தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

கோடைக்கு ஏற்ற சத்தான பானம்!

நன்றி குங்குமம் தோழி

*வெதுவெதுப்பான நீரில் தேன், எலுமிச்சை சாறு, குளுகோஸ் கலந்து பருகினால் உடலுக்கு இதமாக இருக்கும். தாகமும் அடங்கும்.

*ரோஜாப்பூ இதழ்களுடன் பனைவெல்லம் சேர்த்து சாப்பிட்டால் உடல் சூடு குறையும். வாய் மணக்கும்.

*மண்பானை தண்ணீரில் வெல்லம், சுக்குப்பொடி, ஏலப்பொடி கலந்து குடித்தால் கோடைக்கேற்ற சுவையான சத்தான பானம்.

*நீராகாரத்தில் சின்ன வெங்காயம், கேரட் சிறிதாக நறுக்கிப் போட்டு, உப்பு போட்டு காலையில் குடித்தால் உடல் குளிர்ச்சியாகும்.

*நீர் மோரில் தக்காளி பழச்சாறு கலந்து, உப்பு, பெருங்காயம், கொத்தமல்லித் தழை, கறிவேப்பிலை நறுக்கி சேர்த்துப் பருகினால் களைப்பும் சோர்வும் ஏற்படாது.

*நீர் மோரில் வெள்ளரித் துண்டுகள், புதினா சிறிது, எலுமிச்சை சாறு, உப்பு கலந்து குடித்தால் வயிற்றிலுள்ள பிரச்னை தீரும்.

*தர்பூசணி ஜூஸ், இளநீர், கரும்பு ஜூஸ், நுங்கு, முலாம்பழம் முதலியவற்றையும் சாப்பிடலாம்.

*நன்னாரி சர்பத்தில் எலுமிச்சை சாறு, நாட்டுச் சர்க்கரை கலந்து குடித்தால் தாகம் தீரும்.

*நெல்லிக்காய் துண்டுகள், கறிவேப் பிலை, இஞ்சி சிறிது சேர்த்து மிக்ஸியில் அரைத்து வடிகட்டி உப்பு சேர்த்து குடிக்கலாம்.

*செம்பருத்தி இதழ்களை எலுமிச்சை சாறில் ஊறவைத்து, மறுநாள் இடித்து சாறெடுத்து, அதனுடன் நெல்லிச்சாறு, இஞ்சிச்சாறு சிறிது சேர்த்து சர்க்கரை, தண்ணீர் ேசர்த்து குடித்தால் உடல் சூடு குறையும்.

*வெல்லம், ஏலக்காய், புதினா இலைகள் சேர்த்து கொதிக்க வைத்து, வடிகட்டி, ஆறவைத்து குடிக்கலாம்.

தொகுப்பு: எம்.வசந்தா, சென்னை.