தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

முதுமையில் இளமை…ஹெல்த் கைடு!

நன்றி குங்குமம் டாக்டர்

Advertisement

முதுமை என்பது மானுட வாழ்வில் தவிர்க்க முடியாத அங்கம். அதை இரண்டாம் பால்யம் என்பார்கள். இது மேலும் உடல் செயல்பாடுகளை பலவீனப்படுத்துவதுடன் மன அழுத்தம் மற்றும் முதுநிலையில் ஏற்படும் நோய்களை அதிகப்படுத்துகிறது. இதன் விளைவாக முதிர்ந்த வயதில் ஏற்படும் இறப்பு விகிதம் அதிகம் எனக் கூறலாம்.

வயது முதிர்ச்சியடைவதின் முக்கிய குறிப்புகள்

*உயிரியல் செயல் (Biological Process)

*மரபணுக்கள் வாழ்நாட்களை நிர்ணயிக்கிறது. எனவே முதிர்ச்சியடைவதில் மரபணுக்கள் முக்கிய பங்கு வகிக்கிறது.

*தொடர்ந்து செயல்படுவதால் உடல் உறுப்புகள் பாதிக்கப்படுகிறது.

*உடலின் முக்கிய உறுப்புகளான இருதயம், மூளை போன்றவற்றில் நச்சு பொருட்களான கொலஸ்ட்ரால், அமிலாய்டு (Amyloid) போன்றவை தேங்கி அவற்றை பாதிக்கின்றன.

*DNA பழுதுபார்க்கப்படும்போது ஒரு சில முக்கியமான மரபுப்பொருட்கள் மறைந்து போகின்றன.

*குறைவுபட்ட முக்கிய ஹார்மோன்களை உற்பத்தி செய்வதில் தளர்வு. எ.கா: வளர்ச்சி ஹார்மோன், ஆண்ட்ரோஜன், ஈஸ்ட்ரோஜன் மற்றும் தைராய்டு ஹார்மோன்கள்.

*வாழ்நாளில் ஏற்படும் அழுத்தங்கள், மேலும் அதனால் ஏற்படும் விளைவுகள்

*சுற்றுசூழல் நச்சு மற்றும் இடையூறுகளுக்கு நீண்டகாலம் உட்படுதல் Exposure)

வயதின் பரிணாம நிலை (Evolutionary Basis of Ageing)

பரிணாம வளர்ச்சியில் வயதும் இணைக்கப்பட்டுள்ளது. இனப்பெருக்க வயது (அ) காலத்திற்கு பிறகு நீண்ட வாழ்நாள் பயனற்றது. இல்லையென்றால் மக்கள் தொகை பெருக்கமும், வாழ்வதற்கு பொருளாதார போட்டியும் ஏற்படும்.

முதிர்வயதில் மனநிலை சமூகபார்வை (Psycho-social aspects of ageing)

வயதானவர்களுக்கு தோற்றத்தில், பழக்கவழக்கத்தில், நினைவாற்றலில் மற்றும் மன நிலையில் சில மாற்றங்கள் ஏற்படும். வயதானவர்கள் தங்கள் இடத்தை இளைய தலைமுறைக்கு விட்டுக் கொடுக்கவேண்டும். அவர்களுக்கு தாங்கள் பாதுகாப்பற்றவர்கள், தேவையற்றவர்கள் மற்றும் பிறரை சார்ந்திருக்கவேண்டுமே என்ற மனநிலை உருவாகலாம்.

முதியவர்களிடம் காணப்படும் நோய்கள்

கீழ்கண்ட நோய்கள் பொதுவாக வயதானவர்களுக்கு இருக்கும் என மருத்துவமனைகள் கூறுகின்றன:

*உயர் இரத்த அழுத்தம், கண்ணில் புரை ஏற்படுதல் (Cataract), எலும்பு மூட்டுகளில் தேய்மானம், நீண்ட நாட்கள் மூச்சுப்பாதை அடைப்பு நோய்கள், இருதயநோய், சர்க்கரைநோய், புரோஸ்டேட் சுரப்பி வீக்கம், செரிப்பு கோளாறு மற்றும் மலச்சிக்கல், மன அழுத்தம்.

