தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

தால் ஏரியைச் சுத்தம் செய்யும் வெளிநாட்டுப் பெண்!

இருபத்தைந்து வருடங்களுக்கு முன்பு ஒரு சுற்றுலாப் பயணியாக காஷ்மீருக்கு வந்திருந்தார், எல்லிஸ். அவருக்கு காஷ்மீரின் பள்ளத்தாக்குகளும், ஏரிகளும், ரம்மியமான சூழலும் மிகவும் பிடித்துப்போனது. அதற்குப் பிறகு சொந்த நாடான நெதர்லாந்துக்குச் செல்வதும், காஷ்மீருக்குத் திரும்பி வருவதுமாக அவரது நாட்கள் சென்றன. இப்படி காஷ்மீருக்கு வரும்போது எல்லாம் தவறாமல் தால் ஏரிக்குச் செல்வது எல்லிஸின் வழக்கம். அதீதமான சுற்றுலாப் பயணிகளின் வருகையால் தால் ஏரி மாசடைவதைக் கவனித்தார் எல்லிஸ். ஐந்து வருடங்களுக்கு முன்பு காஷ்மீரில் நிரந்தரமாக தங்க ஆரம்பித்தார். அன்றிலிருந்து தன்னார்வத்துடன் முன்வந்து தால் ஏரியைச் சுத்தம் செய்யத் தொடங்கினார். ஏரியைச் சுற்றியிருக்கும் காலியான தண்ணீர் பாட்டில்கள், குப்பைகளை அகற்றுவார், இதை இடைவிடாமல் ஐந்து வருடங்களாக தொடர்ந்து செய்து வருகிறார் எல்லிஸ்.

வீட்டில் தயாரிக்கப்பட்ட லம்போர்கினி கார்!

இந்தியாவில் ‘லம்போர்கினி’ காரின் ஆரம்ப விலையே நான்கு கோடிகளிலிருந்துதான் ஆரம்பிக்கிறது. இந்நிலையில் வெறும் 1.5 லட்ச ரூபாய் செலவில் அச்சு அசல் லம்போர்கினியைப் போல ஒரு காரை உருவாக்கி அசத்தியிருக்கிறார் பிபின் சாக்கோ. கேரளாவைச் சேர்ந்த இந்த கார் காதலருக்கு நாலாப்பக்கமிருந்தும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. பழைய ‘ஆல்டோ’ காரின் உதிரிப்பாகங்கள், என்ஜின், வேண்டாம் என்று குப்பையில் வீசப்பட்ட இரும்புப் பொருட்கள், மரப்பொருட்கள் என மலிவான விலையில் கிடைத்த பொருட்களை வைத்து, வீட்டிலிருந்தே ‘ஹோம்மேட் லம்போர்கினி’யை வடிவமைத்திருக்கிறார் பிபின். அசல் லம்போர்கினியைப் போல வேகம், சொகுசு, ஆடம்பரமான உள்கட்டமைப்பு இல்லையென்றாலும், வெளித் தோற்றத்தில் அசலான லம்போர்கினி கார்களுக்கு சவால் விடுகிறது பிபின் உருவாக்கிய ஹோம்மேட் லம்போர்கினி.

பச்சை அணுகுண்டு!

பு துப்புது கண்டுபிடிப்புகளுக்குப் பெயர் போன, ஷியாம் சௌராஷ்யா என்பவர்தான் பச்சை அணுகுண்டைக் கண்டுபிடித்திருக்கிறார். இந்தப் பச்சை அணுகுண்டை உருவாக்க 1.25 லட்ச ரூபாய் செலவாகியிருக்கிறது. பைபர் மற்றும் மெட்டலால் தயாரிக்கப்பட்டிருக்கும் பச்சை அணுகுண்டை இணையம் மூலமாகவும் இயக்க முடியும். இதற்குள் நூற்றுக்கும் மேலான தாவர வகைகளின் ஒரு கோடிக்கும் அதிகமான பயோ- நியூட்ரிஷன் விதைகளை வைக்க முடியும். விமானத்திலிருந்து வறண்டு போன பகுதிகளின் மீது பச்சை அணுகுண்டை வீசினால் போதும். அணுகுண்டு பூமியில் விழுவதற்கு முன்பே அதிலுள்ள ஒரு கோடி விதைகளும் பரவலாக நிலத்தில் விழும். ஒரு சில நிமிடங்களிலேயே கோடி விதைகளையும் விதைக்கும் வேலை முடியும். கேப்சூல் வடிவிலான அந்த விதைகள் விரைவிலேயே வளர்ந்துவிடும் தன்மை கொண்டது. சில மாதங்களிலேயே பசுமையான ஒரு காடாக மாறிவிடும்.

உலகின் விலையுயர்ந்த ஹேண்ட்பேக்!

பிரிட்டிஷ் -பிரெஞ்ச் நடிகையான ஜேன் பிர்கினுக்காக, 1984-ம் வருடம் பிரத்யேகமாக உருவாக்கப்பட்டது இந்த ஹேண்ட்பேக். ‘ஹெர்ம்ஸ்’ பிராண்டின் தயாரிப்பு இது. பேக்கில் இடமில்லாமல் பொருட்களை அடைத்து வைத்திருந்தார் ஜேன். இதைப் பார்த்த டுமாஸ், நிறைய பொருட்களை வைக்கும் அளவுக்கு ஒரு ஹேண்ட்பேக்கை உருவாக்கித் தருவதாக ஜேனிடம் சொல்லியதோடு, தயாரிக்கப்போகும் பேக்கை ஓவியமாகவும் வரைந்து காட்டியிருக்கிறார். ஆனால், அந்த ஹேண்ட்பேக்கிற்கு ‘பிர்கின்’ என்று உங்களின் பெயரையே வைக்கப்போகிறேன் என்று டுமாஸ் சொல்ல, அதற்கு அவர் ஒப்புதல் தர, அடுத்த சில மாதங்களில் முதல் ‘பிர்கின்’ ஹேண்ட்பேக் உருவாக்கப்பட்டு, ஜேன் பிர்கினுக்கு வழங்கப்பட்டது. அந்த முதல் ‘பிர்கின்’ ஹேண்ட்பேக்தான் இப்போது 86 கோடி ரூபாய்க்கு ஏலம் போயிருக்கிறது.

ஒரு வருடம் முன்பே ரிசர்வ் செய்யப்படும் படம்!

பிரபல ஹாலிவுட் இயக்குனர் கிறிஸ்டோபர் நோலன் இயக்கி வரும் ‘த ஒடிஸி’ என்ற ஆங்கிலப்படம், அடுத்த வருடம் ஜூலை மாதத்தில் வெளியாகவிருக்கிறது. ஆனால், இப்போதே ஐமேக்ஸ் 70 mm திரையரங்குகளில் முன்பதிவு ஆரம்பித்து, அனைத்து டிக்கெட்டுகளும் விற்றுவிட்டன. இத்தனைக்கும் படத்தின் டிரைலர் கூட வெளியாகவில்லை. சினிமா வரலாற்றில் ஒரு படத்துக்கான முன்பதிவு ஒரு வருடத்துக்கு முன்பு ஆரம்பிப்பது இதுவே முதல்முறை.