தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ரோஜாவின் மருத்துவப் பயன்கள்

நன்றி குங்குமம் டாக்டர்

Advertisement

*ரோஜாப்பூ இதழ்களுடன் துவரம் பருப்பு கலந்து கூட்டு செய்து உண்ண, உடல் உஷ்ணம் சமநிலைப்படும். உடல் பலத்தையும் சுறுசுறுப்பையும் கொடுக்கும். மூளைக்கும் கண்களுக்கும் குளிர்ச்சியை தரும்.

*ரோஜாப்பூ கஷாயத்தில் பசும்பால், சர்க்கரை சேர்த்து அருந்தினால் பித்தநீர் மிகுதியால் ஏற்படும் மயக்கம், வாய்கசப்பு, நெஞ்சு எரிச்சல் நீங்கும்.

*ரோஜா இதழ், இஞ்சி, தேங்காய் சேர்த்து துவையலாக சாப்பிட உஷ்ணம் சம்பந்தமான நோய்கள் குணமாகி செரிமானத்தை மேம்படுத்தும்.

*ரோஜா இதழ்களை ஒரு கைப்பிடி அளவு காலை, மாலை வாயிலிட்டு மென்று சாப்பிட வயிற்றுக்கடுப்பு, சீதபேதி குணமாகும். வாய்ப்புண், குடல் புண் ஆறும். பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதலை குணமாக்கும். கர்ப்பிணிகளுக்கு சிறுநீர் எளிதில் பிரியும்.

*ரோஜா பூ இதழ்களை அடிக்கடி சாப்பிட்டு வருவதால் உங்களின் தோலின் செல்களின் வளர்ச்சியை மேம்படுத்தி பளபளப்பை அதிகரித்து, சுருக்கங்களை போக்கி, இளமை தோற்றத்தை நீடிக்க செய்கிறது.

*ரோஜா இதழ்களை தாம்பூலத்துடன் சாப்பிட வாய் துர்நாற்றம் அகலும்.

*ரோஜா இதழ் குல்கந்து உடலுக்கு வலிமை, குளிர்ச்சி அளிக்கும்.

*சுக்கு மல்லி காப்பியுடன் ரோஜா இதழ்களைச் சேர்த்து அருந்த அஜீரணம் அகலும். தலைசுற்றல்,மயக்கம், இதயம் தொடர்பான கோளாறுகள் நீங்கும்.

*ரோஜாவிலிருந்து தைலம் எடுக்கலாம். இந்தத் தைலம் காது வலி, காது குத்தல், காதில் புண் ஆகியவற்றிக்கு மருந்தாகப் பயன்படுகிறது.

*25 கிராம் ரோஜா இதழ்களை தண்ணீரில் கொதிக்க வைத்து வடிகட்டி பிறகு, பால், சர்க்கரை சேர்த்து குடித்து வர வாதம், பித்தநீர் மலத்துடன் வெளியேறும்.

*ரோஜாவை நன்கு காய வைத்து அரைத்து தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் உடலுக்கு நல்ல ஆரோக்கியம் கிடைக்கும். ரோஜா மலரில் உள்ள துவர்ப்பு சக்தி குழந்தைகளின் சீதபேதிக்கு மருந்தாகிறது.

*ரோஜாப்பூ பன்னீரை கண்கள் சிவந்து எரிச்சல் இருக்கும் நேரம் சில துளிகள் விட்டு வந்தால் எரிச்சல் மாறும்.

தொகுப்பு: மகால‌ஷ்மி சுப்ரமணியன்

Advertisement