தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

படுக்கை விரிப்புகளும் பயன்களும்!

நன்றி குங்குமம் தோழி

கம்பளிப்படுக்கை கடும் குளிரால் ஏற்படும் காய்ச்சல், சளி தொந்தரவு போன்றவற்றால் அவதிப்படுபவர்கள் கம்பளிப் படுக்கையில் படுத்து உறங்கினால் நலம் கிடைக்கும். கோரைப்பாய்: கோரைப் புல்லில் இருந்து நெய்யப்படுவது கோரைப்பாய். இயற்கையான முறையில் தயாரிக்கும் கோரைப்பாயில் படுத்துறங்கினால் உடலுக்கு குளிர்ச்சியை த்தரும். மேலும், நல்ல தூக்கம் வரும்; உடல் சோர்வு இருக்காது. இயற்கை அளித்துள்ள கொடையான கோரைப் பாயை கோடை காலத்தில் பயன்படுத்தினால், உடல் சூட்டில் இருந்து தப்பித்துக்கொள்ளலாம்.

பிரம்புப்பாய்: உலகெங்கும் வளரக்கூடிய போவேசியே குடும்பத்தைச் சேர்ந்த நெகிழ்ச்சித்தன்மையான வன்தண்டைக் கொண்ட பல்லாண்டுத் தாவரமாகும். இது வீட்டுக்கூரை வேய, வீட்டு உபயோகப் பொருட்கள் தயாரிக்கவும் பயன்படுகிறது. இதில் தயாரிக்கப்படும் பாயில் படுத்துறங்கினால் சீதபேதி, சீதளத்தால் வரும் ஜுரம் போன்றவை நீங்கும்ஈச்சம்பாய்; ஈச்சம் மரத்தில் இருந்து தயாரிக்கப்படுவது ஈச்சம்பாய். இதில் படுத்துறங்கினால் வாதநோய் குணமாகும். ஆனால், உடல் சூடு, கபம் அதிகரிக்கும்.

மூங்கில் பாய்: மூங்கில் பாய் என்பது மூங்கில் குச்சிகளை மெல்லிய குச்சிகளாக உருவாக்கி அதன் மூலம் தடுக்கை போன்ற பாய்களை தயார் செய்வது ஆகும். இதில் படுத்துறங்கினால் உடல் சூடும் பித்தமும் அதிகரிக்கும். இதனால், பெரும்பாலும் மூங்கில் பாய்களை தடுப்புகளுக்காக பயன்படுத்தப்படுகிறது.தாழம்பாய் - தலை சுற்றல் இருப்பவர்கள் மற்றும் பித்தம் அதிகம் உள்ளவர்கள் தாழம்பாயை பயன்படுத்தினால் நல்ல தீர்வைத் தரும். மேலும், வாந்தி ஏற்படும் உணர்வை சரி செய்யும்.

பேரீச்சம்பாய்: வாதகுன்ம நோய், சோகை நீங்கும். வயிற்றுப்புண் வராமல் தடுக்கும். ஆனால் உடலுக்கு அதிக உஷ்ணத்தைக் கொடுக்கும். இலவம் பஞ்சு படுக்கை : இலவம் மரத்து காய்களில் இருந்து பெறப்படும் பஞ்சை மெத்தையாக்கி பயன்படுத்துவதே இலவம் பஞ்சு படுக்கை. இதில் படுத்து உறங்கினால், உடல் வலி தீரும். தாது பலம் பெறலாம். தலை முதல் பாதம் வரையிலான அனைத்து நோய்களும் நிவாரணம் பெறும்.

பனைஓலை பாய் - பனை ஓலைகளில் இருந்து தயாரிக்கப்படுவது பனைஓலை பாய். இதில் படுத்துறங்கினால், பித்தத்தைப் போக்கி உடல் சூட்டை தணிக்கும். மூங்கில் நார் பாய் - வீடு, அலுவலகங்களில், தடுப்புச் சுவர் மற்றும் கோடை வெப்பத் தடுப்பானாகவும் பயன்படும்.

தொகுப்பு: ஆர்.கே.லிங்கேசன்.