தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

நலம் யோகம்! உடலுக்கு ஒளி... மனதுக்கு அமைதி!

Advertisement

நன்றி குங்குமம் தோழி

தக்‌ஷ மன்னன் அனுமதி இன்றி, அவரின் மகள் சக்தி, சிவபெருமானை மணம் புரிகிறார். இந்தத் திருமணத்தை அங்கீகரிக்காத மன்னன், அவரின் அரண்மனையில் நடைபெற்ற பெரிய விழாவிற்கு அவர்களுக்கு அழைப்பு விடுக்காமல் அவர்களைப் புறக்கணிக்கிறார். இருந்தபோதும், சக்தி தனது தந்தை நடத்தும் விழாவில் பங்கேற்கத் தனியாக வருகிறார். இதை கண்டு கோபம் அடைந்த தக்‌ஷ மன்னன், சிவபெருமானை அவதூறான வார்த்தைகளால் பேசிவிடுகிறார்.

இந்த அவமானத்தை தாங்க முடியாமல், தனது உடலை தீயில் மாய்த்துக் கொள்கிறார் சக்தி. இந்தச் செய்தியினைக் கேள்விப்பட்ட சிவபெருமான், கோவத்தின் உச்சத்தில் நின்று, தன் ஜடாமுடியை விரித்து ஆவேசத்தோடு ஆடியபடி கீழே இறக்குகிறார். அவரின் கோபத்திலிருந்து பிறந்தவரே வீரபத்ரன். வீரபத்ரன் மற்றும் தக்‌ஷ மன்னன் இடையே போர் நிகழும் பொழுது, வீரபத்ரன் செய்த பல்வேறு சாகங்களே வீரபத்ராசனா என அழைக்கப்படுவதாகவும் சொல்லப்படுகிறது.

வீரபத்ராசனம் 1

விரிப்பின் மீது இரண்டு கால்களையும் பக்கவாட்டில் நன்றாக விரித்துக் கொள்ள வேண்டும். வலது பாதத்தை 90 டிகிரி வலது பக்கமாக திருப்பிக் கொள்ள வேண்டும். இடது பாதத்தையும் சற்று வலது பக்கமாக திருப்பி நின்று கொள்ள வேண்டும். இடுப்பு, மார்பு, தோள்களையும் முழுமையாக வலது பக்கம் திருப்பிக் கொள்ள வேண்டும். இரண்டு கைகளையும் தலைக்கு மேல் நன்றாக உயர்த்தி கூப்பிக் கொள்ள வேண்டும். வலது முட்டியை மடக்கி இடுப்பை கீழே இறக்க வேண்டும்.

வலது தொடை தரைக்கு நேர் கோடாகவும், வலது கெண்டை கால் தரைப்

பகுதிக்கு செங்குத்தாக இருக்கும் வரை இடுப்பை கீழே இறக்க வேண்டும். மார்பை நன்றாக விரித்து தலையைத் தூக்கி, பார்வை வானத்தை பார்த்த நிலையில் இருத்தல் வேண்டும். இதுவே வீரபத்ராசனம். இதே மாதிரி இடது பக்கமும் செய்ய வேண்டும். குறைந்தது 30 விநாடிகளுக்கு இந்த ஆசனத்தில் இருக்கலாம்.

பலன்கள்

*தொடைப் பகுதி நன்றாக பலம் பெறும்.

*இடுப்பை சுற்றியுள்ள கொழுப்புகள் கறையும்.

* உடல் எடையினை குறைக்க விரும்புவோர் தாராளமாக இந்த ஆசனத்தைச் செய்யலாம்.

*மார்புப் பகுதி விரிவதால் சுவாசம் அதிகரிக்கும்.

*உடலுக்குத் தேவையான பிராண சக்தி அதிகரிக்கும்.

*தோள் பட்டை, முதுகுப் பகுதி தசைகளின் நெகிழ்வுத் தன்மை கூடும்.

வீரபத்ராசனம் 2

விரிப்பின் மீது இரண்டு கால்களையும் பக்கவாட்டில் நன்றாக விரித்து வைத்த நிலையில், வலது பாதத்தை மட்டும் 90 டிகிரி வலது பக்கமாக திருப்பிக் கொள்ள வேண்டும். இடது பாதம் அப்படியே வலது பாதத்துக்கு செங்குத்தாக இருக்கலாம். (Perpendicular bisecting) வலது முட்டியை மடக்கி இடுப்பு பகுதியினை கீழே இறக்க வேண்டும். மார்பை விரித்து இரண்டு கைகளையும் பக்கவாட்டில் நன்றாக நீட்டி, தோள்பட்டையை உயரத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்.

