தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

நலம் தரும் நாவல் பழம்!

நன்றி குங்குமம் தோழி

Advertisement

‘‘சுட்டப் பழம் வேண்டுமா... சுடாத பழம் வேண்டுமா..?” என்றபடி ஔவைக்கு முருகப்பெருமான் ஈந்த பழம்! பாரத மண்ணின் பழம்பெரும் பழம்! கோடை முடிந்து ஆடிக்காற்று வீசத் தொடங்கியதும், வீதியெங்கும் விற்கப்படும் பழம்! அனைத்திற்கும் மேலாக, நலம் பல அள்ளித்தரும் ‘ஏழைகளின் திராட்சை’ எனப்படும் நாவல் பழத்துடன், இன்றைய இயற்கைப் பயணத்தை தொடர்வோம்..!

தனது கருநீல நிறத்தால் Black Jamun, Indian BlackBerry, Java plum, Malabar plum என ஆங்கிலத்தில் பலவாறு அழைக்கப்படும் நாவல் பழத்தின் தாவரப்பெயர் Syzygium cumini. தோன்றிய இடம் இந்தியா. வழக்கு மொழியில் நவாப்பழம், நாகப்பழம், நெகாப்பழம் என்றும் அழைக்கப்படும் இப்பழம், நேரேடு, மகாபலா, ஜாமூன், ஜம்பு, ஜம்பூல் என்ற பெயர்களில் பிற மாநிலங்களில் அழைக்கப்படுகிறது.

உண்மையில், நாவல் பழம் மிகவும் தொன்மையானது என்றும், நமது பாரத தேசத்துடன் தொடர்புடையது என்றும் வரலாறு கூறுகிறது. ஆதியில் நமது நாடு, நாவலந்தீவு என்றுதான் வழங்கப்

பட்டது என்றும், நாவல் பழ மரங்கள் நிறைந்து இருந்ததாலும், நாவினை ஒத்த தீபகற்ப வடிவம் கொண்டு இருந்ததாலும் அவ்வாறு அழைக்கப்பட்டதாக சொல்லப்படும் அதேசமயம், சிவபெருமானைக் குறிக்கும் வடமொழிச் சொல்லான ‘ஜம்பு’ எனும் சொல்லிலிருந்துதான், லிங்கம் போன்ற வடிவம் கொண்ட நாவல் பழம் பெயர் பெற்றது என்றும், ‘ஜம்பவத்தீவ்ஹ’ எனும் நமது தேசத்தைக் குறிக்கும் சொல் உருவானதே இந்த இரண்டிலும் இருந்துதான் என்றும் வடநாட்டில் சொல்லப்படுகிறது.

நமது தமிழ் ஆர்வலர்களோ, சங்கத்தமிழ் இலக்கியங்களில் அருகதம், நவ்வல், நம்பு, சாட்டுவலம், சாம்பல் என்ற பெயர்களிலெல்லாம் நாவல் பழம் அறியப்பட்டது என்பதுடன், இவற்றில் ஒரு பெயரான சாம்பல் என்பதே ‘சம்பு-ஜம்பு’ எனத் திரிந்திருக்கிறது என்றும் உறுதி செய்கின்றனர்.எதிலிருந்து கிடைக்கப்பெற்ற பெயர் என்றாலும், தனது தனித்துவமான சுவை, நிறம் மற்றும் குணங்களால் தனிச்சிறப்பு பெற்றக் கனியாக நாவல் பழம் இருப்பதுடன், சாலையோரங்களிலும், ஆற்றங்கரைகளிலும் தன்னிச்சையாக வளர்ந்து, கொத்துக்கொத்தாய் காய்க்கும் இந்த Drupaceous வகைக் கனிகள், எளிதாய் கிடைக்கும் என்பதால், ‘ஏழையின் திராட்சை’ என்றும் அழைக்கப்படுகின்றது.

