முகத்திற்கு அழகு சேர்க்கும் மூக்குத்தி
நன்றி குங்குமம் தோழி
பெண்களின் முகத்துக்கு எடுப்பான தோற்றத்தையும், இணையற்ற எழிலையும் தரவல்லது ‘மூக்குத்தி’. மூக்குத்தி பகட்டில்லாத கண்ணியமான தோற்றத்தை அளிப்பன. வேறு எந்தவிதமான முக வசீகரமும் இல்லாத பெண்கள், தங்கள் முக அமைப்புக்கேற்ற மூக்குத்தி அணிவதன் மூலம் தனி முகக் களையையும், எழிலான தோற்றத்தையும் தர முடியும்.
*பரந்த முக அமைப்பைப் பெற்றவர்கள் கல்கள் இழைத்த மூக்குத்தியை அணிந்தால் அழகாக தோற்றமளிக்கும்.
*குறுகிய நீண்ட முகத்தைப் பெற்ற பெண்கள் ஒரு கல் வைத்து செய்யப் பெற்ற மூக்குத்தியை அணிந்தால் கவர்ச்சியான தோற்றத்தைக் கொடுக்கும்.
*நல்ல சிவப்பு நிறமுடைய பெண்கள் பச்சைக்கல் பதித்த மூக்குத்தியை அணியலாம். மாநிறமாக உள்ள பெண்கள் இளஞ்சிவப்பு நிற கல் பதித்த மூக்குத்தியை அணியலாம்.
*கறுமை நிறம் கொண்ட பெண்கள் வெள்ளைக்கல் மூக்குத்தி போட்டுக் கொண்டால் அழகாக இருக்கும். இவர்கள் கற்களே இல்லாத நல்ல வேலைப்பாடுகள் செய்த தங்கத்திலான மூக்குத்தியையும் அணியலாம்.
*சில பெண்களுக்கு மூக்கின் ஒரு பக்கம் ‘நத்து’ என்று அழைக்கப்படும் வளையத்தையும், அடுத்த பக்கம் தட்டையாக வடிவமைக்கப்பட்ட மூக்குத்தியையும் அணிந்தால் முகம் தனிக் களையோடு மின்னும். பாரம்பரியம் மிக்க மூக்குத்தியை அணிந்து அழகான தோற்றத்தில் வலம் வருேவாம்.
- எஸ்.நளினி பவானி, திண்டுக்கல்.