வயதானவர்களுக்கு ஏற்படும் இறப்புகளுக்கான பொதுவான காரணங்கள்

*மூச்சுக்குழல் அழற்சி மற்றும் நிமோனியா

*இருதய நோய்

*நோய் வன் தூக்கி (Strokes) (அ) வாதம்

*புற்றுநோய்

*காசநோய்.

வயதானவர்களிடம் கவனிக்க வேண்டிய சுகாதார பிரச்னைகள்

*மாறுபட்ட ஊட்டச்சத்து, மிக அதிகமான ஊட்டச்சத்து, மிகவும் குறைந்த ஊட்டசத்து.

*நார் தன்மை உணவு மற்றும் பழங்கள் குறைவாக சாப்பிடுதல்.

*உடல் இயக்கங்கள் குறைவுபட்டு, சுறுசுறுப்பில்லாத வாழ்க்கை முறை (Sedantary Life style),

*புகைபிடித்தல்

*அதிகமாக ஆல்கஹால் பருகுதல்

*மருந்தினால் ஏற்படும் விளைவுகள்

*விபத்து மற்றும் காயங்கள்.

அதிக ஊட்டசத்து (Over Nutrition) :

ஊட்டசத்து அதிகமாவதால் உடல்பருமன் அதிகரித்து உயர் இரத்த அழுத்தம், இருதய நோய் மற்றும் சர்க்கரைநோய் போன்றவை ஏற்படும். இவை வயதானவர்களுக்கு ஏற்படும் பொதுவான சுகாதார பிரச்சினைகளாகும்.

குறைந்த ஊட்டசத்து (Under- Nutrition)

இதுவும் சம அளவு கேடு நிறைந்தது. இதனால் உடலளவில் தன் வேலையை செய்ய முடியாமல் மற்றவர்களை சார்ந்திருத்தல், நோய்தடுப்பு குறைந்து காணப்படுவதால் வெகு விரைவில் ஏற்படும் இறப்பு, அதிகமான நோய்த்தொற்று மற்றும் காயம் மெதுவாக குணமடைதல் ஆகியவை காணப்படும்.

சில மனநிலை சமூக காரணங்கள்

உணவு உட்கொள்ளுதலை பாதிக்கும் காரணங்கள். எகா. பொருளாதார நிலை. உணவு பற்றிய கட்டுப்பாடுகள் (சூடு மற்றும் குளிர்ச்சி), மதநம்பிக்கைகள், சமூக கட்டுப்பாடுகள், கவனிப்பவரின் விருப்பமில்லாமை, மற்றும் பழிந்துரை, மன அழுத்தம், தனிமை.

பொதுவான ஊட்டசத்து குறைகள் :

இதில் மொத்த கலோரிகள், இரும்புசத்து, நார்சத்து, போலிக் அமிலம், விட்டமின் C, கால்சியம், துத்தநாகம் மற்றும் விட்டமின் A போன்றவைகள் அடங்கும்.

உடற்பயிற்சி

வயதான காலங்களில் சக்தி, பலம், எலும்பு மற்றும் இருதயதசைகளின் தன்மை போன்றவை படிப்படியாக குறைந்து காணப்படும். சுறுசுறுப்பற்ற மற்றும் உடல் இயக்கங்கள் குறைந்து போவது, நோய் மற்றும் இறப்பு போன்ற பாதிப்புகளுக்கு முக்கிய காரணமாகும்.

புகைபிடித்தல் :

வயதானவர்களுக்கு ஏற்படும் இறப்பு நோய்களுக்கு (Fatal disease) முக்கிய காரணம் சிகரெட் புகைப்பது. கீழ்கண்டவைகளுக்கு காரணங்கள்

*வயதானவர்களுக்கு ஏற்படும் மூச்சு பிரச்சனைகள்

*நுரையீரல் மற்றும் இரைப்பை குடல்பாதை புற்று நோய்

*இருதயநோய்

*வாதநோய் (Stroke).

