தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

பாரம்பரிய அரிசிகளில் பிஸ்கெட்!

நன்றி குங்குமம் தோழி

குழந்தைகளுக்கு இன்னிக்கு என்ன லஞ்ச் பாக்சில் கட்டிக் கொடுக்கலாம், ஸ்நாக்ஸ் என்ன கொடுப்பது, காலை சிற்றுண்டிக்கு என்ன செய்யலாம்..?

இப்படி தினம் தினம் யோசிப்பதே அம்மாக்களுக்கு ஒவ்வொரு நாளும் சவால்தான். அதே சமயம் கடையில் விற்கப்படும் பிஸ்கெட் மற்றும் கேக் போன்ற உணவுகளை வாங்கிக் கொடுத்தாலுமே அது உடலுக்கு தீங்கினை ஏற்படுத்தும். அதே நேரம் ஆரோக்கியமான, ஊட்டச்சத்து மிக்க இயற்கை சார்ந்த உணவு வகைளை செய்து கொடுப்பதும் கடினமாகத்தான் இருக்கிறது என்று அலுத்துக் கொள்ளும் அம்மாக்களுக்காகவே ‘நன்சுவை’ பெயரில் பாரம்பரிய அரிசி மற்றும் சிறுதானியங்களில் சுவையான பிஸ்கெட்டுகளை தயாரித்து வருகிறார் சேலத்தைச் சேர்ந்த காயத்ரி விமல்ராஜ்.

“சேலம் அருகேயுள்ள சன்னியாசி குண்டு கிராமம்தான் என் சொந்த ஊர். நானும் என் கணவரும் முதுகலைப் பட்டதாரிகள். இருவரும் ஒரே கல்லூரியில் படிக்கும் போது காதல் வயப்பட்டு வீட்டில் உள்ள பெரியவர்களின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டோம்.

எங்களுக்கு ஐந்து வயதில் ஒரு மகன் இருக்கிறான். நாங்க இருவரும் பிசினஸ் செய்து வருகிறோம். என் அப்பா, அம்மா இருவரும் டெய்லரிங் தொழிலில் ஈடுபட்டு வந்ததால் நானும் அதனை கற்றுக்கொண்டு தொழிலாக செய்து வந்தேன். என் கணவர் காளான், பனீர் போன்றவற்றை மொத்த விலைக்கு வாங்கி விற்பனை செய்து வந்தார். ஒரு கட்டத்தில் இருவரும் இணைந்து ஒரு தொழிலில் ஈடுபட வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது.

இயற்கை மீது கொண்ட பற்று காரணமாகவும், பல தேடுதல்களுக்குப் பிறகு டாக்டர் பஸ்லூர் ரகுமான் அவர்களின் உடல் நலம் குறித்த புரிதல்களை தெரிந்து கொண்டோம். அதன் மூலம் நம்மாழ்வார், நெல் ஜெயராமன் அவர்களின் இயற்கை உணவுப் பொருட்கள் மற்றும் பாரம்பரிய நெல் ரகங்கள், அதன் மருத்துவ குணங்களை கற்றுக் கொண்டோம். அது சார்ந்த நிறைய புத்தகங்களை படித்தோம், செய்திகளை சேகரித்தோம். அதில் தினசரி வாழ்வில் பாரம்பரிய அரிசி வகைகளை எளிய

முறையில் தின்பண்டங்களாக கொடுக்க முடியும் என்று தெரியவந்தது.

இன்றைய அவசர சூழ்நிலையில் மக்களுக்கும் பாரம்பரிய அரிசிகளை பயன்படுத்துவது கடினமாக இருந்து வருகிறது. அதே சமயம் வெளியில் கடைகளில் விற்கப்படும் பிஸ்கெட் போன்ற தின்பண்டங்களும் ஆரோக்கியமானது தானா என்ற கேள்வியும் எங்களுக்குள் இருந்தது. எங்க குழந்தைக்கும் எவ்வாறு ஆரோக்கியமான தின்பண்டங்கள் தயாரித்து கொடுப்பது என்ற சிந்தனைகள்தான் மாற்றத்திற்கு வித்திட்டது. அடுத்த தலைமுறைக்கு தேவையான அனைத்து சத்தும் நம்முடைய பாரம்பரிய அரிசி வகைகளில் இருக்கின்றன. இதை மனதில் கொண்டு பாரம்பரிய அரிசிகள் மற்றும் சிறுதானியங்களை மதிப்புக்கூட்டி பிஸ்கெட், முறுக்கு வகைகள், கஞ்சிக் கலவை போன்று தயாரிக்க ஆரம்பித்தோம்’’ என்றவர் அவர் தயாரிக்கும் உணவுகள் குறித்து விவரித்தார்.