நாவல் பழத்தில் சதைப்பற்று குறைவாகவும் விதை பெரிதாகவும் உள்ள நாட்டு வகை மற்றும் சதைப்பற்று கூடுதலாகவும் விதை சிறிதாகவும் உள்ள ஹைப்ரிட் வகை (Ram Jamun) என இரு வகை கனிகள் விற்பனைக்கு வருகின்றன. காயாக இருக்கும் போது பச்சை நிறத்திலும், சற்றே பழுத்த பழம் சிவப்பு நிறத்திலும், நன்கு பழுத்த பழம் கருமை நிறத்திலும் காணப்படும். தன்னிச்சையாக வளரும் இந்த நாவல் மரங்கள், நமது நாட்டில் மகாராஷ்டிரா, தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் உத்தரப்பிரதேச மாநிலங்களில் அதிகமாகக் காணப்படுகிறது. இந்தியா மட்டுமின்றி இலங்கை, நேபாள், பாகிஸ்தான், ஃபிலிப்பைன்ஸ் நாடுகளிலும், சமீபகாலமாய் கரீபியன் தீவுகள், ஃப்ளோரிடா மற்றும் கலிஃபோர்னியா மாகாணங்களிலும் நாவல் பழம் விளைவிக்கப்பட்டு வருகின்றது.

நூறடி உயரமும் நூறு ஆண்டுகளுக்கு மேலாகத் தொடர்ந்து காய்க்கக்கூடிய தன்மையும் கொண்ட நாவல் மரம், கடும்பனி, அடர் மழை, சுடும் வெயில் என அனைத்து தட்பவெப்ப நிலைகளையும் தாங்கும் ஆற்றல் கொண்டது என்பதுடன், கோடையில் சுவையான பழங்களைத் தந்து, நல்ல நிழலையும் தந்து, அதேசமயம் மண் வளத்தையும் காக்கின்றது. நாவல் மரத்தின் இலைகள் பந்தலாகவும், இதன் உறுதியான மரம் மாட்டு வண்டிகள், ரயில் இருக்கைகள் தயாரிப்பு மற்றும் கட்டிடக் கட்டுமானம் எனவும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

சாலையோரங்களில் அசோக மன்னர் நட்ட மரங்களில் நாவல் மரமும் ஒன்று எனவும், தில்லியின் சாலைகளுக்கு அழகு சேர்ப்பவை நாவல் மரங்களே என்றும், இந்த மரங்களையும், அது தரும் பயன்களையும் உபயோகப்படுத்துமாறு ‘Trees of Delhi’ என்ற வரலாற்றுப் புதினத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.இனிப்பும், துவர்ப்பும் சேர்ந்ததொரு சுவையைக் கொண்ட இந்தக் கருநீல நாவல் பழத்தை உட்கொண்டதும், நமது நாவின் நிறம் மாறுவதற்குக் காரணமான, ஆன்த்தோ-சயனின் (Anthocyanin) எனப்படுகிற நிறமி, பல்வேறு மருத்துவ குணங்களுக்குக் காரணமாய் இருந்து வருகிறது. நாவல் பழம் மட்டுமின்றி, இதன் இலை, மரப்பட்டை, வேர், விதை என அனைத்தும் மருத்துவக் குணங்கள் நிறைந்தவை என்றாலும், நாவல்பழத்தின் விதைகள், நீரிழிவு நோய் எனப்படும் சர்க்கரை கட்டுப்பாட்டுக்கான திறனாய் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

அதிக நீர்த்தன்மையும், அதிக நார்ச்சத்தும், குறைந்த அளவிலான கலோரிகளும் உள்ள நாவல் பழத்தில், ஆன்த்தோ-சயனின் நிறமி மட்டுமின்றி, வைட்டமின் A, C, B-1,2,6, கால்சியம், மெக்னீசியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், இரும்புச்சத்து, தாமிரம், சோடியம் போன்ற அத்தியாவசிய சத்துகளும் நிரம்பியுள்ளன. நாவல் பழத்தின் துவர்ப்பு சுவை(astringent) செரிமானத்திற்கு முக்கியக் காரணமாக விளங்குவதுடன், காலிக் அமிலம் (Gallic acid), டானின்கள் (tannins), ஐசோ-க்வர்செடின் (Isoquercetin), கெம்ப்ஃபெரால் (Kaempferol), கரோட்டினாய்டுகள் (Carotenoids), ஃப்ளாவனால் (Flavonols) உள்ளிட்ட 35த்திற்கும் அதிகமான தாவரச்சத்துகள் நாவலின் பல்வேறு மருத்துவ குணங்களுக்குக் காரணமாக இருக்கின்றன.

