தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

முதுகெலும்பின் முக்கியத்துவம்!

நன்றி குங்குமம் டாக்டர்

இயன்முறை மருத்துவர் ந.கிருஷ்ணவேணி

L3,L4 டிஸ்க் பல்ட்ஜ், டிஸ்க் புரொலாப்ஸ், சயிட்டிக்கா டிஸ்க் பல்ட்ஜ் இருக்கு பாருங்க ஸ்கேன் எடுக்க சொன்னாங்க ஸ்கேன் ரிப்போர்ட்டும் கொண்டு வந்திருக்கேன் இதை சரி செய்யமுடியுமா?

டிஸ்க் ரிப்பேரானால் என்னால் பழையபடி வேலைகளை செய்யமுடியுமா? தண்டுவடம் அங்க தானே இருக்கு இதனால் வேற ஏதாவது பிரச்னை வருமா? இது போன்ற பல கேள்விகளோடு தான் முதுகு வலிக்கான தீர்வைத் தேடி பலர் மருத்துவரை அணுகுவர்.சிலர் தானாகவே பல ரீல்ஸ் வீடியோக்களை பார்த்து விட்டு எனக்கு சயிட்டிகா உள்ளது, டிஸ்க் பல்ட்ஜ் உள்ளது எனக் கூறி சிகிச்சைக்காக வருவர்.

லம்பார் இடுப்பு முதுகு எலும்புகள் மொத்தமே ஐந்து தான் உள்ளது அதில் டிஸ்க், தசை நாண்கள், நரம்புகளுக்கு இவ்வளவு மதிப்பா? முதுகெலும்புகளிலேயே ஏன் இந்த லம்பார் எலும்புகளுக்கு மட்டும் இத்தனை முக்கியத்துவம் எனத் தோன்றலாம்.அந்த எலும்புகளைப் பற்றியும் அதன் உடற்கூறுவியலைப் பற்றியும் ஓரளவு தெரிந்து கொண்டால் மட்டுமே இதற்கான விடையைக் கண்டறிய முடியும். இந்தப் பகுதி கொஞ்சம் பாடப் புத்தகத்தை படிப்பது போல் இருக்கும் முடிந்தவரை எளிமைப்படுத்தி விளக்கியுள்ளேன்.

இடுப்பு முதுகெலும்பின் உடற்கூறியல் மற்றும் நோயியல் இயக்கவியல்

இடுப்பு முதுகெலும்பின் உடற்கூறியல்:

இடுப்பு முதுகெலும்பு (Lumbar Spine) :

உடலின் கீழ் முதுகுப் பகுதியில் அமைந்துள்ள இடுப்பு முதுகெலும்பானது உடல் எடையைத் தாங்குவதற்கும், இயக்கத்தை எளிதாக்குவதற்கும், முதுகுத்தண்டு, நரம்பு மண்டலத்தைப் பாதுகாப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது.

இது ஐந்து முதுகெலும்புகளால் (L1 முதல் L5 வரை) ஆனது, இவை முதுகெலும்பு வரிசையில் மிகப் பெரியவை மற்றும் வலிமையானவை. லம்பாருக்கும் மேலுள்ள முதுகுப்பகுதியாவதும் முன்பக்கம் நெஞ்செலும்புகளால் பிணைக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த லம்பார் எலும்புகள் முன்புறம் வயிற்றுத் தசைகளால் மட்டுமே பிணைக்கப்பட்டுள்ளது.

1. முதுகெலும்புகள் (Vertebrae)

ஒவ்வொரு இடுப்பு முதுகெலும்பும் பெரிய, உருளை வடிவ உடலைக் (Vertebral Body) கொண்டுள்ளது, இது உடல் எடையைத் தாங்க உதவுகிறது. முதுகெலும்பு வளைவு (Vertebral Arch), பெடிக்கிள்கள் (Pedicles) மற்றும் லேமினாக்கள் (Laminae) ஆகியவற்றால் உருவாக்கப்பட்டு, முதுகுத்தண்டுவடத்தின் வழித்தடத்தையும் (Spinal Canal) பாதுகாக்கிறது. முதுகு முள் முனை (Spinous Process) மற்றும் குறுக்கு முனைகள் (Transverse Processes) தசைகள் மற்றும் தசைநாண்களுக்கு (ligament) இணைப்பு புள்ளிகளாக உள்ளன.

