தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

காஸ் அடுப்பை உபயோகிக்கும் முறை!

நன்றி குங்குமம் தோழி

*சமையல் செய்யும் போது நைலான் ஆடைகளை அணியக்கூடாது. பருத்தி ஆடைகளையே அணிய வேண்டும். காட்டன் ஏப்ரனை உபயோகிப்பது இன்னும் நல்லது. உடைகள் கலையாமல் பாதுகாக்க இது உதவும்.

*காஸ் அடுப்பை ஏற்றுவதற்கு முதலில் தீக்குச்சியை பற்ற வைத்தப் பிறகே அடுப்புக்குமிழைத் திறக்க வேண்டும். லைட்டரை உபயோகிக்கும் போது முதலிலேயே அடுப்புக்குமிழைத் திறந்து விடுவதால் காஸ் சிறிதளவேனும் வெளியேறிவிடுகிறது. லைட்டரைத் தவிர்ப்பது நல்லது.

*இரண்டு வருடங்களுக்கு ஒருமுறையாவது கண்டிப்பாக ரப்பர் குழாயை மாற்ற வேண்டும். அதில் ஏற்படும் விரிசல்கள் கண்ணுக்குத் தெரியாமல் மறைந்திருக்கும். ISI முத்திரைப்

பதித்த ரப்பர் குழாயை வாங்கி மாற்ற வேண்டும்.

*சிலிண்டர் எப்போதும் நேராக இருக்க வேண்டும். காலி சிலிண்டராக இருந்தாலும் கூட அதை படுக்க வைக்கக் கூடாது.

*குழந்தைகளை சமையலறையில் விளையாட அனுமதிக்கக் கூடாது. குறும்புக்காரக் குழந்தைகள் காஸ் இணைப்புகளுடன் விளையாடுவது எவ்வளவு ஆபத்தான விஷயம் என்பது நமக்கே தெரியும்.

*சூடானப் பாத்திரங்களை காஸ் அடுப்பில் இருந்து இறக்கி வைக்க இடுக்கியை உபயோகிக்க வேண்டும். நம்முடைய உடையையோ, சேலையையோ உபயோகிக்கக் கூடாது.

*சமையல் பாத்திரங்களை அடுப்பிலேயே விட்டு விட்டு மற்ற வேலைகளை கவனிக்கப் போகக்கூடாது. அதிலிருக்கும் பொருட்கள் பொங்கி வழிந்து அடுப்பை அணைத்து கேஸ் கசியும் அபாயம் உள்ளது.

*மாற்றுச் சிலிண்டர் இணைப்பு கொடுக்கும்போது பூஜை விளக்குகள், ஊதுபத்தி அனைத்தையும் அணைக்கவும். மின்சார இணைப்புகளை இயக்காதே.மேற்கூறியவற்றைக் கடைபிடித்து வந்தால் காஸ் அடுப்பினால் வரும் ஆபத்துகளில் இருந்து நம்மைக் காக்க இந்த ஆலோசனைகள் நமக்கு பெரிதும் உதவும்.

தொகுப்பு: பி.தீபா, கிருஷ்ணகிரி.