பார்வை வலது கை ஆள்காட்டி விரல் நகத்தின் நுனியினைப் பார்க்க வேண்டும். அப்போது உடல் எடையானது வலது தொடையில் இறங்குவதைக் கவனிக்க வேண்டும். இடுப்பெலும்பும் அப்போது சற்று விரிவடையும். அதிலும் நமது கவனம் இருக்க வேண்டும். இந்த ஆசனத்தை 30 விநாடிகளுக்குச் செய்யலாம். இதே போன்று இந்த ஆசனத்தை இடது புறமாகவும் செய்தல் வேண்டும்.

பலன்கள்

*கால்கள் மற்றும் தொடைகள் பலம் பெறும்.

*இடுப்பு பகுதி கொழுப்பு கறையும்.

*வயிற்றுப் பகுதி, தொடைப் பகுதி சதைகள் இறுகி உடல் வனப்புப் பெறும்.

வீரபத்ராசனம் 3

குறிப்பு: வீர பத்ராசனம் 1 மற்றும் 2... இரண்டிலும் எந்தக் காலை வெளிப்பக்கமாக திருப்புகின்றோமோ, அந்தக் காலின் முட்டிப் பகுதியினை மடக்கி, இடுப்பைக் கீழே இறக்கும் பொழுது தொடைப் பகுதி தரைக்கு இணை கோடாக(Parallel to the floor) இருக்க வேண்டும். அப்போது கெரண்டைக் கால் பகுதி, படத்தில் காட்டியிருப்பது போல, தரைக்கு செங்குத்தாக (Perpendicular to the floor) முட்டிப் பகுதி கணுக்காலில் இருந்து நேர்கோடாக இருக்க வேண்டும்.முட்டிப் பகுதி கணுக்காலை தாண்டி செல்லாத அளவுக்கு கவனம் செலுத்த வேண்டும். இது இரண்டு ஆசன நிலைக்கும் பொருந்தும்.

இதுவும் வலது பக்கம் செய்வது போன்றே இடது பக்கமும் செய்ய வேண்டிய ஒரு ஆசனம். வீரபத்ராசன 1ம் நிலையில் இருந்து, மேல் உடலை முன்பக்கமாக அதாவது, வலது கால் பக்கமாக சாய்த்து வயிற்றுப் பகுதி தொடையில் படும்படி உடலைக் கொண்டு செல்ல வேண்டும். இந்த நிலையில் மூச்சை இரண்டு முறை உள்ளே இழுத்து வெளியில் விட வேண்டும். மூச்சை வெளியேற்றியதும், வலது காலை படத்தில் காட்டியுள்ளது போல் நேராக நீட்டி, அதே நிலையில், இடது காலை தரையிலிருந்து மெதுவாக உயர்த்தி படத்தில் காட்டி இருப்பது போல நேராக நிறுத்த வேண்டும். இந்த நிலையில் நமது பார்வையை ஒரே புள்ளியில் மையப்படுத்த வேண்டும். கவனம் முழுமையாக ஒரே புள்ளியில் குவியும் பொழுது, நமது உடல் அசைவு அடையாமல் நிலையாய் நிற்க இது உதவும்.

இந்த ஆசனத்தைப் பார்க்கும் போது, இரண்டு கைகள், இடது கால், உடல் இணைந்து நேர் கோடாய் தெரியும். இதே நிலையில் 30 விநாடிகள் அப்படியே இருந்துவிட்டு, மறுபடியும்

வீரபத்ராசன டைப் 1 நிலைக்கு மீண்டும் திரும்ப வேண்டும். இப்போது கைகள் மற்றும் கால்களை தளர்த்திக் கொள்ளலாம்.

பலன்கள்

* ஓட்டப் பந்தய வீரர்கள், மாரத்தான் வீரர்களுக்கு கால்கள் உறுதியாகவும், வலிமையுடனும் இருக்க இந்த ஆசனம் உதவும்.

*முதுகுத்தண்டு வடத்தின் நெகிழ்வுத் தன்மை அதிகரிக்கும்.

*வயிற்றில் இருக்கும் தசைகள், உள்ளுறுப்புகள் சுருங்குவதால் ஜீரண மண்டலம் உறுதி பெறும்.

*உடல் எடை பாதம் முழுவதும் ஒரே மாதிரியாகப் பரவி சீராக்கப்படும்.

* நிற்கும் நிலையில் Posture சரியாக இருக்கும்பொழுது இடுப்பு, முதுகுத்தண்டு, தோள் பட்டை பிரச்னைகள் சரியாகும்.

தொகுப்பு: ஆ.வின்சென்ட் பால்

 

Advertisement

Related News