2. இடைத்தகடுகள் (Intervertebral Discs)

முதுகெலும்புகளுக்கு இடையில் அமைந்த இந்த நார்க்குருத்தெலும்பு (Fibrocartilaginous) கட்டமைப்புகள், Shock Absorbersளாக செயல்படுகின்றன. ஒவ்வொரு தகடும் வெளிப்புற நார்ச் சுருள் (Annulus Fibrosus) மற்றும் உட்புற ஜெல் போன்ற மையப்பகுதி (Nucleus Pulposus) கொண்டவை. இவை இயக்கத்திற்கு நெகிழ்வுத்தன்மையையும், மிருதுத் தன்மையையும் வழங்குகின்றன.

3. Facet Joints

அருகிலுள்ள முதுகெலும்புகளை இணைக்கும் இந்த Synovial கூட்டமைப்புகள், கட்டுப்படுத்தப்பட்ட இயக்கங்கள் அதாவது வளைவு, நீட்சி, மற்றும் சுழற்சி போன்றவற்றை அனுமதிக்கின்றது. இவை குருத்தெலும்பால் மூடப்பட்டு, Joint Capsuleலால் சூழப்பட்டுள்ளன.

4. தசைநாண்கள் (Ligaments)

*முன் நீளவாக்கு தசைநாண் (Anterior Longitudinal Ligament): அதிக நீட்சியைத் தடுக்கிறது.

*பின் நீளவாக்கு தசைநாண் (Posterior Longitudinal Ligament): அதிக வளைவைத் தடுக்கிறது.

*லிகமெண்டம்‌ ஃப்ளேவம் (Ligamentum Flavum): முதுகெலும்பு நிலைத்த தன்மையைப் பராமரிக்கிறது.

*இடைமுள் தசைநாண்கள் (Interspinous Ligaments): முதுகு முள் முனைகளை இணைக்கின்றன.

5. தசைகள் (Muscles):

இடுப்பு முதுகெலும்பின் வடிவமைப்பு, வலிமை மற்றும் நெகிழ்வுத்தன்மையை சமநிலைப்படுத்தி, வளைவு, சுழற்சி, மற்றும் எடையுள்ள பொருட்களைத் தூக்குதல் போன்ற இயக்கங்களை அனுமதிக்கிறது.இடுப்பு முதுகெலும்பானது கீழ்க்கண்ட தசைகளால் பிணைக்கப்பட்டு இயக்கப்படுகிறது.

*எரெக்டர் ஸ்பைனே (Erector Spinae) - முதுகு நீட்சிக்கும்,

*மல்டிஃபிடஸ் (Multifidus) - முதுகெலும்பு நிலைப்படுத்தலுக்கும்

*சோயஸ் மேஜர் (Psoas Major ) - இடுப்பு வளைவு இயக்கத்திற்கும் உதவுகிறது.

*அடிவயிற்று தசைகள் (Transversus Abdominis) முதுகெலும்பு நிலைத் தன்மைக்கு உதவுகின்றன.

6. நரம்புகள் (Nerves)

இடுப்பு முதுகு நரம்புகள் (L1-L5) இடைத்துவாரங்கள் (Intervertebral Foramina) வழியாக வெளியேறி, கீழ் மூட்டுகள் மற்றும் இடுப்பு உறுப்புகளுக்கு உணர்வு அளிக்கின்றன.

குதிரைவால் போன்ற அமைப்பு உடைய ஒரு கொத்து நரம்புகள் (Cauda Equina), முதுகுத்தண்டு முடிவில் (L1-L2ல் முகுகுத் தண்டுவடம் முடிவடைகிறது) இருந்து இடுப்பு முதுகெலும்பு வழியாக நீள்கிறது.

இடுப்பு முதுகெலும்பின் நோயியல் இயக்கவியல்

நோயியல் இயக்கவியல் (Pathomechanics) என்பது இயல்பற்ற இயந்திர செயல்பாடு காரணமாக ஏற்படும் காயங்கள் அல்லது செயலிழப்பைக் குறிக்கிறது. இடுப்பு முதுகெலும்பு, அதன் எடை தாங்கும் பணி மற்றும் இயக்கத்தன்மை காரணமாக, நோய்களுக்கு ஆளாகிறது.

1. Disc Herniation

காரணங்கள்: அதிக அல்லது மீண்டும் மீண்டும் டிஸ்குகளில் ஏற்படும் அழுத்தம் காரணமாக ஏற்படுகிறது.(எ.கா., கனமான பொருட்களைத் தூக்குதல்) நார்ச் சுருளில் (Annulus Fibrosus) கிழிவை ஏற்படுத்தி, மையப்பகுதி (Nucleus Pulposus) வெளியேறுகிறது. இது பொதுவாக L4-L5 அல்லது L5-S1 பகுதிகளில் ஏற்படுகிறது.

