கல்லீரல் நோய்களை குணப்படுத்தும் பப்பாளி விதை!
நன்றி குங்குமம் தோழி
பப்பாளி பழத்தில் நிறைய மருத்துவ குணங்கள் இருப்பது யாவரும் அறிந்ததே. தற்சமயம் அதிகமாக கிடைப்பதால் மக்கள் வாங்கி விரும்பி சாப்பிடுகிறார்கள். ஆனால், அதன் விதைகளை நீக்கிவிட்டுத் தான் சாப்பிடுவர். விதைகள் பப்பாளியை விட நிறைய மருத்துவ குணங்கள் கொண்டது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.கல்லீரலுக்கு தேவையான, ஆரோக்கியமான போஷாக்கை தரும் விதைகள். ‘லிவர் சிரோசிஸ்’ போன்ற கல்லீரல் ேநாய்களை குணப்படுத்தும்.
பப்பாளி விதைகள் ‘பெப்பைன்’ என்ற என்சைமைக் கொண்டுள்ளதால் ஜீரண சக்திக்கு உதவுகிறது. கல்லையும் ஜீரணிக்கக்கூடிய ஆற்றல் விதைகளுக்கு உண்டு. வாரம் மூன்று முறையாவது பப்பாளி விதைகளை பேஸ்ட் போல தயாரித்து எலுமிச்சை சாறில் கலந்து குடிக்கலாம். சிறுநீரக செயல் பாட்டினையும் நன்றாக தூண்டுவதால், உடலில் தீங்கை தரும் நச்சுக்களையும், கழிவுகளையும் எளிதில் வெளியேற்றும். வயிற்று பூச்சிகளை அழிக்க வல்லது.
பப்பாளி விதைகளை தொடர்ந்து சாப்பிடும் போது, உடலில் கொடிய மாற்றங்களை உருவாக்கும் கேன்சர் செல்களை உருவாக்காமல் தடுக்கும் என ஆய்வுகள் கூறுகின்றன.பல வகையான ஆர்த்ரைடிஸ், மூட்டுவலி ஆகியவற்றை உண்டாக்கும். வீக்கத்தை குறைத்து வலியைப் ேபாக்கும்.இவ்வளவு நன்மைகளை தரும் பப்பாளி விதைகளை வாரம் ஒரு முறையாவது உணவுடன் எடுத்துக் கொண்டு நோய்களை விரட்டலாம்.பப்பாளி விதைகளை உணவில் சேர்ப்போம், நோய்களிலிருந்து மீள்வோம்.
தொகுப்பு: அ.திவ்யா, காஞ்சிபுரம்.