மித் vs ஃபேக்ட்
நன்றி குங்குமம் டாக்டர்
மித்: மாலை 6 மணிக்கு மேல் சாப்பிடக்கூடாது.
உண்மை: தூங்குவதற்கு 3 அல்லது 4 மணி நேரத்திற்கு முன்பு நீங்கள் அதிக அளவு உணவை உட்கொள்ளக் கூடாது.
மித்: நீங்கள் இருட்டில் அல்லது மானிட்டரில் படித்தால் உங்கள் பார்வை மோசமடைகிறது.
உண்மை: இந்த வழியில் உங்கள் கண்கள் விரைவாக சோர்வடைகின்றன, ஆனால் ஓய்வுக்குப் பிறகு குணமடைகின்றன.
மித்: காலை உணவாக நீங்கள் எதை வேண்டுமானாலும் சாப்பிடலாம்.
உண்மை: சரியான காலை உணவு = புரதம் கொழுப்பு கார்போஹைட்ரேட் நார்ச்சத்து கலந்த உணவுதான்.
மித்: சாக்லேட் உங்கள் உடலுக்குக் கேடு.
உண்மை: ஒரு துண்டு டார்க் சாக்லேட் உடலுக்கு நன்மை செய்கிறது. மேலும் உடலை சுறுசுறுப்பாக வைத்திருக்க உதவுகிறது.
மித்: குறைவாக சாப்பிட்டால் எடை குறையும் என்று பலரும் நம்புகின்றனர்.
உண்மை: ஒரு நாளைக்கு 5 அல்லது 6 முறை என பிரித்து சாப்பிடும்போது மட்டுமே எடை குறைவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
மித்: சின்ன வெங்காயத்தை அரைத்துப் பூசினால் வழுக்கைத் தலையிலும் முடி வளரும் என்று நம்புவது.
உண்மை: சின்ன வெங்காயம் மட்டுமே முடி வளர்ச்சிக்கு தீர்வாக இருக்காது. முடி வளர்ச்சிக்கு மேலும் பல காரணிகள் உள்ளன.
மித்: தினம் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் மருத்துவரே தேவையில்லை.
உண்மை: ஆப்பிள் ஆரோக்கியமான உணவு, ஆனால் அது எல்லா நோய்களையும் குணப்படுத்தாது.
மித்: சப்ளிமென்ட்ஸ் உடலில் ஏற்படும் பிரச்சினைக்கு உடனடி தீர்வை கொடுக்கும்.
உண்மை: இது உண்மையில்லை. சப்ளிமென்ட்ஸ் என்பவை நம்முடைய உடலில் ஏற்படும் குறிப்பிட்ட ஊட்டச்சத்து குறைபாடுகளைத் தீர்க்க நமக்கு உதவி செய்யும். ஆனால் அது நம்முடைய உணவுகளை ஆரோக்கியமாக மாற்றச் செய்யாது. ஆனால் உணவில் உள்ள ஊட்டச்சத்துக்களை உடல் உறிஞ்சிக்கொள்ள உதவி செய்யும்.
மித்: கொழுப்புள்ள உணவுகள் இதய நோய்களை ஏற்படுத்தும்.
உண்மை: தினசரி உணவில் கொழுப்புகள் இருக்க வேண்டும். அவைதான் நம்முடைய உடலை ஆரோக்கியமாக வைக்கவும் ஆற்றலை உற்பத்தி செய்யவும் உதவுகின்றன. ஆனால் கெட்ட கொழுப்பை சேர்த்துக் கொள்ளக் கூடாது. உதாரணமாக, நிறைவுற்ற மற்றும் டிரான்ஸ் கொழுப்புகள் இதய நோய்களை ஏற்படுத்தும் அபாயம் கொண்டவை. அதே சமயம் நட்ஸ்கள், விதைகள் மற்றும் மீன் போன்ற நிறைவுறா கொழுப்புகள் இதய ஆரோக்கியத்தை பாதுகாப்பதோடு மூளை மற்றும் மன ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகின்றன.