தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

அடிக்கடி சுத்தப்படுத்த வேண்டிய சில விஷயங்கள்!

நன்றி குங்குமம் தோழி பொதுவாக நம் வீடுகளில் தரை, பாத்திரங்கள், துணிகள் முதலியவற்றை தினசரி சுத்தம் செய்கிறோம். ஆனால், நம் கண்களுக்கு தெரியாமல், உணரவும் முடியாமல் கிருமிகள் அதிகம் வாழும் சில விஷயங்கள் உள்ளன. அவற்றை கவனத்தில் கொண்டு வருவதுதான் இந்தக் குறிப்புகள். *கால் மிதியடிகள், இவை பல கிருமிகளை தன் வசம் வைத்துக்...

நன்றி குங்குமம் தோழி

பொதுவாக நம் வீடுகளில் தரை, பாத்திரங்கள், துணிகள் முதலியவற்றை தினசரி சுத்தம் செய்கிறோம். ஆனால், நம் கண்களுக்கு தெரியாமல், உணரவும் முடியாமல் கிருமிகள் அதிகம் வாழும் சில விஷயங்கள் உள்ளன. அவற்றை கவனத்தில் கொண்டு வருவதுதான் இந்தக் குறிப்புகள்.

*கால் மிதியடிகள், இவை பல கிருமிகளை தன் வசம் வைத்துக் கொண்டு பல நோய்களை பரப்பி வருகின்றன. எனவே, அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டியவைகளில் முதலிடம் பெறுகிறது.

*கதவுகளின் கைப்பிடிகள், குறிப்பாக கழிவறைக் கதவுகளில் உள்ள கைப்பிடிகள், கிருமிகளின் சொர்க்கபுரியாக இருக்கும். எனவே, பீரோ, ஃபிரிட்ஜ் அறைக் கதவுகளின் கைப்பிடிகளை அவ்வப்பொழுது சுத்தப்படுத்த வேண்டியது அவசியமாகும்.

*வீட்டில் அனைவரும் பயன்படுத்தும் பொருள் டிவி ரிமோட். பல வீடுகளிலும் குழந்தைகள் ரிமோட்டை எடுத்து வாயில் வைத்து விளையாடும் பழக்கம் உள்ளது. எனவே, அதனை உலர்ந்த துணியை கொண்டு அடிக்கடி சுத்தம் செய்தால் குழந்தைகளை பல நோய்களிலிருந்து காக்கலாம்.

*வீட்டை சுத்தப்படுத்தும் மாப்- இதனை பயன்படுத்தியதும், அப்படியே உலர்த்தாமல் சோப்புத் தண்ணீரில் துவைத்து சுத்தமான நீரில் அலசி காய வைக்க வேண்டும்.

*வீட்டில் குளிக்க பயன்படுத்தும் பக்கெட் மற்றும் ஜக்குகளை அடிக்கடி நன்கு தேய்த்து கழுவி சூரிய வௌிச்சத்தில் காயவைப்பது மிகவும் அவசியமாகும்.

தொகுப்பு: லட்சுமி வாசன், சென்னை.

 

Related News