தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கேக் சொல்லும் ராமாயண, மகாபாரத கதைகள்!

Advertisement

நன்றி குங்குமம் தோழி

‘காளிங்கன்’ எனும் நாகத்தினை அடக்கி காளிங்க நர்த்தனம் புரிந்த கிருஷ்ணனின் லீலையையும், திரௌபதிக்கு கௌரவர்களால் நிகழ்ந்த அவமானத்தை கிருஷ்ணன் முடிவில்லாது வந்துகொண்டே இருக்கும் சேலையினைக் கொடுத்து காப்பாற்றிய லீலையையும் இதுவரை நாம் கதைகளாக, காணொளிகளாகக் கேட்டும், பார்த்தும் இருக்கிறோம். ஆனால், அதனை பேக்கரி வகை இனிப்பு தின்பண்டங்களில் பார்த்திருக்கிறோமா? அதுவும், வெறும் லட்டு, மைசூர்பா, மிக்சர் என்று இல்லாமல் ‘தீபாவளி ஹாம்பரில்’ குக்கீஸ், டெசர்ட்ஸ், கேக் என புதுமைகளை சேர்த்தது மட்டுமில்லாமல், அதில் நம் இந்திய இதிகாச கதைகளான மகாபாரதம், ராமாயணம் என்று இனிப்புகளின் வழியாக கதைகளை சொல்லியும் நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தி இருக்கிறார், சென்னை, அசோக் நகரை சேர்ந்த கார்த்திகா சரவந்தி என்கிற கேக் தயாரிப்பாளர்.

‘பேக் மேன் பிகின்ஸ்’ எனும் பெயரில் புதிய மற்றும் டிரெண்டிங் பேக்கரி பண்டங்களை தயாரிப்பது மட்டுமில்லாமல், பேக்கிங் பயிற்சி வகுப்புகளும் எடுத்து வரும் கார்த்திகா, தனது பேக்கிங்

பயணத்தை ஓர் அழகிய மாலை வேளையில் நம்முடன் பகிர ஆரம்பித்தார்.‘‘பள்ளி, கல்லூரி படிப்பு எல்லாம் சென்னையில்தான். 2011ல் பொறியியல் முடித்துவிட்டு பெங்களூருவில் ஐ.டி நிறுவனம் ஒன்றில் வேலை கிடைத்தது. அங்கே நான் பணிபுரிய சென்றபோது புதிய நகரம், புதிய மனிதர்கள் என்பதால் பொழுதுபோக்கிற்காக ஏதேனும் ஒன்றை கற்றுக்கொள்ளலாம் என்றுதான் பேக்கிங் பயிற்சிக்கு சென்றேன். அதன் பிறகு வார இறுதி நாட்களில் வீட்டிற்கு வரும் போது எல்லாம் நான் கற்றதை செய்து பார்ப்பேன்.

கேக், பிரவுனி, குக்கீஸ் என ஒவ்வொன்றாக செய்து பார்த்தேன். அதன் சுவை நன்றாக இருந்ததால் என் நண்பர்கள், உறவினர்கள், தெரிந்தவர்கள், உடன் பணிபுரிபவர்கள் எனக் கொஞ்சம் கொஞ்சமாக எனக்கு ஆர்டர்கள் வர ஆரம்பித்தன. வார இறுதிகளில் மட்டும் சென்னைக்கு வந்து ஆர்டர்களை எடுத்து செய்து முடித்துக் கொடுத்துவிட்டு, பின் திரும்பவும் பெங்களூருக்கு செல்வேன். இப்படி ஒரு வருடம் கழிந்தன” என்றவர், அவரின் வருமானத்திலேயே பேக்கரி குறித்து மேலும் சில பயிற்சிகள் பெங்களூரிலேயே கற்றுக் கொண்டார்.

‘‘ஒரு கட்டத்தில் எனக்கு ஐ.டி. கம்பெனியில் நான் வாங்கிய சம்பளத்திற்கு நிகராக இந்தத் தொழிலில் சம்பாதிக்க ஆரம்பித்தேன். மேலும் இத்துறையில் அதிக ஆர்வமும் இருந்ததால் தைரியமாக இதனையே நம் வாழ்நாள் தொழிலாக எடுத்துக் கொள்ளலாம் என நினைத்து ஐ.டி. வேலையை 2012ல் விட்டேன். பேக்கரி குறித்து முறையாக பயிற்சி பெற நினைத்தேன். ஆனால், அதற்கான பயிற்சிகள் இந்தியாவில் இல்லை. லண்டனுக்கு சென்று அங்கு ஒரு வருடம் பயிற்சியினை எடுத்துக் ெகாண்டேன்.

