருந்தபடியே சம்பாதிக்க முடியும். அதைத்தான் இன்று இல்லத்தரசிகள் பலர் செய்து வருகிறார்கள். அந்த வரிசையில் தஞ்சாவூரை சேர்ந்த கார்த்திகா வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் பிசினஸ் மூலம் தனக்கான ஒரு வருமானத்தை ஏற்படுத்தியுள்ளார்.

‘‘சொந்த ஊர் மதுரை. ஆனால், வளர்ந்தது, படிச்சது, திருமணமாகி செட்டிலானது எல்லாம் தஞ்சாவூரில். நான் பள்ளிப் படிப்பை முடித்த உடனே வீட்டில் திருமணம் பேசி முடிச்சிட்டாங்க. அதனால் என்னுடைய டிகிரியை தொலைதூரக் கல்வி முறையில்தான் படிச்சேன். நானும் சராசரி பெண்களைப் போல் ஒரு இல்லத்தரசியாகத்தான் என் வாழ்க்கையை துவங்கினேன். சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணம் எல்லாம் எழுந்ததே இல்லை. காரணம், என்னுடைய தேவை அனைத்தையும் என் வீட்டில் பார்த்துக்கிட்டாங்க. எனக்கு வேண்டியதை அவங்களே வாங்கியும் கொடுத்திடுவாங்க. அதனால் எனக்கு அப்போது சம்பாதிக்க வேண்டும், நம் கையிலும் காசு இருக்கணும் என்று எல்லாம் தோன்றியதே இல்லை.

என் மகள் வளர்ந்த பிறகுதான் எனக்கு பணத்தின் அவசியம் புரிய ஆரம்பித்தது. அவளுடைய செலவிற்கு என்னிடம் காசு கேட்கும் போது எல்லாம் நான் வீட்டில்தான் கேட்டு வாங்கித் தருவேன். ஆனால், ஒரு கட்டத்திற்கு மேல் அவளின் தேவை எல்லாவற்றுக்கும் நான் அவர்களிடம் போய் கேட்க வேண்டியதாக இருந்தது. சின்னச் சின்ன செலவிற்கு என்னிடம் சம்பாத்தியம் இருந்திருந்தால், நான் என் மகளின் தேவையினை பூர்த்தி செய்ய முடியுமே என்ற எண்ணம் ஏற்பட்டது. ேமலும், நாம் வீட்டில் சும்மா இருக்கிறோமோ என்று எனக்குள் தோன்றியது’’ என்றவர்  ரீசெல்லிங் முறையில் தன் பிசினசை ஆரம்பித்துள்ளார்.

‘‘2020ல் லாக்டவுன் போது, வெளியே கடைக்கு எல்லாம் போக முடியாது. அப்ப வீட்டில் இருந்தபடியே செய்ய ஆரம்பிச்சதுதான் ரீசெல்லிங் பிசினஸ். எஸ்.டி.கே கலெக்‌ஷன்ஸ் என்ற பெயரில் புடவைகளை ரீசெல்லிங் முறையில்தான் விற்பனை செய்ய துவங்கினேன். எனக்கு புடவை ரொம்ப பிடிக்கும். நல்ல டிசைன்களில் புடவைகளை உடுத்த விரும்புவேன். நான் உடுத்திய புடவைகளை என்னுடைய முகநூலில் போஸ்ட் செய்வேன். காரணம், நாம் நன்றாக டிரெஸ்சிங் செய்தால் நமக்குள் ஒரு தன்னம்பிக்கை ஏற்படும் என்பது என்னுடைய நம்பிக்கை. அதைப் பார்த்து பலரும் இந்தப் புடவையை பற்றி கேட்பார்கள். இதையே ஏன் பிசினஸாக செய்யக்கூடாதுன்னு தோன்றியது. அப்படித்தான் ஆரம்பித்தேன். லாக்டவுன் காலத்தில் ரீசெல்லிங் பிசினஸ் எனக்கு நல்ல ஒரு அடையாளத்தினை ஏற்படுத்திக் கொடுத்தது. அதற்கு என்னுடைய முகநூலை ஒரு பிளாட்ஃபார்மாக அமைத்துக் கொண்டேன்.

வீட்டில் இருந்தபடி பிசினஸ் செய்வதுதான் ரீசெல்லிங் முறை. இதற்கு நாம் எந்த ஒரு முதலீடும் செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஒருவரின் பொருளை நாம் மார்க்கெட்டிங் செய்து விற்றுத் தந்தால், அதற்கு ஒரு குறிப்பிட்ட தொகை கமிஷனாக கிடைக்கும். அப்படித்தான் நான் புடவைகளை ரீசெல்லிங் செய்து வந்தேன். புடவை விற்பனை செய்பவர்கள் நமக்கு அந்தப் புடவைகளின் புகைப்படம் மற்றும் விலைப் பட்டியல் என அனைத்தும் கொடுத்திடுவார். நாம் அதை தெரிந்தவர்கள், நண்பர்கள் மத்தியில் இணையம் மூலம் தெரிவிப்போம். அதில் விற்பனையாகும் உடைக்கான கமிஷன் நமக்கு வரும்.

