தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

அதிக தாகத்தைப் போக்க…

சிலருக்கு எவ்வளவுதான் தண்ணீர் குடித்தாலும் தாகம் அடங்காமலேயே இருக்கும். இதற்கு காரணம், உடலில் நீர்ச்சத்து குறைந்து போவதேயாகும். எனவே உடலில் நீர்ச்சத்தை சீரான அளவில் பராமரிக்க, தினசரி குறைந்தபட்சம் 3 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். மேலும், ஒருசில உணவுப் பொருட்களையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதனால் உடலில் நீர்ச்சத்தை பராமரிப்பதோடு, தாகம் அதிகம் எடுக்காமல் தடுக்கலாம். அவை என்னவென்று பார்ப்போம்.

இளநீர்: தண்ணீருக்கு அடுத்தபடியாக தாகத்தைத் தணிக்க உதவும் பானங்களில் ஒன்றுதான் இளநீர் ஆகும். இளநீர் உடலில் நீர்ச்சத்தை அதிகரிப்பதோடு, உடலுக்கு ஆற்றலையும் தந்து, உடல் வெப்பமடைவதைத் தடுக்கிறது.

திராட்சை: கருப்பு திராட்சையை அதிகம் சாப்பிட்டால், நாக்கு வறட்சி தணிந்து, தாகம் அதிகம் எடுப்பதை தடுக்கிறது. திராட்சை மாதவிடாய் காலத்தில் உடல் வெப்பமடைவதை தடுத்து, வறட்டு இருமல் வருவதையும் தடுக்கிறது.

வெள்ளரிக்காய்: வெள்ளரிக்காயில் நீர்ச்சத்து 90 சதவீதம் உள்ளதால் வெள்ளரிக்காயை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், உடலின் வெப்பநிலை குறைந்து, உடல் குளிர்ச்சியுடனும், புத்துணர்ச்சியுடனும் இருக்கும். இதனால், தாக உணர்வு குறையும்.

வாழைப்பழம்: விலை மலிவாக கிடைக்கும் பழங்களுள் ஒன்று வாழைப்பழம். வாழைப்பழத்தை தினசரி சாப்பிட்டு வந்தால், உடல் வறட்சி அடைவதையும், தாகம் எடுப்பதையும் தடுக்கும்.

கிவி: கிவி பழம் புளிப்பு சுவை கொண்டிருந்தாலும், தாகத்தை தணிக்கும் தன்மை அதற்கு உண்டு. இதனால், உடல் வறட்சி அடையாமல் தடுக்கிறது.

ஆப்பிள்: எல்லா சீசன்களிலும் கிடைக்கும் பழ வகைகளில் ஒன்று ஆப்பிள். ஆப்பிளை அதிகம் சாப்பிடுவதால், அடிக்கடி தாகம் எடுப்பதைத் தடுக்கிறது.

ப்ளம்ஸ்: ப்ளம்ஸ் பழத்தில் நீர்ச்சத்து அதிகம் இருப்பதால், இது தாகத்தைப் போக்க உதவுகிறது. ப்ளம்ஸை அதிகம் சாப்பிட்டு வந்தால், உடல் வறட்சி அடைவதை தடுக்கலாம்.

தர்பூசணி: தர்பூசணியில் நீர்ச்சத்து அதிகம் உள்ளதால், இது உடல் வறட்சி, நா வறட்சியைப் போக்கி குளிர செய்கிறது. இதனால் உடல் வெப்பம் குறைந்து தாகத்தை தவிர்க்கிறது.

பசலைக்கீரை: உணவில் அடிக்கடி பசலைக்கீரையை சேர்த்துக் கொண்டால் தாகம் எடுக்காமல் பார்த்துக் கொள்ளலாம். இந்த கீரையை பைல்ஸ் உள்ளவர்கள் சாப்பிட்டு வந்தால், உடலில் நீர்ச்சத்து அதிகரித்து, மலச்சிக்கல் பிரச்னையில் இருந்தும் விடுபடலாம்.

தொகுப்பு: ரிஷி