தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

சுலபமான கை வைத்தியம்!

நன்றி குங்குமம் டாக்டர்

தேங்காய்ப் பாலுடன் தேன் கலந்து சாப்பிட்டு வர வாய்ப்புண், வயிற்றுப் புண் குணமாகும்.

*தினசரி ஒரு கொய்யாப்பழம் சாப்பிட்டு வர ரத்த சோகை சரியாகும்.

*குங்குமப் பூவுடன் தேன் கலந்து சாப்பிட சுவாசக் குழாய் அலர்ஜி தீரும்.

*தினசரி ஆரஞ்சுப்பழம் சாப்பிட்டு வர இதயம் பலம் பெறும்.

*ஆவாரம் பூவை அவ்வப்போது கூட்டு செய்து சாப்பிட்டு வர, சர்க்கரை நோய் குணமாகும், சருமம் பளபளப்பாகும்.

*வில்வப்பழம் கிடைத்தால் சாப்பிட்டு வர மூளை தொடர்பான பல பிணிகள் நீங்கும்.

*ஆடாதோடை இலை சாறு தேன் கலந்து சாப்பிட இருமல் குணமாகும்.

*உடலில் தோன்றும் கட்டிகளின் மீது திருநீற்றுப் பச்சிலையை அரைத்துக் பூச கட்டிகள் கரையும்.

*வெற்றிலையையும், பூண்டையும் அரைத்து தேய்த்துக் குளிக்க தேமல் நீங்கும்.

*கறிவேப்பிலை, மஞ்சள் சேர்த்து அரைத்து குளிக்கும்போது தேய்த்து குளித்து வர முகப்பரு மற்றும் உடலில் உள்ள தழும்புகள் நீங்கும்.

*அதிமதுரத்தை கஷாயம் செய்து குடிக்க வயிற்றுப்புண் ஆறும்.

*கொள்ளு ரசம் வைத்து சாப்பிட்டு வர உடல் எடை குறையும்.

*ஜாதிக்காய், சந்தனம், மிளகு சேர்த்து அரைத்து தடவிவர பருக்கள் நீங்கும்.

*வல்லாரைக் கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வர யானைக்கால் நோய் குணமாகும்.

*திராட்சை ஜூஸ் தொடர்ந்து குடித்து வர ரத்த அழுத்தத்தை குறைக்கிறது.

*செர்ரி, திராட்சை பழங்களை ரெகுலராக சாப்பிட்டு வர கர்ப்பப்பை கோளாறுகள் சரியாகும்.

*சீத்தாப்பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வர, பக்கவாதம், மாரடைப்பு வராது.

*சுரைக்காயை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்ள உடல் சூடு தணியும். வெப்ப நோய்கள் வராது. காமாலை நோயையும் வராமல் தடுக்கிறது.

*பாகற்காயை அடிக்கடி உணவில் சேர்த்துவர சர்க்கரை நோயை கட்டுப்படுத்துவதோடு, சொறி, சிரங்கு வராமலும் தடுக்கிறது.

*மருதாணியை அரைத்து, அத்துடன் கற்பூரம் சேர்த்து குழைத்து தடவ, கால் ஆணி மறையும்.

*வல்லாரைப் பொடியை தினமும் உண்டு வர உடலின் வேண்டாத சதை குறையும்.

தொகுப்பு: மகாலட்சுமி சுப்ரமணியன்