தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

கேள்வியின் நாயகியே…

நன்றி குங்குமம் டாக்டர்

செவ்விது செவ்விது பெண்மை!

மனநல மருத்துவர் மா.உஷா நந்தினி

சமூகவியல் பார்வை:

“நான் மட்டும் இல்லை!”

நான் மட்டும் தான் இப்படி சிந்திக்கிறேனா?

என்ன கண்ணீரும், கலக்கமும் எனக்கே சொந்தமா?

இல்லை, என் தோழிக்கும், என் அக்காவுக்கும்

அதே மாதிரி நிலைதானா…….

சமூகம் சொல்வது:

“நீ பெண்... நீ அழகு... நீ தாய்!”

ஆனா என் ஆசை? என் சுவை? என் பாதை?

அவைகளை கேட்பவரே இல்லை என தோன்றும் சில நேரங்களில்...

வாழ்க்கை என்ன சொல்கிறது என நான் தேடிக்கொண்டிருக்கையில்,

சமூகம் என்ன சொல்கிறது என்பதே இடையூறாகிறது...

நம்புங்கள், இந்தக் கவலை, இந்தக் குழப்பம்

உங்களுக்கு மட்டும் இல்லை... இது நம்ம எல்லோருக்குமானது!

தனி ஒருவன் போல தோன்றினாலும்,

இது தனி ஒருவனின் பிரச்னை அல்ல.

இது சமூகத்தின் அமைப்புகளால் உருவான ஒரு கூட்ட பிரச்னை.

இதற்குத் தீர்வு: நாம் பேசுவதைத் தொடங்குவதுதான்.

1. நான் வேலைக்கும் குடும்பத்துக்கும் சமமாக எப்படி நேரம் கொடுக்கலாம்?

இது எல்லா பெண்களுக்கும் வரும் ஒரு கேள்வி. வீட்டிலும் வேலைக்கும் சமமாக செய்வதற்கு குடும்பம் உதவ வேண்டும். கணவர், பெற்றோர், சகோதரர் எல்லாரும் வேலைகளைப் பகிர்ந்து செய்தால், பெண்கள் மனஅழுத்தம் இல்லாமல் சமநிலையாக இருக்கலாம். இன்னும் பல வீடுகளில் பெற்றோர்கள் பெண்பிள்ளைகளிடம் நெறைய வேலைகளை தருவது. நீ பொண்ணு! இது எல்லாம் நீ கத்துக்கணும் என சொல்லி வீட்டு வேலைகளை செய்ய சொல்வது உள்ளது. ஆனால் ஆண் பிள்ளைகளிடம் இவ்வாறு வேலைகளை வாங்குவது இல்லை. ஆண் பிள்ளையோ பெண் பிள்ளையோ இருவருக்கும் வீட்டில் வேலைகளை பகிர்ந்தளிக்க வேண்டும். நம்ம வீட்டிலிருந்தே இந்த மாற்றம் ஏற்படவேண்டும் - பணியைப் பகிர்ந்து செய்யணும்.

2. என் தோற்றம் வேறுபடுது… ஏன் எனக்கு அதுக்காக வருத்தம்?

மற்ற பெண்களைப் பார்த்து ஒப்பிடுறதால்தான் வருத்தம் வரும். உண்மையில் ஒவ்வொருவரும் தனி தனி அழகு. சமூகமோ, தொலைக்காட்சியோ ஒரு மாதிரியான முகம், உடல் மற்றும் நிறம் மட்டுமே அழகு என்று சொல்கிறது. ஆனால் அது உண்மை இல்லை. நமக்கான மதிப்பீடு நம் உடல் அழகையோ அல்லது முக பொழிவையோ பார்த்து வருவதை விட நம் எண்ணங்கள், கடின முயற்சி மற்றும் பல வெற்றிகளின் மூலமே தீர்மானிக்கப்படுகிறது.

உடல் பருமனாக இருப்பவரிடம் நீ இன்னும் கொஞ்சம் உடம்ப குறைக்கலாம்.... என்றும் உடல் எடை குறைவாக இருப்பவர்களிடம் நீ இன்னும் கொஞ்சம் உடம்பு போட்டா தான் அழகா இருப்ப என்றும் இந்த சமூகம் மாறி மாறி கருத்துக்களை வைத்துக் கொண்டே தான் இருக்கும். நம் உடலை நாம் மதிக்க வேண்டும் இதுதான் நான் என்று நம்ப வேண்டும். அதுவே இது போன்ற எண்ணங்களை நாம் கடந்து செல்ல வழிவகுக்கும்.

3. நல்ல உறவு எதுவும் என் வாழ்க்கையில் வரலையே… ஏன்?

இப்போதுள்ள சூழலில் நாம் அனைவரும் வேகமாக ஓடிக்கொண்டு இருக்கிறோம். எல்லாம் வேகமாக நடக்குது. நம்பிக்கையோ, பொறுமையோ, குறைகளை ஏற்றுக்கொள்ளும் மனப்பான்மையே குறைவா இருக்கு. பழைய காலத்து உறவு பாசம், பொறுமை இப்போ சில நேரம் குறைவா இருக்கு. அதான் உறவுகள் நிலைபெறாம இருக்குது. உண்மையான உறவு வந்தா நாமும் பாசம் காட்ட வேண்டும் , புரிந்து கொள்ளவேண்டும் மற்றும் நம் குறைகளை ஏற்று நடக்க வேண்டும்.

