தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

உடைகள் பராமரிப்பு!

நன்றி குங்குமம் தோழி

அன்றாட வாழ்வில் உடைகளின் பராமரிப்பு என்பது அத்தியாவசியமான ஒன்றாகும். நம் உடைகளை தூய்மையானதாகவும், விரைவில் கிழிந்து போகாமலும் பராமரிக்க சில வழிமுறைகளை பார்ப்போம்...

*ஈரத்துணிகளை காயவைக்க அலுமினியத்தால் ஆன கேங்கர்களையே பயன்படுத்த வேண்டும். மரத்தால் ஆன கேங்கர்கள் துணிகளின் மேல் கரையை ஏற்படுத்திவிடும்.

*உடைகளை உப்பு கலந்த நீரில் நனைத்து பின்னர் துவைத்தால் சாயம் போகாது. வண்ண உடைகளை வெயிலில் உலர்த்தக் கூடாது.

*துணியில் நீலம் சீராக பற்ற உப்பு கலந்த பிறகு துணியை அதில் நனைக்கவும். சோப்புக் கட்டியை நன்கு சீவி அதனை சோப்புத் தூளுக்கு பதிலாக உபயோகிக்கலாம்.

*புடவைகளில் எண்ணெய் கறை படிந்துள்ள இடத்தில் டால்கம் பவுடரை பூசி மடித்து ஒரு வாரம் வரை அப்படியே வைத்திருந்து பிறகு பவுடரை தட்டி விடலாம். எண்ணெய் கறை நீங்கிவிடும்.

*வியர்வை துணிகளை உடனுக்குடன் துவைத்து குளிர்ந்த நீரில் நனைத்து விட்டால் மஞ்சள் கறை ஏற்படாது.

*உல்லன் துணிகளை வெதுவெதுப்பான தண்ணீரில் சோப்பு பவுடரைக் கரைத்து மூன்று நிமிடம் ஊற வைத்து பிறகு கசக்காமல், எந்த இடத்தையும் தேய்க்காமலும் பிழியாமலும், அப்படியே தொங்கவிட்டு தண்ணீர் வடிந்து தானாகவே காயும்படி விட்டு விட வேண்டும்.

*அடர்நிற உடைகளை கஞ்சி ேபாடும் போது உடைகளை திரும்பி உட்பக்கம் வெளியே வருமாறு போட்டால் வெளிப்புறத்தில் கஞ்சி வெள்ளையாக தெரியாது.

*உடைகளின் உட்புறத்தில் ஒரு பகுதியை மட்டும் நனைத்து அதன் மேல் ஒரு உலர்ந்த வெள்ளைத் துணியை வைத்து தேய்த்துப் பார்த்தால் உடை சாயம் போகுமா? இல்லையா என்பது தெரிந்துவிடும்.

- ச.லெட்சுமி, தென்காசி.