நாவல் பழத்தின் மருத்துவ குணங்களைக் குறிப்பிட்டுக் கூறவேண்டும் என்றால், உணவு செரிமானத்தைக் கூட்டி, பசியின்மைக்கான முக்கிய உணவாய் இடம்பெறுவதுடன், இரைப்பை, குடல், ஆசனவாய் பகுதிகளின் அழற்சியைக் குறைக்கவும், வயிற்றுப்போக்கு, மலச்சிக்கலுக்கு ஏற்ற மருந்தாகவும் திகழ்கிறது.அத்தியாவசிய கொழுப்பு அமிலங்கள், அமினோ அமிலங்கள் நிறைந்த நாவல் பழமும், அதன் விதைகளும் சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், உடற்பருமன் உள்ளிட்ட வாழ்க்கை முறை நோய்களைத் தடுக்கப் பெரிதும் உதவுகின்றன. மேலும், புரோஸ்டேட், கல்லீரல், பெருங்குடல், சினைப்பை போன்றவற்றில் ஏற்படும் புற்றுநோய்களின் தீவிரத்தைக் குறைக்க, நாவல் பழமும் அவற்றின் விதைகளும் பெரிதும் உதவுகின்றன.

கல்லீரல் மற்றும் மண்ணீரல் நோய்களைத் தடுத்து, காமாலை நோயின் தீவிரத்தைக் குறைப்பதுடன் சளி, அலர்ஜி, ரத்த சோகை, பற்சிதைவு, சிறுநீர்த்தொற்று ஆகியவற்றிற்கும் நல்ல பயனளிக்கிறது. மேலும், மூட்டு வலி, வீக்கம், கண் நோய், சரும நோய், நாள்பட்ட நுரையீரல் நோய்களிலிருந்தும் உடலை பாதுகாத்து, பல், எலும்பு மற்றும் தசைகளுக்கு பலம் சேர்த்து, ரத்த சுத்திகரிப்பு, நோயெதிர்ப்பு என பற்பல பலன்களை அள்ளித்தருகின்றன.

நாவல் பழரசம் நீர் வறட்சியை கட்டுப்படுத்துவதால், கோடையில் நல்ல பயனளிக்கிறது. நாவல் பழத்தின் விதைகளைத் தூக்கி எறியாமல் உலர வைத்து, பொடித்து, தேநீர் அல்லது சூப் செய்தும் அருந்தலாம். அல்லது இதிலிருந்து ஜாம், ஜெல்லி, ஸ்குவாஷ் தயாரித்தும் உண்ணலாம். நாவல் பழத்திலிருந்து தயாரிக்கப்படும் கருமையான வினிகர் உலகப் பிரசித்திப் பெற்றது. Jambolan wine என்பது கோவாவின் முக்கிய பானங்களில் ஒன்று.

இத்தனை நன்மைகள் இந்த நாவல் பழத்தில் இருந்தாலும், இரைப்பையின் அமிலத்தன்மையை கூட்டும் என்பதால், வெறும் வயிற்றில் இந்தப் பழத்தை உட்கொள்வதை தவிர்த்தல் நலம். அதேபோல், ஏற்கனவே ஒவ்வாமை உள்ளவர்கள், சர்க்கரை நோய்க்கான மருந்துகளை உட்கொள்பவர்கள் இந்தப் பழத்தை உட்கொள்ளும்போது கவனமாக இருக்க வேண்டுமென மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.வரலாற்று சிறப்புமிக்க இந்த நாவல்பழத்தை இந்து, பௌத்த, சமண சமயம் என, இந்தியாவின் மூன்று முக்கிய மதங்களும் கொண்டாடுகின்றன. ‘பெருங்கானில் காரெருமை மேய்க்கின்ற காளைக்கு நான் தோற்றது’ என ஔவை, தானடைந்த சுட்டப்பழ ஞானத்தைப் பாடியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

கடவுள்களின் மரமாகவும் கனியாகவும் கருதப்படும் நாவல், திருநாவலூர், திருவானைக்காவல் கோவில்களில் தலவிருட்சமாகவும் விளங்குகிறது.இத்தனை சிறப்புகளுடன், கொத்துக் கொத்தாக காய்க்கும் இந்த நாவல் பழத்தை அப்படியே உட்கொள்ளலாம். அல்லது யாரேனும் மரத்திலிருந்து உலுக்க, ஔவை பிராட்டியார் போல குனிந்து எடுத்து, மண்ணை ஊதி உண்ட குழந்தைப் பருவமும் பலரின் நினைவுகளில் நிழலாடலாம்.உண்மையில் இத்தனை சிறப்புகளை தன்னுள் கொண்டு, நலம் பல தரும் நாவல் பழம், ‘Fruit of God’ மட்டுமல்ல, ‘Fruit with Goodness’ என்ற புரிதலுடன் இயற்கை பயணம் நீள்கிறது..!

டாக்டர் சசித்ரா தாமோதரன்

Advertisement