ஆல்கஹால்

அதிகமாக ஆல்கஹால் உட்கொள்வதால் இருதயவீக்கம், கல்லீரல் அழற்சி, நரம்புகள் பாதிப்பு, நினைவின்மை, கீழே விழுதல் மற்றும் விபத்துகள், குறை உணவூட்டம், நோய்தடுப்பில் குறைவு மற்றும் சமூகத்தில் இருந்து தனிமைப்படுத்துதல் போன்றவைகள் உண்டாகும்.வலி நீக்கிகள் மற்றும் மத்திய நரம்புமண்டல அழுத்திகளான தூக்கமருந்துகள், டிரைசைகிளிக் அழுத்த நீக்கிகள், பரபரப்பை குறைப்பவை மற்றும் பென்சோ டையபினைன்கள் போன்றவைகளின் பலன் (அ) செயல் அதிகமாக ஆல்கஹால் உட்கொள்வதால் பாதிக்கப்படும்.

ஆல்கஹாலுக்கு அடிமையாவதால், நினைவின்மை, சமநிலை பாதிப்பு அடிக்கடி கீழே விழுதல் மற்றும் மோசமான உடல்நலமின்மை போன்றவைகள் முதுநிலை நோய்கள் என்று தவறாக ஊகிக்கப்படுகிறது.

விபத்துக்களை தடுத்தல்

வலி, காயம், உறுப்புகள் வேலை செய்யாமை, நீண்ட நாட்கள் அசையாதன்மை மற்றும் சிக்கல்கள், எதிர்கால விபத்துக்களைப்பற்றிய பயம், தனிமை மற்றும் சுதந்திரமனப்பான்மை இழத்தல் போன்றவை விபத்துகளில் அடங்கும்.சராசரியான வயதில் இருப்பவர்களைவிட வயதானவர்களுக்கு ஏற்படும் விபத்துகள் அதிகம். ஏனென்றால் உணர்ச்சி மற்றும் தசை எலும்பு மண்டலத்தில் ஏற்படும் மாற்றங்களே காரணமாகும். இந்த மாற்றங்களில் கீழ்கண்டவை அடங்கும்.

*புலன் உறுப்புகள் பழுதடைதல் - பார்வை, கேட்டல், வலி தொடுதல், வெப்பநிலை.

*உடல் சமநிலையில் சரிவு

*நிற்கும் தோரணை மற்றும் நடக்கும் முறையில் பாதிப்பு

*தசைவலிமை மற்றும் ஒருநிலைப் படுத்தல் குன்றிப்போதல்.

வயதானவர்கள் கீழே விழுந்து, விபத்து ஏற்பட மற்ற சில காரணங்களும் உண்டு அவை

*நினைவாற்றலில் பாதிப்பு

*மனக்குழப்பம்

*நீண்ட நாட்கள் உடல் நலமின்மை

*இருதய நோய்களுக்கு மருந்துகளை பயன்படுத்துதல்

*மன அழுத்தம்.

வயதானவர்களுக்கு விபத்துகள் ஏற்படும் காரணங்களையும் சுற்றுச்சூழல் சீர்கேடுகளையும் பற்றி நன்கு தெரிந்து கொள்ளவேண்டும். மேலும் அவற்றை சரிசெய்வதற்கு தேவையான எளிய மற்றும் நவீன முறைகளையும் தெரிந்து கொள்ளவேண்டும். அவை.

*நடப்பதற்கான சாதனங்களை பயன்படுத்துதல்

*பார்வை கருவிகளை பயன்படுத்துதல்

*தட்டையான காலணிகளை பயன்படுத்துதல்.

*வீட்டிற்கு உள்ளேயும் வெளியேயும் சரியான தரை அமைப்பு.

மருந்து செயல்களினால் ஏற்படும் பக்கவிளைவுகளை தடுத்தல்

பொதுவாக மருந்துகளுக்கு எதிராக ஏற்படும் விளைவுகள் ஆன்டிபயாடிக்குகள், சிறுநீர் உற்பத்தியை அதிகரிக்கும் மருந்து, இருதய துடிப்புகளை சரிசெய்யும் மருந்துகள், டிஜாக்சின் அழற்சியை தடுக்கும் மருந்துகள், தூக்கமருந்துகள், மன அழுத்தத்தை நீக்கும் மருந்துகள், உயர் இரத்த அழுத்தத்தை தடுக்கும் மருந்துகள் இரத்தம் உறைதலை தடுக்கும் மருந்துகள் மற்றும் மனநோய் மருந்துகள்.