அதன் பிறகு இதையே கிளவுட் ஷாப்பிங் முறையில் செய்ய திட்டமிட்டேன். பொருட்களை தயாரிக்கும் இடத்தில் மொத்த விலைக்கு வாங்கி அதை விற்பனை செய்தேன். இந்தப் பொருட்களை வைக்க வீட்டிலேயே ஒரு சிறிய இடத்தை அமைத்தால் போதும். கடை திறக்க வேண்டும் என்ற அவசியமில்லை. அனைத்தும் ஆன்லைன் என்பதால், நமக்கான ரெகுலர் வாடிக்கையாளர்கள் இருப்பார்கள்’’ என்றவர், புடவை மட்டுமில்லாமல் பித்தளை பூஜைப் பொருட்களையும் விற்பனை ெசய்து வருகிறார்.

‘‘சில சமயம் நம் வாழ்வில் மேஜிக் நடக்கும். அப்படித்தான் என் வாழ்க்கையிலும் நடந்தது. எனக்கு கடவுள் பக்தியுண்டு. குறிப்பாக முருகப்பெருமான் மீது தனி பக்தி. சாமிக்கு செய்ய வேண்டியவற்றை பார்த்து பார்த்து செய்வேன். அப்போது என் வீட்டு கிரஹப்பிரவேசத்திற்கு என் நண்பர் வேல் அமைப்பில் விளக்கு ஒன்றை அன்பளிப்பா கொடுத்தார். அதை நான் என் முகநூலில் பதிவிட்டேன். பலரும் பார்த்து பார்க்க அழகாக இருப்பதாகவும், அதை போல் கிடைக்குமா என்று கேட்டார்கள். நானும் என் நண்பரின் உதவியோடு, அதை தயாரிக்கும் இடத்திற்கு நேரடியா சென்று மொத்த விலைக்கு வாங்கி விற்பனை செய்தேன்.

அதன் பிறகு ‘ஸ்கந்தன் குடில்’ என்ற பெயரில் வித்தியாசமான பூஜைப் பொருட்களை வாங்கி விற்பனை செய்து வருகிறேன். வேல் விளக்கு, குபேர விளக்கு, முருகன் சம்பந்தப்பட்ட எல்லா பூஜைப் பொருட்கள், வராகி சிலைகள், விஷ்ணு சிலைகள் என அனைத்தும் குறைஞ்ச விலையில் நல்ல தரமான பித்தளையில் என்னிடம் உள்ளது’’ என்றவர், இது போன்ற பிசினஸ் மூலம் இல்லத்தரசிகள் வீட்டில் இருந்தபடியே சம்பாதிக்க முடியும் என்று ஆலோசனை கூறினார்.

‘‘என்னைப் பொறுத்தவரை ஒரு பொருளை விற்கும் போது நியாயமான விலையில் தரமானதாக கொடுக்க வேண்டும். புடவை மற்றும் பூஜைப் பொருட்கள் வரை அனைத்தும் பார்த்து பார்த்துதான் வாங்குவேன். அதிக லாபமில்லாமல், தரமான பொருட்களை கொடுத்தால் கண்டிப்பாக நம்மைத் தேடி வாடிக்கையாளர்கள் வருவாங்க. இதுதான் என்னுடைய பாலிசி. தினமும் இரண்டு மணி நேரம் ஒதுக்கினா எந்த முதலீடும் இல்லாமல் தாராளமா மாசம் பத்தாயிரம் ரூபாய் முதல் 15 ஆயிரம் வரை சம்பாதிக்கலாம்.

முதலில் என்னால் செய்ய முடியுமான்னு எங்க வீட்டில் யோசித்தாங்க. இப்போது அவங்க எனக்கு முழு ஆதரவா இருக்காங்க. பிசினஸ் என்று வந்துவிட்டால் அதில் ஏற்றம் இறக்கம் இருக்கும். சிலருக்கு ஆன்லைனில் பொருட்களை வாங்க பிடிக்காது. ஆனால், இன்று பலருக்கு நேரில் சென்று பொருட்களை வாங்க நேரமில்லை. அவர்களுக்கு தரமான ெபாருட்களை கொடுத்தால், கண்டிப்பாக திரும்பத் திரும்ப உங்களை நாடி வருவாங்க.

ஆரம்பிக்கும் போது ரீசெல்லிங் முறையினை கடைபிடிக்கலாம். அதன் பிறகு சிறிய அளவு முதலீடு செய்து பிசினசை விரிவுபடுத்தலாம். அதற்கு உங்க உழைப்பும் அவசியம். நல்ல முறையில் செய்தால், நல்ல லாபம் பார்க்கலாம்’’ என்றார் கார்த்திகா.

தொகுப்பு: திலகவதி

Advertisement

Related News