தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

ஆரோக்கியமாக இருக்க கடைபிடிக்க வேண்டியவை!

நன்றி குங்குமம் டாக்டர்

தினமும் சரியான உணவுடன், போதிய உடற்பயிற்சியை தவறாமல் பின்பற்றி வந்தால், நிச்சயம் நான்கே வாரத்தில் உடலை ஃபிட்டாக வைத்துக் கொள்ளலாம். அவை என்னவென்று பார்ப்போம்:

முதல் வாரம்

உணவில் கவனம் செலுத்துங்கள்

உடல் சீராகவும், ஆரோக்கியமாகவும் செயல் பட உணவு மிக மிக முக்கியமானது. எனவே தினசரி, ஆரோக்கியமான சமச்சீர் உணவை உண்ண பழகிக் கொள்வது மிக மிக அவசியமாகும். அதுவே உடலை ஃபிட்டாக வைத்துக் கொள்ள உதவும்.

இரண்டாவது வாரம்

தூக்கத்தை மேம்படுத்துங்கள்

தூக்கம் மிகவும் இன்றியமையாதது. இரவில் அதிக நேரம் கண்விழிக்காமல் சரியான நேரத்திற்கு தூங்கி, சரியான நேரத்திற்கு எழுந்தரிப்பதை பழக்கப்படுத்திக் கொள்ளுங்கள். போதிய அளவு தூக்கத்தை ஒருவர் மேற்கொண்டால், மன அழுத்தமும் குறைந்து உடல் ஆரோக்கியம் பெறும்.குறைந்தபட்சம் தினமும் ஏழு மணி நேரமாவது உறங்குங்கள்.

மூன்றாவது வாரம்

உடற் பயிற்சியை மேற்கொள்ளுங்கள்:

தினமும் காலையில் தவறாமல் 45 நிமிடம் நடைபயிற்சி, ஓட்டம், சைக்கிளிங் போன்ற உடற்பயிற்சி செய்வதை கட்டாயமாக்கிக் கொள்ளுங்கள். மேலும் எந்த ஒரு இடத்திலும் லிப்ட் பயன்படுத்துவதை தவிர்த்து, முடிந்தளவு படிக்கட்டுக்களை பயன்படுத்தினால், அடிவயிறு மற்றும் தொடையில் தங்கியுள்ள கொழுப்புக்கள் கரைந்து, வயிறு மற்றும் தொடை ஃபிட்டாக இருக்கும்.

நான்காவது வாரம்

நிரந்தர மாற்றத்தை ஏற்படுத்துங்கள்

மேலே உள்ள மூன்று வார பயிற்சிகளையும் முறையாக கையாளுவதை தினசரி பழக்கமாக்கிக் கொள்ளுங்கள். மேலும், பாசிட்டிவான எண்ணங்களை உங்களின் மனதில் உருவாக்கும் வழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். உங்களுக்குள் உன்னதமான ஆற்றல் மறைமுகமாக இருப்பதை உணருங்கள். நீங்கள் எந்தவிதமான கட்டுப்பாடும் இல்லாமல் வானில் சுதந்திரமாக பறக்கும் பறவையாக உணருங்கள்.

உங்கள் தினசரி அலுவலில் தியானம், யோகம் போன்றவற்றிற்கு இடம் கொடுங்கள். தினசரி சிறிது நேரத்தை விளையாட்டுக்காக ஒதுக்குங்கள். இவை அனைத்தும் உங்கள் வாழ்க்கைக்கு புத்துணர்ச்சி அளிக்கும். எனவே, இவை அனைத்திற்கும் முக்கியத்துவம் கொடுத்து, உங்கள் வாழ்க்கையில் நிரந்தர மாற்றத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். உடல் ஆரோக்கியமாகவும், பிட்டாகவும் நிச்சயம் ஆகும்.