லண்டனில் கேக், குக்கீஸ், மாடர்ன் டெசர்ட் என பலவற்றை கற்றுக்கொண்டேன். அதன் பிறகு இந்தியாவில் ஒரு ஆண்டு சென்னையில் உள்ள பிரபல நட்சத்திர ஓட்டலில் வேலை பார்த்தேன். அதே சமயம் வீட்டில் இருந்தபடி என்னுடைய பேக்கிங்கும் செய்து வந்தேன். 2016ல் பேக்கிங்கிற்கான பயிற்சி வகுப்புகளும் எடுக்க ஆரம்பித்தேன். கோவிட் காலத்தில் ஆன்லைனில் பயிற்சிகள் அளிக்க தொடங்கினேன். இதுவரை நேரடி மற்றும் ஆன்லைன் வகுப்புகள் மூலமாக 3500க்கும் அதிகமான பயிற்சியாளர்களை உருவாக்கி இருக்கிறேன்” என்றவர், இன்றும் ஒவ்வொரு ஆண்டும் வெவ்வேறு நாடுகளை சேர்ந்த பேக்கரி செஃப்களிடம் பயிற்சி எடுத்துக் கொண்டு தன் திறமையினை வளர்த்து வருகிறார்.

‘‘என்னிடம் அனைத்து வயதினரும் பேக்கரி பயிற்சி எடுப்பவர்கள். 10 வயது முதல் 65 வயது வரை ஆண், பெண் என பல ஊர்களில் இருந்தும் கற்றுக்கொள்கிறார்கள். பிறந்தநாள், திருமண நாள் போன்ற எல்லாவிதமான விசேஷங்களுக்கும் அதற்கேற்ற தீமில் கஸ்டம் கேக்ஸ் செய்து கொடுக்கிறோம். இது மட்டுமில்லாமல் விதவிதமான டெசர்ட்களையும் செய்கிறோம். திருமணம் போன்ற நிகழ்ச்சிகளுக்கு தனிப்பட்ட ‘டெசர்ட் கவுன்டர்களையும்’ அமைத்து தருகிறோம். கூடவே, மெனு கன்சல்டன்ட் ஆகவும் இருக்கிறேன். அதாவது, கஃபே, ரெஸ்டாரன்ட் போன்ற உணவுக் கூடங்களில் அவர்களுக்கு அந்த இடத்திற்குத் தேவையான உணவுகளை வடிவமைத்து, அதனை அங்கிருக்கும் சமையல் நிபுணருக்கு சொல்லிக் கொடுக்கிறேன்.

இந்த வருட தீபாவளி ஸ்பெஷல் எங்களின் ஹாம்பர்கள். ஒவ்வொரு வருடமும் ஹாம்பர்கள் புதுமையாக இருக்கணும்னு புதுவித முயற்சிகளை செய்திருக்கிறேன். அதில் முதலில் ‘அறுசுவை தீபாவளி’, அறுசுவைகளில் இனிப்புகளை கொடுத்தேன். அடுத்த வருடம் ‘அஞ்சறைப்பெட்டி தீபாவளி’. அதில் நம் வீட்டில் அஞ்சறைப்பெட்டியில் உள்ள மஞ்சள், மிளகு போன்ற பொருட்களை வைத்து தனித்துவமான டெசர்ட்களை செய்தேன். கடந்த வருடம் ராமாயணம் கதையை ஒரு டெசர்ட் பாக்ஸில் சொல்ல வேண்டும் என நினைத்து மொத்தம் எட்டு டெசர்ட்கள் செய்தோம். அதன் வழியாக ராமாயணம் தெரியாதவர் கூட எளிதாய் புரிந்துகொள்ள முடியும்.

அந்த வரிசையில் இந்த வருடம் மகாபாரதத்தில் வரும் கிருஷ்ணனின் லீலைகளில் எட்டு லீலைகளை எடுத்து எட்டு டெசர்ட்களாக செய்திருக்கிறோம். உதாரணமாக, கோவர்த்தன மலையை தூக்கி நிறுத்தி தன் பிருந்தாவன மக்களைக் காப்பார். அதனை வெளிப்படுத்தும் விதமாக குட்டி மலையை செய்து, அதன் மேல் சிறு புல்லாங்குழலும் வைத்திருக்கிறோம்” என்றவர் தனக்கு வரும் எதிர்மறை விமர்சனங்களுக்கு துவண்டு போகாமல் எதையும் நேர்முறையோடு அணுகுவதாக கூறினார்.

‘‘ஒரு தொழிலில் ஈடுபடும் போது பல வித விமர்சனங்கள் வரத்தான் செய்யும். அதை மனதில் கொண்டால் முன்னேற முடியாது. என்னுடைய திறமையை வெளிப்படுத்த 2019ல் லண்டனில் நடந்த ‘உலகளாவிய பேக்கிங் போட்டியில்’ கலந்து கொண்டு வெண்கலப் பதக்கம் வென்றேன். எதிர்கால லட்சியம் நிறைய பணம் ஈட்டுவது, ரெஸ்டாரன்ட் தொடங்க வேண்டும் என்றெல்லாம் கிடையாது. என்னுடைய பேக்கிங் தொழிலில் 100% உழைப்பையும், கவனத்தையும் கொடுக்க வேண்டும். அவ்வளவுதான். அதனை

நான் நடைமுறைப்படுத்திக்கொண்டு வருகிறேன்” என்று புன்னகை பொங்க சொல்கிறார் கார்த்திகா.

தொகுப்பு: நந்தினி சேகர்

Advertisement

Related News