பலகாரங்கள் 15!
நன்றி குங்குமம் தோழி
* ரவை லட்டு: வறுத்த ரவை, சர்க்கரை, நெய், பால் சேர்த்து உருட்டவும்.
* தேங்காய் பர்ஃபி: தேங்காய், சர்க்கரைப் பாகு சேர்த்து கிளறி தட்டில் ஊற்றி நறுக்கவும்.
* முறுக்கு: அரிசி மாவு, கடலை மாவு, எள், நெய் சேர்த்து பிசைந்து அழுத்தி பொரிக்கவும்.
* ஓமப்பொடி: கடலை மாவில் ஓமம், நெய் சேர்த்து மெல்லிய துளையில் அழுத்திபொரிக்கவும்.
* பாசிப்பருப்பு லட்டு: வறுத்த பருப்பை அரைத்து நெய், சர்க்கரை சேர்த்து உருட்டவும்.
* ஜிலேபி: மைதா மாவை புளிக்க வைத்து வட்டமாக ஊற்றி சர்க்கரை பாகில் நனைத்து எண்ணெயில் பொரிக்கவும்.
* ரவை கேசரி: ரவை வறுத்து சர்க்கரை பாகில் சேர்த்து நெய்யில் கிளறி கேசரி தயாரிக்கவும்.
* பாதாம்அல்வா: பாதாமை அரைத்து சர்க்கரை, நெய் சேர்த்து கிளறி கெட்டியாக்கவும்.
* மில்க் பேடா: பால் பொடி, நெய், சர்க்கரை சேர்த்து கெட்டியாகும் வரை கிளறி உருட்டவும்.
* ரிப்பன் பக்கோடா: அரிசி மாவு, கடலை மாவு, மிளகாய் பொடி சேர்த்து ரிப்பன் வடிவில் பொரிக்கவும்.
* மசாலா வேர்க்கடலை: கடலை மாவு, அரிசி மாவு பூசி வேர்க்கடலை பொரிக்கவும்.
* தட்டை: அரிசி மாவு, உளுந்து, மிளகு பிசைந்து தட்டி எண்ணெயில் பொரிக்கவும்.
* சுண்டல்: வேகவைத்த கொண்டைக்கடலையில் உப்பு, மிளகாய் தூள், தேங்காய் சேர்த்து வதக்கவும்.
* மைசூர் பாகு: கடலை மாவு, சர்க்கரை, நெய் சேர்த்து பாகு நிலைக்கு வந்ததும் தட்டில்
ஊற்றவும்.
* சேவு: கடலை மாவு, மிளகாய் தூள் சேர்த்து சேவு அச்சில் அழுத்தி பொரிக்கவும்.