பொதுவாக மருந்துக்கு மாறாக ஏற்படும் செயல்கள் (Adverse reaction மனக்குழப்பம், மூளைக்கோளாறு, குறைந்த இரத்த அழுத்தம், கீழே விழுதல், படபடப்பு, மன அழுத்தம், தூக்கமின்மை, மலச்சிக்கல், சிறுநீரை கட்டுப்படுத்த முடியாத நிலை மற்றும் சிறுநீர் தேங்கியிருத்தல்.

இந்த விளைவுகளை குறைக்க செய்யப்படவேண்டியவை

*மருந்துகளை பற்றி அடிக்கடி மருத்துவரிடம் ஆலோசனை கேட்டறிதல்

*ஏற்படக்கூடிய பக்கவிளைவுகளைப் பற்றிய குறிப்பு

*பயன்படுத்தும் மருந்துகளின் எண்ணிக்கையை குறைத்தல்

*அதிகப்படியான பக்கவிளைவுகள் இல்லாத மருந்துகளை பயன்படுத்துதல்.

*நோய்த்தடுப்பு (Immunization)

கீழ்காணும் மூன்று நோய்க் காரணிகளுக்கான தடுப்பு மருந்து பரிந்துரைக்கப் படுகிறது.

நியூமோகாக்கஸ், இன்புளுன்சா வைரஸ் மற்றும் டெட்டனஸ்

நியூமோகாக்கஸ், தடுப்பூசி மருந்து ஒரே ஒரு முறை கொடுக்கப்பட வேண்டும். இன்புளுன்சா தடுப்பு ஊசி ஒவ்வொரு வருடமும் கொடுக்க பரிந்துரைக்கப்படுகிறது.

மனநலம்

முதிர்வயதில் ஏற்படும் மன அழுத்தங்கள்: வயது முதிர்ந்தவர்களுக்கு சூழ்நிலையினால் ஏற்படும் பொதுவான பிரச்சனைகள்.

*கணவன் அல்லது மனைவியை இழந்த நிலை மற்றும் மிகவும் நெருக்கமானவர்களின் இறப்பு

* வயதானவர்களை கவனிப்பவர்களுக்கு ஏற்படும் மன அழுத்தம் மற்றும் உடன்பிறப்புகள், உறவினர்களின் நோய், இறப்பை பற்றிய பயம்

* பொருளாதார பிரச்சனை மற்றும் சுதந்தரமற்றநிலை

* சமூகத்தில் தனித்துவைக்கப்படல் மற்றும் தனித்தநிலை வயது முதிர்ச்சியும் அதன் பிரிவுகளும்

* கீழ்கண்ட பிரச்சனைகளாலும் மனநிலை பாதிக்கப்படும்

* சோர்வு, பயம், தனிமை, அர்த்தமற்ற வாழ்க்கை மற்றும் குறிக்கோள் இல்லாமல் இருத்தல். படபடப்பு, கோபம், திறமை) வலிமையற்றநிலை மற்றும் மன அழுத்தம்.

வயதான காலங்களில் ஏற்படும் மனநோய்கள்

*உடல் நல குறைபாடுகள் மனநல குறைபாட்டை அதிகப்படுத்துகிறது.

*மன அழுத்தம்

*படபடப்பு நோய்கள்

*தவறான மனப்பான்மை

*அப்சஸ்சிவ் கம்பல்சிவ் பிரச்சனை

*தனிப்பட்ட பிரச்சனை (Personality disorder)

*பாதுகாப்பற்ற உணர்வு

*மது அருந்துதல்

*மருந்துகளுக்கு அடிமையாதல்

*பேச்சு குழறுதல் மற்றும் மறந்துபோதல்.

தொகுப்பு: சரஸ்

Advertisement