இயன்முறை மருத்துவம்
நன்றி குங்குமம் தோழி வரிசைகட்டும் பண்டிகைகள் அறிய வேண்டிய புள்ளிவிவரங்கள்! ஆகஸ்ட் மாதம் வந்துவிட்டாலே வரிசைகட்டும் பண்டிகைகள். பொங்கல் வரை ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தாமல் பிரியமான உணவுகளை உண்பவர்கள் ஒரு பக்கம். எந்தப் பண்டிகை என்றாலும் கடும் ஆர்மி ஆபீசர் போல சாப்பாடு விஷயத்தில் இருப்பவர்கள் இன்னொரு பக்கம் என நம்மைச்சுற்றி ஆரோக்கியம் சார்ந்த பேச்சுகள்...
பாத்திரம் கழுவ உதவும் நாரும் நோயை உண்டாக்கலாம்!
நன்றி குங்குமம் டாக்டர் சமையலறைகளில் பாத்திரங்களை சுத்தம் செய்வதற்கு நமக்கு கட்டாயமாக ஸ்பாஞ்ச் அவசியம். பாத்திரங்களில் இருக்கும் எண்ணெய்ப் பிசுக்கு, அழுக்கு போன்றவை நீக்க இதை பயன்படுத்துகிறோம். ஆனால் அதை மீண்டும் மீண்டும் பயன்படுத்தும்போது, இதில் பாக்டீரியா கிருமிகள் உருவாகி நமது உடல் ஆரோக்கியத்தில் பாதிப்பினை ஏற்படுத்தலாம். இதை பலரும் அறிவதில்லை. உதாரணமாக, ஒரு...
மெல்ல கொல்லும் விஷம் உப்பும் சர்க்கரையும்
நன்றி குங்குமம் டாக்டர் உன் சமையலறையில் நான் உப்பா? சர்க்கரையா?’ என்று ஒரு பாட்டு உண்டு. உப்பும் சர்க்கரையும் இல்லாத சமையலறை இன்று எங்குமே இல்லை. அந்த அளவுக்கு இந்த இரண்டு வெள்ளை உணவுகளும் நம் நாக்கை அடிமைப்படுத்தி வைத்திருக்கின்றன. நம் உடலுக்கு உப்பும் சர்க்கரையும் அவசியம்தான் அதே நேரத்தில் இரண்டும் அளவோடு இருக்க...
குழந்தைகளே, கண்களை நேசியுங்கள்!
நன்றி குங்குமம் டாக்டர் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதத்தின் இரண்டாவது வியாழக்கிழமை உலக பார்வை தினமாக கொண்டாடப்படுகிறது. 2000-ம் ஆண்டு முதல் இந்த தினம் கடைப்பிடிக்கப்பட்டுவருகிறது. உலக சுகாதார நிறுவனத்துடன் இணைந்து பார்வையற்றோர் தடுப்புக்கான சர்வதேச நிறுவனத்தாலும் இத்தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த ஆண்டிற்கான கருப்பொருள் ‘‘குழந்தைகளே, உங்கள் கண்களை நேசியுங்கள்” என்பதாகும். உலக பார்வை தினம்...
ஜிம் செல்பவர்கள் கவனிக்க வேண்டியவை!
நன்றி குங்குமம் டாக்டர் ஜிம்முக்கு செல்ல வேண்டும், உடற்பயிற்சிசெய்து உடலை மெருகேற்ற வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருக்கும். ஆனால் முறையாக ஜிம் விதிமுறைகளை கடைபிடிக்காமல் உடல் வலி ஏற்பட்டு ஓரிரு நாட்களில் இதெல்லாம் சரியாக வராது என்று ஜிம்முக்கு செல்வதையே பலரும் நிறுத்திவிடுகிறார்கள். அப்படியில்லாமல், ஜிம்முக்கு செல்பவர்கள் சில விஷயங்களை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும்....
பிஸியோதெரப்பி அறிவோம்!
நன்றி குங்குமம் டாக்டர் ‘‘உற்றான் அளவும் பிணியளவும் காலமும் கற்றான் கருதிச் செயல்”. மருத்துவத்தை நன்கு கற்றறிந்தவர் , நோயாளியின் நோயைப் போக்க முயலும்போது நோயாளியின் வயது , அந்நோய் வந்திருக்கும் காலம் , நோயைப் போக்க தனக்கு தேவையான காலம் ஆகியவற்றை ஆராய்ந்து சிகிச்சை அளிக்க வேண்டும் என்று குறள் கூறுகின்றது. உலகில்...
வெந்நீரில் எலுமிச்சைச் சாறு கலந்து பருகுவது ஆரோக்கியமானதா?
நன்றி குங்குமம் டாக்டர் காலையில் எழுந்தவுடன் மிதமான வெந்நீரில் எலுமிச்சைச் சாறு கலந்து சாப்பிடுவது ஆரோக்கியமானது என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். எலுமிச்சை கலந்த வெந்நீர், உடலில் ஜீரணமண்டலத்தை சீராக்குவதோடு, இதய நலனையும் பாதுகாக்கிறது என்கின்றனர் உணவியல் நிபுணர்கள்.வெந்நீரில் எலுமிச்சை கலந்து சாப்பிடுவதால் அதில் உள்ள சிட்ரஸ் அமிலம் உடல் ஆரோக்கியத்தை பேணுகிறது. மேலும் எலுமிச்சையில்...
சுகர்ஃப்ரீ சாப்பிடலாமா?
நன்றி குங்குமம் டாக்டர் சர்க்கரை இனிப்புதான். ஆனால் அது நோயாக மாறினால் கடும் கசப்பு. இன்றைய வாழ்க்கை முறைக் கோளாறுகளால் சர்க்கரை நோய் இல்லாத குடும்பமே இல்லை. சர்க்கரை வந்துவிட்டாலே சர்க்கரையைத் தொடாதே என்றுதான் மருத்துவர்கள் முதல் எல்லோருமே அலறுவார்கள். சர்க்கரை நோயாளிகளை இனிப்பு சாப்பிட வைக்க என்ன செய்யலாம் எனத் திட்டமிட்ட ஹெல்த்...
உடல்நலம் காக்கும் உணவு விதிகள்!
நன்றி குங்குமம் டாக்டர் எண் சாண் உடலுக்கு உணவே பிரதானம் என்றால் அது பொய் இல்லை. மெய் எனும் நம் உடலுக்குத் தேவையான ஊட்டமளித்து பலம் கொடுத்துக் காக்கும் உணவில்தான் நம் ஒட்டுமொத்த ஆரோக்கியமும் இருக்கிறது. இது ஒன்றும் நமக்குத் தெரியாதது அல்ல. ஆனால், நவீன வாழ்க்கை முறையும் நுகர்வுக் கலாசாரமும் உடலுக்குத் தேவை...