தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

துளசியின் மருத்துவ குணங்கள்

*தினமும் காலையில் பத்து துளசி இலையை மென்று தின்பதால் ரத்தம் சுத்தமடையும். மார்பு வலி, தொண்டை வலி, வயிற்றுவலி ஆகிய கோளாறுகள் நீங்கும்.

*துளசிக் கசாயம் வாய் துர்நாற்றத்தினையும், பால்வினை நோய்களையும் நீக்கும்.

*துளசியை தினமும் உட்கொண்டு வந்தால் காது வலி, வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல், சிறுநீரகக் கோளாறுகள் நீங்கும்.

*வீடுகளில் துளசிச்செடியை வளர்ப்பதால் தூய்மையான காற்றைப் பெறலாம்.

*தொழுநோயை குணமாக்க மருந்துகளில் அதிகளவில் துளசி சேர்க்கப்படுகிறது.

*உடலின் வெப்பத்தை ஒரே சீராக வைத்திருப்பதற்கு துளசி உதவுகிறது. துளசிச்சாறு சளித்தொல்லை, ஆஸ்துமா ஆகிய நோய்களைக் குணப்படுத்தும்.

*துளசிச் செடியின் வாடையின் காரணமாக கொசுக்கள் வருவதில்லை. இதனால் மலேரியா நோய் பரவாமல் தடுக்கப்படுகிறது.

மலேரியா நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தினமும் துளசியினை மென்று உட்கொண்டு வந்தால், மலேரியா நோய் நீங்கும்.

*துளசிச்செடி அதிகளவில் வளரும் இடங்களில், காற்றில் இருக்கும் புகை, கிருமிகள் போன்ற மாசுக்கள் அழிந்து, காற்று மண்டலம் தூய்மை அடையும்.

*துளசி ஜீரண சக்தியை மேம்படுத்தும். கல்லீரல், இதயம் ஆகிய உறுப்புகள் சீராக இயங்குவதற்கு துளசி உதவி புரிகிறது.

*துளசி இடப்பட்ட நீரில் நீராடினால், புண்ணிய நதிகளில் நீராடிய பலன் கிடைக்கும்.

*துளசிக் குச்சியால் ஹோமம் செய்தால் எண்ணிய காரியங்கள் நிறைவேறும்.

- கே.பிரபாவதி, கன்னியாகுமரி.

 

Related News