4. என் பாலியல் உணர்வுகள் சரியா? நான் ஏன் யாரிடமும் சொல்ல தயங்குறேன்?

அது இயல்பு. ஆனால் சமூகம் பெண்கள் இதை வெளிப்படுத்தக் கூடாது என்று சொல்லுது. ஆண்கள் சொல்லலாம், பெண்கள் அதை பற்றி சொல்லக் கூடாது? இதுவே சமூகத்தில் இரட்டை நெறிமுறை. இது மாறவேண்டும். நாமே நம்ம உணர்வுகளை மதிக்கவேண்டும்.

5. எனக்கு குழந்தை பிறக்கவில்லை… ஏன் மனம் புண்படுது?

சமூகம் ஒரு பெண் என்றாலே தாயாக வேண்டும் என நினைக்கிறது. ஆனால் தாய்மை என்பது ஒரு தேர்வு. அதற்காக நம்ம மதிப்பு குறையாது. உங்களை மட்டும் அல்ல, பல பெண்கள் இதுபோலவே உணர்கிறார்கள். சமூகத்திற்காக குழந்தை பெற்று கொள்வது என்பது சரியான முடிவு இல்லை. இது reproduction-ஐ ஒரு சமூக கடமையாக மாற்றுகிறது. பெண்கள் தாயாக மாறணுமா இல்லையா என்பதைத் தாங்களே முடிவெடுக்க வேண்டும். அது உங்கள் உரிமை.

6. தாயாக ஆன பிறகு, நான் நானாக இல்லாத மாதிரி இருக்கு… ஏன்?

நம்ம வாழ்க்கையில் ஒரு பெரிய மாற்றம் இது. குழந்தைக்கு முக்கியத்துவம் கொடுக்கும்போது, நம்மை மறந்துபோகிற மாதிரி தோன்றும். இது இயல்பு. கொஞ்ச நாள் கழிச்சு, பழைய நிலைக்கு திரும்ப முடியும்.

7. என் மீது சமூகம் போட்ட அழுத்தங்களைச் சமாளிக்க முடியலை…

பெண்கள் எப்படி இருக்கணும், என்ன செய்யணும் என்று நெறிமுறைகள் நிறைய இருக்குது. ஆனால் நம்ம விருப்பத்தை நாமே தேர்ந்தெடுக்கணும். சமூகம்தான் மாறணும். அதற்குப் பெரிய மாற்றம் நாமே ஆரம்பிக்கலாம்.

8. என்னை சுற்றியுள்ளவர்களுடன் இணைப்பு இல்லாத மாதிரி இருக்கு…

இப்போதைய வாழ்க்கை எல்லாம் தனித்தனியாக போகுது. முந்தைய காலத்துல, குடும்பம், தோழிகள் எல்லாம் நம்மை சுற்றி இருந்தாங்க. இப்போ, ஒவ்வொருவரும் தனியாக இருப்பதால்தான் இந்த உணர்வு வரும். பேசும் வட்டத்தை உருவாக்குங்க.

9. நான் பணத்தை நிர்வகிக்க முடியாமையால் மனம் கவலையா இருக்கு… ஏன்?

ஒரு பெண்ணுக்கு பண சுதந்திரம் முக்கியம். நிதியை நாம் தான் கட்டுப்படுத்தணும். நம்ம செலவுகளை திட்டமிட்டு வைக்கணும். இது நம்ம மனநலத்தையும், நம்ம மதிப்பையும் உயர்த்தும்.

10. என் வாழ்க்கைக்கு என்ன நோக்கம்? எனக்கே தெரியலையே…

இது ஒவ்வொரு நபருக்கும் ஏற்படும் கேள்வி . எல்லாருமே ஒரே நேரத்தில் தங்கள் வாழ்க்கை நோக்கத்தை கண்டுபிடிக்க முடியாது. படிக்கிறவர்களும், பெரியவர்களும் கூட இந்தக் கேள்வியிலேயே இருக்கிறார்கள். Reflexive Modernity இன்படி, ஒரு நபர் தனது வாழ்க்கையின் மீது சுயமாக சிந்தித்து, புதிய பாதையை உருவாக்க முயற்சிக்கிறார். இது ஒரு பண்பாட்டு மாற்றமாக பார்க்கப்படுகிறது.

11. இது எல்லாம் நானே சமாளிக்க முடியுமா?

நீங்கள் தனியாக இல்லை. இது தனிப்பட்ட பிரச்சனை இல்லை. உங்கள் சூழ்நிலைகளும், சமூக விதிகளும் இதில் முக்கிய பங்காற்றுகின்றன. மனநல ஆலோசகர், நம்பிக்கையான நண்பர்கள், குடும்ப ஆதரவு இவை அனைத்தும் உங்களை உயர்த்தும். உதவி கேட்க பயப்படாதீர்கள். ஒரு நபரால் மட்டுமே இது முடியாது.குறிப்பு : இந்த கேள்விகள் பல பெண்களின் மனதில் இருக்கும். நீங்கள் அனுபவிப்பது சாதாரணமான உணர்வுகள். உங்கள் வாழ்க்கையை உங்கள் விதியில்தான் வாழ வேண்டும். சமூக மாற்றம் நம்மிடமிருந்துதான் துவங்கும்.

Related News