தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

மாதவிடாய் பிரச்னையை சரி செய்யும் பிரண்டை!

 

நன்றி குங்குமம் தோழி

எளிதில் கிடைக்கக்கூடிய பிரண்டை சிறந்த மருத்துவ குணங்கள் நிறைந்தது. மேலும் பலவித நோய்களை தீர்க்கவும், கட்டுப்படுத்தவும் அரு மருந்தாகும்.பெண்களுக்கு மாதவிடாய் சமயத்தில் ஏற்படும் கோளாறுகளை சரி செய்ய பிரண்டையை போன்ற அருமையான மருந்து கிடையாது என சொல்லலாம்.வாயுத் தொல்லை இருப்பவர்கள் பிரண்டையை துவையலாக தயாரித்து சாப்பிட்டால் செரிமான சக்தி அதிகமாவதுடன், அஜீரணக் கோளாறுகளும் நீங்கும்.

* பிரண்டையை நெய் விட்டு வதக்கி கல் உப்பு தேவையான அளவு சேர்த்து சாப்பிட்டு வந்தால் மூல நோய் குணமாகும்.

* மலத்துவாரத்தில் எரிச்சல், அரிப்பு போன்ற பிரச்னைகள் இருந்தால் பிரண்டையை நெய்விட்டு வதக்கி உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் பிரச்னைகள் தீரும்.

* பிரண்டையை சுத்தம் செய்து, சாறு எடுத்து அதற்கு தேவையான அளவு நல்லெண்ணெய் கலந்து வெறும் வயிற்றில் ஒரு வாரம் சாப்பிட்டு வந்தால் மாதவிடாய் சீராகிவிடும்.

* மூட்டுவலி இருப்பவர்கள், பிஞ்சாக உள்ள பிரண்டையை சுத்தம் செய்து நல்லெண்ணெய் மூழ்கும் அளவுக்கு ஊற்றி வதக்கி, இறுதியில் அந்த எண்ணெயை மூட்டு வலி, முழங்கால் வலி போன்றவைகளுக்கு தேய்த்து வந்தால் வலி தீரும். எலும்புகளையும், மூட்டுகளையும் வலிமையாக்கி விடும். மேலும் எலும்பு முறிவைக் கூட குணப்படுத்தும் வல்லமை படைத்தது.

* உடல் எடை குறைக்க வேண்டுமானால் பிரண்டையை உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும்.

* பிரண்டையை நன்றாக காயவைத்து, அதை நெருப்பில் போட்டு எரித்து, சாம்பலாக்கி வைத்துக் கொண்டு, ஒரு பங்கு சாம்பலுக்கு மூன்று பங்கு தண்ணீர் விட்டு களைத்து, சிறிது நேரம் கழித்து, தெளிந்த நீரை மட்டும் பீங்கான் பாத்திரத்தில் ஊற்றி 10 நாட்கள் வெயிலில் வைத்து, தண்ணீர் வற்றியவுடன் உப்பு மட்டும் தேங்கும். அந்த பிரண்டை உப்பை இரண்டு கிராம் அளவு எடுத்து பால் சேர்த்து சாப்பிட்டு வந்தால் ஊளைச் சதை குறைந்து விடும்.

* பிரண்டை சாறு கொண்டு வாய் கொப்பளித்தால் பல் சம்பந்தமான அனைத்து நோய்களும் குணமாகும்.எளிதாகக் கிடைக்கும் பிரண்டையை உணவில் சேர்த்து, உடல் நலம் பெறுவோம்.

தொகுப்பு: அ.திவ்யா, காஞ்சிபுரம்.

Related News