விளைவுகள்: வெளியேறிய தகடு (disc) முதுகு நரம்புகள் அல்லது குதிரைவால் அமைப்பிலுள்ள cauda equina வை அழுத்தி, வலி, உணர்வின்மை அல்லது கால்களில் பலவீனத்தை ஏற்படுத்து

கிறது.

ஆபத்துக் காரணிகள்: நீண்ட நேரம் உட்கார்ந்து வேலை செய்யும்படியான வாழ்க்கைமுறை, உடல் பருமன், முறையற்று எடை தூக்குதல், மற்றும் மீண்டும் மீண்டும் வளைதல் அல்லது சுழற்சி.

2. Degenerative Disc Disease :

காரணங்கள்: வயது மூப்படைதல் அல்லது மீண்டும் மீண்டும் டிஸ்குகளில் ஏற்படும் அழுத்தம், தகடுகளின்(disc) நீர் மற்றும் நெகிழ்வுத்தன்மையை குறைக்கிறது, இதனால் தகடு மெலிவடைகிறது.

விளைவுகள்: இது முகக் கூட்டமைப்புகளில் அழுத்தத்தை அதிகரிக்கிறது, எலும்பு முளைப்பு (Osteophytes) உருவாக்கம், மற்றும் நாள்பட்ட முதுகுவலியை ஏற்படுத்துகிறது.

ஆபத்துக் காரணிகள்: வயதாதல், மரபு, புகைபிடித்தல் மற்றும் தொழில்சார் அழுத்தம்.

3. Facet Joint Dysfunction

காரணங்கள்: அதிக பயன்பாடு, காயம், அல்லது மூட்டுவலி (Arthritis) facet joint குருத்தெலும்பை சேதப்படுத்தி, வீக்கம் அல்லது செயலிழப்பை ஏற்படுத்துகிறது.

விளைவுகள்: உள்ளூர வலி, விறைப்பு, மற்றும் இயக்க வரம்பு குறைவு மற்றும் வலியானது புட்டங்களில் அல்லது தொடைகளுக்கு பரவலாம்.

ஆபத்து காரணிகள்: மீண்டும் மீண்டும் நீட்சி இயக்கங்கள் (எ.கா., விளையாட்டு வீரர்கள்) மற்றும் மோசமான தோரணை.

4. Spondylolisthesis

காரணங்கள் : ஒரு முதுகெலும்பு அதற்கு கீழே உள்ள முதுகெலும்பு மீது முன்னோக்கி நழுவுகிறது, பொதுவாக அழுத்தத்தினால் முறிவு (Spondylolysis) அல்லது சிதைவு மாற்றங்கள் காரணமாகவும் ஏற்படும்.

விளைவுகள்: இது முதுகெலும்பு சீரமைப்பை மாற்றி, நரம்பு அழுத்தத்தை ஏற்படுத்தி, வலி, உணர்வின்மை, அல்லது தசை பலவீனத்தை உருவாக்குகிறது.

ஆபத்து காரணிகள்: அதிக தாக்கம் உள்ள விளையாட்டுகள்(high impact), பிறவி குறைபாடுகள், அல்லது சிதைவு மாற்றங்கள்.

5. Spinal Stenosis

காரணங்கள்: முதுகு கால்வாயின் அல்லது வழிப்பாதை அல்லது இடைத்துவாரங்கள் குறுகுவதை spinal stenosis என்போம், தகடு வீக்கம், எலும்பு முளைப்பு, அல்லது தசைநாண் தடித்தல் போன்ற காரணங்களால் இது ஏற்படும்.

விளைவுகள்: நரம்பு அழுத்தம், வலி, உணர்வின்மை, அல்லது நடக்கும்போது பலவீனம்.

ஆபத்துக் காரணிகள்: வயதாகுதல், மூட்டுவலி, மற்றும் முன்பு ஏற்பட்ட முதுகு காயங்கள்.

6. Muscle and Ligament Strain. (தசை மற்றும் தசைநாண் வலி)

காரணங்கள்: திடீர் இயக்கங்கள், கனமான பொருட்களைத் தூக்குதல், அல்லது மோசமான தோரணை காரணமாக தசைகள் அல்லது தசைநாண்கள் அதிகமாக இழுக்கப்பட்டு கிழிதலால் ஏற்படும்.( முதுகு சுளுக்கிருச்சின்னு சொல்வோம்ல அதான் இது)

விளைவுகள்: உள்ளூர வலி, தசைப்பிடிப்பு, மற்றும் கட்டுப்படுத்தப்பட்ட இயக்கம்.

