தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வீட்டுக் குறிப்புகள் - வாசகர் பகுதி

Advertisement

நன்றி குங்குமம் தோழி

* கியாஸ் அடுப்பு பற்றவைக்கும் லைட்டரை அடிக்கடி க்ளீன் செய்ய நாம் காது குடைய உபயோகிக்கும் பட்ஸை விட்டு துடைக்கலாம். அடைப்பு நீங்கி லைட்டர் நன்கு எரியும்.

* ஊதுபத்தி காலியானதும் அந்த அட்டைப் பெட்டிகளையும், குளிக்கும் சோப்பின் ரேப்பர்களையும் துணி வைக்கும் பீேராவில் வைத்தால் வாசனையாக இருக்கும்.

* வாஷ்பேசின், பாத்ரூம், டாய்லெட் நீர் வடியும் ஜல்லடைகளிலும், அந்துருண்டைகளை போட்டு வைத்தால், பாச்சை, குட்டிக்கரப்பான் பூச்சிகள், பூரான் இவை வராமலிருக்கும்.

* வயதானவர்களுக்கு ஐந்தாறு மாத்திரைகள் கொடுக்க வேண்டியிருந்தால் கையிலெடுத்துக் கொடுக்காமல், அதற்காகவே ஒரு சிறிய கிண்ணம் வைத்து, அதில் போட்டுக் கொடுத்தால் கீழே விழாமல், தேடாமல், ஒவ்வொன்றாக எடுத்து விழுங்க சௌகர்யமாக இருக்கும்.

* காலி ஷாம்பூ பாக்கெட் டுகளை குப்பையில் போடாமல் ஏழெட்டு சேர்த்து வைத்து கட் பண்ணி தண்ணியில் போட்டு அதோடு மிதியடிகளை போட்டு ஊறவைத்து துவைத்தால் வாசனையாக இருக்கும்.

* புத்தகங்கள் வைக்கும் அலமாரியில் ஒவ்வொரு தட்டிலும் ஓரிரு வசம்புத் துண்டுகளைப் போட்டு வைத்தால் பூச்சிகள் வராது. புத்தகங்கள் செல்லரிக்காமல் இருக்கும்.

* கற்பூர டப்பாவில் சில குறு மிளகுகளை போட்டு வைத்தால் கற்பூரம் நீத்துப் போகாமல் இருக்கும்.

* குழந்தைகளுக்கு சளி பிடித்தால் 4 கற்பூரவல்லி இலைகளை கொதிக்க வைத்து, வடிகட்டி, சர்க்கரை கலந்து கொடுத்தால் உடனடி நிவாரணம் கிடைக்கும்.

* விளக்குகளில் மஞ்சள், சந்தனம் பொட்டு ஒரே சீராக இருக்க, மஞ்சளை சிறிது நீர் விட்டுக் குழைத்து, காது குடையும் பட்ஸில் தோய்த்து பொட்டு வைக்கலாம்.

* தேங்காய் துருவிய கொட்டாங்கச்சியின் உள், வெளிப் பக்கங்களை சுரண்டி கழுவி அதற்குள் அகல் விளக்கேற்றி வாசலில் அல்லது உள் வீட்டில் வைத்தால் காற்றில் அணையாது.

* செம்பருத்தி பூக்கள் அல்லது சில இலைகளை தண்ணீரில் கொதிக்க வைத்து ஆறிய பின் கசக்கி தலையில் தேய்த்துக் குளித்தால் முடி பளபளக்கும். இது இயற்கையான ஷாம்பூவும், கண்டிஷனரும் ஆகும்.

தொகுப்பு: ேக.சாயிநாதன், சென்னை.

Advertisement