தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

முருங்கை விதையின் மருத்துவ குணங்கள்!

நன்றி குங்குமம் டாக்டர்

ஊட்டச்சத்துக்கள் நிறைந்த ஒரு தாவரம் முருங்கை. முருங்கையின் பூ முதல் வேர் வரை அனைத்துமே அதிக மருத்துவ குணங்கள் கொண்டதாகும். அந்தவகையில், முருங்கை மரத்தில் இருந்து கிடைக்கும் காய்களில் உள்ள விதைகளிலும் மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது. முருங்கை விதைகள் பொதுவாகவே மென்மையாக இருக்கும். ஆனால் அதுவே வெயிலில் காய்ந்தவுடன் கடினமாகி பெரிய பீன்ஸ் போல மாறிவிடும். முருங்கை விதைகளை சாப்பிடுவதன் மூலம் ஆரோக்கிய நன்மைகள் குறித்து தெரிந்து கொள்வோம்.

முருங்கை விதையில், கால்சியம், வைட்டமின்கள், இரும்புசத்து மற்றும் நம் உடலுக்கு தேவையான அத்தியாவசிய அமினோ அமிலங்கள் நிறைந்துள்ளது. முருங்கை விதைகளை சுமார் 15 நிமிடங்கள் வெந்நீரில் கொதிக்க வைத்து அந்த நீரை தினமும் இரவு தூங்குவதற்கு முன் குடித்து வந்தால் நல்ல ஆழ்ந்த தூக்கம் கிடைக்கும்.

முருங்கை விதைகள் நம் கல்லீரலுக்கு தீங்கு விளைவிக்காமல் பாதுகாக்க உதவுகிறது. அதே போல கல்லீரல் தன்னைத் தானே சுத்தப்படுத்தும் முறையை வேகப்படுத்த முருங்கை விதைகள் உதவி செய்கிறது. இந்த முருங்கை விதையில் உள்ள வைட்டமின் பி சத்து நம் செரிமான அமைப்பை சீராக செயல்பட உதவும். மேலும் இந்த முருங்கை விதைகளில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால் செரிமான பிரச்னைகள் நாளடைவில் குணமாகும்.வீக்கம், பெருங்குடல் அழற்சி, அல்சர் போன்ற வயிற்று கோளாறு பிரச்னைகளுக்கு முருங்கை விதைச் சாறு சிறந்த மருந்தாக பயன்படுத்தப்படுகிறது. இந்த முருங்கை விதையில் உள்ள ஆன்ட்டிபயாட்டிக் மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு சக்தி நம் உடலில் நோய்க் கிருமிகள் வளர்ச்சியை தடுக்க பெரிதும்

உதவுகிறது.

குருத்தெலும்புக் குழாய் சுருக்கங்களுக்கு எதிராக பாதுகாக்க முருங்கை விதை பெரிதும் உதவுகிறது. அதே போல ஆஸ்துமா தாக்குதல்களின் தீவிரத்தை குறைக்க, தினசரி உணவில் முருங்கை விதைகளை சேர்த்து சாப்பிட்டு வரலாம். இது நுரையீரல் செயல்பாட்டுக்கும் சுவாசம் சீராக செயல்படவும் உதவும்.முருங்கை விதைகளில் உள்ள ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் நம் சிறுநீரகங்களில் உள்ள நச்சுத்தன்மை அளவை குறைக்க உதவி செய்கிறது. இந்த முருங்கை விதை சாற்றை தொடர்ந்து குடித்து வந்தால் சிறுநீர்ப்பை கர்பப்பை கழிவுகள் வெளியேறும். இதனால் சிறுநீர்ப்பையில் கற்கள் ஏற்படும் வாய்ப்புகள் குறைவு.

தொகுப்பு: ஸ்ரீ

Related News