தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

காய்கறிகளும் அதன் பலன்களும்!

Advertisement

நன்றி குங்குமம் தோழி

வாழைப்பூ: இதில் இரும்புச் சத்து, போலிக் அமிலம், வைட்டமின் ஏ, பி, சி சத்துக்கள் நிறைந்துள்ளது. ரத்த சோகை வராமல் தடுத்து உடலுக்கு வலுவையும், புத்துணர்ச்சியும் தரக்கூடியது.

வாழைத்தண்டு: இதில் கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச் சத்து, வைட்டமின் பி, சி நிறைந்துள்ளது. ரத்தத்தை சுத்தப்படுத்தும். ரத்தத்தில் உள்ள தேவையற்ற அசுத்த நீரை பிரித்தெடுக்கும்.

சிறுநீரகத்தின் செயல்பாடுகளை சீராக்கி, சிறு நீரகக் கல் அடைப்பை தடுக்கும்.

பாகற்காய்: வைட்டமின் ஏ, பி, சி, பாஸ்பரஸ், இரும்புச் சத்து, கால்சியங்கள் நிறைந்துள்ளது. நன்கு பசியை தூண்டும். உடலில் சர்க்கரை அளவை குறைக்கும்.

பீட்ரூட்: கால்சியம், சோடியம், பொட்டாசியம் சத்துக்கள் நிறைந்துள்ளது. மலச்சிக்கலைப் போக்கும். ரத்த சோகையை சரிப்படுத்தும்.

வெண்டைக்காய்: வைட்டமின் ஏ, கால்சியம், போலிக் அமிலம், பாஸ்பரஸ், இரும்புச் சத்துக்கள் நிறைந்துள்ளன. மூளை வளர்ச்சியை தூண்டும். நன்கு பசியை உண்டாக்கும்.

கோவக்காய்: வைட்டமின் ஏ, கால்சியம், போலிக் அமிலம், பாஸ்பரஸ், இரும்புச் சத்துக்கள் நிறைந்துள்ளன. வயிற்றுப் புண், வாய்ப்புண் போன்றவற்றை நீக்கும்.

முருங்கைக்காய்: வைட்டமின் ஏ, பி, சி, பாஸ்பரஸ், இரும்புச் சத்து நிறைந்துள்ளது.

சுண்டைக்காய்: புரதம், கால்சியம், இரும்புச் சத்து கணிசமாக உள்ளது. உணவில் சுண்டைக்காய் சேர்த்து வந்தால் வயிற்று புழுக்களைக் கொல்லும். உடல் வளர்ச்சியை தூண்டும்.

சுரைக்காய்: புரதம், கால்சியம், இரும்புச் சத்து, பாஸ்பரஸ், வைட்டமின் பி நிறைந்துள்ளது. இவை உடல் சோர்வை நீக்கி, உடலுக்கு புத்துணர்வைக் கொடுக்கும்.

குடைமிளகாய்: வைட்டமின் ஏ, பி, சி, கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து கணிசமாக உள்ளது. அஜீரணக் கோளாறு நீங்கி செரிமான சக்தியை தூண்டும்.

அவரைக்காய்: புரதம், நார்ச்சத்து மிகுந்துள்ளது. இவை உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து தேகத்தை பலப்படுத்துகிறது. மலச்சிக்கலை போக்குகிறது.

கேரட்: உடலுக்கு உறுதியை கொடுக்கும். ரத்தத்தை சுத்தப்படுத்தும்.

தொகுப்பு: பி.தீபா, ஓசூர்.

Advertisement

Related News