தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

சுக்கின் மருத்துவ குணங்கள்!

நன்றி குங்குமம் டாக்டர்

பொதுவாக நம் சமையலறையில் பயன்படுத்தும் பெரும்பாலான பொருட்களில் மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன. அந்தவகையில் சுக்கில் அற்புதமான நன்மைகள் உள்ளன. இஞ்சியை உலர வைத்து சுக்கு தயாரிக்கப்படுகிறது. உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கக்கூடிய இந்த சுக்கின் நன்மைகளை இப்போது பார்க்கலாம். செரிமானத்தை மேம்படுத்தும்சுக்கு செரிமானத்திற்கு மிகவும் நல்லது. இதில் அதிக அளவு நார்ச்சத்து உள்ளது. அஜீரணம் அல்லது மலச்சிக்கல் போன்ற வயிறு சார்ந்த பிரச்சனை உள்ளவர்களுக்கு சுக்கு தண்ணீர் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இது வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தும். இதில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் வயிற்றில் உள்ள செரிமான சாறுகளை நடுநிலைப்படுத்த உதவுகின்றன.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்

எந்த ஒரு தொற்று நோயையும் எதிர்த்துப் போராட நோய் எதிர்ப்பு சக்தி வலுவாக இருக்க வேண்டியது அவசியம். இந்நிலையில் நோய் எதிர்ப்பு சக்தி பலவீனமாக இருந்தால் நோய் வாய்ப்படுவதற்கான வாய்ப்பும் அதிகரிக்கும். சுக்கில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த உதவுகின்றன.

மாதவிடாய் வலிக்கு நிவாரணம் தரும்

நம் வீட்டு சமையலறையில் உள்ள ஒரு சில பொருட்களை வைத்தே மாதவிடாய் வலியை சுலபமாக போக்கலாம். அவற்றில் சுக்கும் ஒன்று. சுக்கில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட் பண்புகள் மாதவிடாய் வலியிலிருந்து நிவாரணம் தரும்.

சளி மற்றும் இருமலை சரி செய்யும்

சளி அல்லது இருமல் இருக்கும் சமயத்தில் இஞ்சி டீ குடிப்பது இதமாக இருக்கும். ஆனால் சளி மற்றும் இருமலுக்கு சுக்கு அதிக நன்மை பயக்கும் என்பது உங்களுக்கு தெரியுமா? சுக்கின் முழு நன்மைகளையும் பெற அதில் கஷாயம் செய்து குடிக்கலாம். மேலும் இருமல் மற்றும் சளியில் இருந்து நிவாரணம் பெற வெதுவெதுப்பான நீரில் சுக்கு பொடியையும் கலந்து குடிக்கலாம்.

எடை இழப்பு

சுக்கு செரிமானத்தை மேம்படுத்துவதோடு மட்டுமின்றி உடலில் தேங்கியுள்ள கொழுப்பையும் குறைக்க உதவுகிறது. இதில் உள்ள தெர்மோஜெனிக் பண்புகள் வளர்சிதை மாற்றத்தை வலுப்படுத்துவதன் மூலம் கொழுப்பு உறிஞ்சுதலைக் கட்டுப்படுத்துகின்றன.

அதேசமயம், சுக்கு ஒரு சில உடல்நல பிரச்சனைகளுக்கு தீங்கு விளைவிக்கலாம். இது சில ஒவ்வாமை எதிர்வினைகளையும் கொண்டிருக்கலாம். ஆகையால் அதை சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும். இதனை மருத்துவர் அல்லது நிபுணரின் ஆலோசனைக்கு பிறகு எடுத்துக்கொள்வது நல்லது.

தொகுப்பு: தவநிதி

Related News