‘‘முதலில் நாங்க தயாரித்ததை உறவினர்கள், நண்பர்களிடம் கொடுத்து கருத்துக்களை கேட்டோம். நல்ல வரவேற்பு கிடைத்தது மட்டுமில்லாமல் அவர்கள் ஆர்டரும் கொடுத்தார்கள். அதைத் தொடர்ந்து கருப்பு உளுந்து, வாழைப்பழம் பயன்படுத்தி பிஸ்கெட்டுகளாக வடிவமைத்தோம். பூங்கார் அரிசி முக்கியமாக பெண்களுக்காகவே இயற்கை கொடுத்த பரிசு. இதை தினசரி உட்கொள்ளும் போது பெண்களுக்கு வரக்கூடிய ஹார்மோன் பிரச்னைகளை தவிர்க்க முடியும். சுகப்பிரசவத்திற்கு வழிவகுக்கும், நீரிழிவு நோய் வராமல் தடுக்கும். தினை அரிசியில் தேன், வாழை மற்றும் பருவங்களில் கிடைக்கும் பழங்களை சேர்த்து பிஸ்கெட் தயாரிக்கிறோம், அதில் எங்களின் ஸ்பெஷல் பலாப்பழத்தில் செய்யப்படும் பிஸ்கெட்கள்.

பூங்கார் அரிசி பெண்களுக்கானது போல், மாப்பிள்ளை சம்பா அரிசி ஆண்களுக்கானது. உடலுக்கு வலிமை கொடுக்கும். அவை தவிர கருப்பு கவுனி அரிசி மற்றும் சிறுதானியங்களில் தினை, கேழ்வரகு, கம்பு போன்றவைகளிலும் சத்து நிறைந்துள்ளது. இவை அனைத்திலும் எந்தவித ரசாயனங்கள் சேர்க்காமல், இயற்கையான முறையில் பிஸ்கெட்களை தயாரித்து வருகிறோம். முதலில் இயற்கை சார்ந்த உணவு திருவிழாக்களில் ஸ்டால் அமைத்து எங்களின் உணவுகள் பற்றி மக்களுக்கு தெரியப்படுத்தினோம். பாரம்பரிய அரிசிகளின் பயன்கள் மற்றும் நன்மைகளை மக்களும்

புரிந்து கொண்டு இப்போது ஆர்டர் செய்ய துவங்கினார்கள். எங்க குழந்தைக்கு நல்ல உணவு கொடுக்கும் முயற்சியில் ஆரம்பித்தோம். இன்று சமுதாயத்தில் உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் கொடுத்துக் கொண்டிருக்கிறோம்.

பிஸ்கெட்களில் ராகி நட்ஸ், கருப்பு கவுனி, பூங்கார், தினை, வாழை, கம்பு, கடலை, புதினா, கருப்பு உளுந்து, பலாப்பழம் போன்ற பிஸ்கெட்களை செய்கிறோம். இவை தவிர முறுக்கு வகைகளும் உள்ளது. ஆத்தூர் கிச்சலி சம்பா சின்ன வெங்காயம், தூயமல்லி அரிசி செவ்வாழை, தங்க சம்பா இஞ்சி பூண்டு, மிளகு சம்பா கறிவேப்பிலை, பூங்கார் அரிசி முருங்கைக்கீரை, பலாப்பழம் முறுக்கு என பல வகை முறுக்குகளை தயாரிக்கிறோம். கஞ்சியில் கருப்பு கவுனி, பூங்கார், ரத்தசாலி, பால்குட வாழை, மாப்பிள்ளை சம்பா போன்றவற்றில் செய்கிறோம்.

அம்மாக்குத்தான் தெரியும் தன் குழந்தைக்கு எது ஆரோக்கியமான உணவு என்று. அதை அவள் பாசத்துடன் ஊட்டி தன் குழந்தையை ஆரோக்கியமாக வளர்ப்பாள். அதேபோல் எங்களின் உணவுகளையும் மிகுந்த அக்கறையுடன் தயாரித்து விற்பனை செய்கிறோம். குழந்தைகள் மட்டுமல்ல பெரியவர்கள், வேலை நிமித்தமாக பயணம் மேற்கொள்பவர்கள், நேரத்திற்கு சாப்பிட முடியாதவர்கள், திருவிழா அல்லது வீட்டு விசேஷமோ, பள்ளி, கல்லூரிக்கு தின்பண்டங்களை கொண்டு செல்பவர்கள், அன்பளிப்பாக இனிப்பு வழங்குபவர்கள் என அனைவருக்கும் அவர்களுக்கு ஏற்ற வகையில் பேக்கிங் செய்து தருகிறோம். இணையம் மற்றும் சமூகவலைத்தளங்கள் மூலம் வெளிநாடுகளுக்கும் ஆன்லைன் முறையில் விற்பனை செய்கிறோம்.

மேலும் எங்க பகுதியில் உள்ள பெண்களுக்கும் இதன் மூலம் வேலை வாய்ப்பினையும் ஏற்படுத்தி தர முடிகிறது. அவர்களுக்கு இந்த சம்பாத்தியம் ஒரு நம்பிக்கை மற்றும் தன்னம்பிக்கையை தந்துள்ளது. பெண்களால் சுயமாக சம்பாதிக்க முடியும் என்ற பொருளாதாரம் தாண்டிய ஒரு நிம்மதியும் எங்களால் கொடுக்க முடிகிறது என்று நினைக்கும் போது மனநிறைவாக உள்ளது’’ என்றார் காயத்ரி.

தொகுப்பு: மதுரை ஆர்.கணேசன்

Related News