ஆபத்து காரணிகள்: பலவீனமான அடிவயிற்று தசைகள், முறையற்ற எடை தூக்கும் முறைகள், மற்றும் நீண்ட நேரம் உட்கார்ந்திருத்தல்.

7. Scoliosis or Abnormal Curvatures :

காரணங்கள்: பிறவி காரணங்கள், தசை சமநிலையின்மை, அல்லது சிதைவு மாற்றங்கள் காரணமாக பக்கவாட்டு வளைவு (Scoliosis) அல்லது இயல்பான இடுப்பு வளைவின் (Lumbar Lordosis) இழப்பு/மிகுந்திருத்தல்.

விளைவுகள்: சமனற்ற எடை பகிர்வு, வலி, சோர்வு, மற்றும் வேகமாக சிதைவுறுதல்.

ஆபத்து காரணிகள்: பிறப்பு காரணங்கள், நரம்பு தசை கோளாறுகள்.

உயிரியல் இயக்கவியல் காரணிகள் (Biomechanical Factors):

இடுப்பு முதுகெலும்பின் நோயியல் இயக்கவியல் பலவற்றிற்கு உயிரியல் இயக்கவியல் மாற்றங்கள் காரணமாகின்றன:

அதிக எடை அழுத்தம்:

கனமான பொருட்களைத் தூக்குதல் அல்லது மீண்டும் மீண்டும் ஏற்படும் அழுத்தம், தகடு உள் அழுத்தத்தை அதிகரிக்கிறது, தகடு கழன்று வெளியேறுதல் அல்லது சிதைவு ஏற்படுகிறது.

மோசமான தோரணையில் உட்காருதல்:

நீண்ட நேரம் உட்காருதல் அல்லது முதுகை வளைத்து முன்னோக்கி தலை வளைந்து குனிந்து உட்காரும் போது முதுகெலும்பானது சீரமைப்பை மாற்றி, தகடுகள் மற்றும் facet jointsல் அழுத்தத்தை உருவாக்குகிறது.(எ.கா கம்யூட்டரில் நீண்ட‌நேரம் வேலை செய்பவர்கள்)

பலவீனமான அடிவயிறு தசைகள்:

வயிறு மற்றும் முதுகு தசைகளின் பலவீனம் முதுகெலும்பில் அழுத்தத்தை அதிகரிக்கிறது.

சமன் இன்மை:

ஒரு புறமாக எடை பகிர்வு (எ.கா., ஒரு பக்கத்தில் கனமான பைகளைத் தூக்குதல்) இழுத்தல் வலியை ஏற்படுத்தும்.

எக்ஸ்ரே (X-Ray), எம்ஆர்ஐ (MRI), அல்லது சிடி (CT) ஸ்கேன்கள் மூலம் டிஸ்க் பல்ட்ஜ், அழுத்தம் அல்லது குறுக்குதல் போன்ற கட்டமைப்பு சிக்கல்கள்

கண்டறியப்படுகின்றன.

சில சிறப்பு உடல் பரிசோதனைகள்( special test ) வலி, இயக்க வரம்பு, மற்றும் நரம்பியல் அறிகுறிகளை மதிப்பிடுகின்றன.

பிசியோதெரபி சிகிச்சை

முதலில் வலியைக் குறைக்கும் சிகிச்சைகள்‌ மேற்கொள்ளப்பட்டு பின்பு‌ வலி குறைந்ததும் உடற்பயிற்சிகள் கற்பிக்கப்படும்.

அதாவது, அடிவயிறு தசை வலுப்படுத்தும் பயிற்சி, மற்றும் உட்கார்நிலை திருத்தம் போன்றவை கற்பிக்கப்படும். வலி குறைப்பு சிகிச்சை பயனளிக்காத போது எலும்பு‌அறுவைசிகிச்சை நிபுணர்கள் நோயின் கடுமையான நிலையில், எபிடுரல் ஊசி (Epidural Injections) அல்லது அறுவைசிகிச்சையை பரிந்துரைப்பர்.

வரும் முன் காப்பதே சிறந்தது ஆகவே முறையான உடற்பயிற்சி, சரியான எடை தூக்கும் முறைகள், எர்க்கனோமிக் மாற்றங்கள், மற்றும் ஆரோக்கியமான உடல் எடையை பராமரித்தல்

ஆபத்தைக் குறைக்கும்.