தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

குழந்தைகளே, கண்களை நேசியுங்கள்!

நன்றி குங்குமம் டாக்டர்

ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதத்தின் இரண்டாவது வியாழக்கிழமை உலக பார்வை தினமாக கொண்டாடப்படுகிறது. 2000-ம் ஆண்டு முதல் இந்த தினம் கடைப்பிடிக்கப்பட்டுவருகிறது. உலக சுகாதார நிறுவனத்துடன் இணைந்து பார்வையற்றோர் தடுப்புக்கான சர்வதேச நிறுவனத்தாலும் இத்தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த ஆண்டிற்கான கருப்பொருள் ‘‘குழந்தைகளே, உங்கள் கண்களை நேசியுங்கள்” என்பதாகும். உலக பார்வை தினம் என்பது நமது கண்கள் மற்றும் பார்வையைப் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கவும், பார்வைக் குறைபாடு மற்றும் பார்வை இழப்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், கண் மற்றும் பார்வைப் பராமரிப்பை மேம்படுத்தவும் ஒரு வாய்ப்பாகும். இந்த ஆண்டு அனைத்துக் குழந்தைகளுக்கும் கண் பராமரிப்பு சேவைகள் கிடைக்கும் வகையில் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. இதுகுறித்து கிளெனீகல்ஸ் ஹாஸ்பிடல் கண் மைய இயக்குனர் மருத்துவர் ரவீந்திர மோகன் பகிர்ந்துகொண்டவை:

உலகின் எந்தப் பகுதியிலும் 70 சதவீதத்துக்கும் அதிகமான மக்களுக்கு கண் பராமரிப்பு சேவைக்கான தேவை உள்ளது. இந்த தேவைகள் என்பது ஒளிவிலகல் பிழைகளை சரிசெய்ய கண்ணாடி அணிவது முதல், பார்வையற்ற நபர்களுக்கு பார்வையை மீட்டெடுக்கும் மிகவும் சவாலான சிக்கலான பிரச்னைகள் வரை இருக்கலாம். ஒரு மனிதனின் புலன்களில் பார்வை மிக முக்கியமானது, ஏனெனில் அது நமது சுற்றுப்புறத்தைப் பற்றிய தகவல்களை அறிந்துகொள்ள 70 சதவீதம் நமக்கு பங்களிக்கிறது.

வேறு வார்த்தைகளில் கூறுவதானால், நமது பார்வையில் ஏதேனும் குறைபாடு அல்லது பிரச்னைகள் இருப்பதை முன்கூட்டியே அறிந்து அதற்கான சிகிச்சை அளிப்பது சிறந்த வழியாகும். அவ்வாறு செய்யாவிட்டால், அது நமது தனிப்பட்ட மற்றும் தொழில்முறை வளர்ச்சி மற்றும் நல்வாழ்வில் கடுமையான தாக்கங்களை ஏற்படுத்தும். நவீன மற்றும் விரிவான கண் பராமரிப்பு வசதிகள் மற்றும் சேவைகளின் வளர்ச்சியில் நமது நாடு, குறிப்பாக தமிழகம் மாபெரும் முன்னேற்றம் கண்டுள்ளது. இதனை பயன்படுத்தி அனைவரும் கண் பிரச்னைகளை சரி செய்துகொள்ள வேண்டும்.

சிகிச்சை முறைகள்

கண்புரை அறுவை சிகிச்சைக்குப் பிறகு நல்ல தரமான பார்வையை மீட்டெடுக்க கண்புரை லென்ஸ்கள் பொருத்தப்படுவதன் மூலம் கண்புரை நோயால் பாதிக்கப்படுபவர்களுக்கு அறுவை சிகிச்சையின் மூலம் நிறைய சாதனை படைக்கப்பட்டுள்ளது. மறுபுறம், புதிய நோய்கள் கண்களுக்கு சவால்விடுகின்றன. நீரிழிவு என்னும் தொற்றா நோய் இந்தியாவில் அதிகரித்துவருவதால் அதை முறையாக கவனிக்காவிட்டால் அது பார்வை இழப்பை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது. விழித்திரை நோயை எதிர்த்துப் போராடுவதற்கும், மேலும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும், கண் நோய்க்கான நீரிழிவு நோயாளிகளை பரிசோதனை செய்வதற்கும், லேசர் சிகிச்சை, மருந்துகள் மற்றும் அறுவை சிகிச்சை உள்ளிட்ட சிகிச்சைகள் அதி நவீன சிகிச்சை முறைகள் வந்துவிட்டன.

அறிகுறிகள்

மடிக்கணினி, டேப்லெட், கம்ப்யூட்டர் மற்றும் பிற எலக்ட்ரானிக் சாதனங்கள், குறிப்பாக மொபைல் போன்களின் பரவலான பயன்பாடு, இளைஞர்கள் மற்றும் பெரியவர்களின் கண்களைப் பாதிக்கும் மற்றொரு அமைதியான தொற்றுநோய் ஆகும். கண் சிமிட்டும் வீதம் குறைதல், அருகில் வேலை செய்வதற்குத் தேவையான கண் தசைகளை அதிகமாகப் பயன்படுத்துதல் மற்றும் பிரகாசமான ஸ்கிரீன்களை பார்த்து நீண்ட நேரம் வேலை செய்தல் ஆகியவை கணினி பார்வை நோய் அறிகுறி அல்லது டிஜிட்டல் கண் திரிபு எனப்படும் ஒரு நிலைக்கு வழிவகுக்கும். இந்த நிலை பார்வை இழப்பு அல்லது குருட்டுத்தன்மையை ஏற்படுத்தவில்லை என்றாலும், இது கணிசமான அசௌகரியம், கண் சோர்வு, தலைவலி மற்றும் கழுத்து மற்றும் முதுகுவலி ஆகியவற்றைக்கூட ஏற்படுத்துகிறது, இதன் விளைவாக மன அழுத்தம், உற்பத்தித்திறன் இல்லாமை மற்றும் இன்னும் பல்வேறு உடல் நலப்பிரச்னைகளும் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

இந்த அறிகுறிகளைக் குறைப்பதற்கான வழிமுறைகள் எளிமையானவை மற்றும் போதுமான அளவு தண்ணீர் குடித்தல், கம்ப்யூட்டர்களில் பணிபுரியும்போது சிறிது நேரத்திற்கு பின்னர் எழுந்து நிற்பது, கண்ணுக்கான சொட்டு மருந்துகளை பயன்படுத்துதல் போன்றவை கண் தொடர்பான பாதிப்பை குறைக்கலாம் மற்றும் தடுக்கலாம். உடலின் மற்ற உறுப்புகளைப் போலவே, விலைமதிப்பற்ற நம் கண்களை நாம் கவனித்துக்கொள்ள வேண்டும். அப்போதுதான் நம் கண்கள் வாழ்நாள் முழுவதும் எந்தவித பாதிப்பும் இல்லாமல் இருக்கும் என்று தெரிவித்தார்.

கண் மருத்துவர்: ரவீந்திர மோகன்

தொகுப்பு: ஸ்ரீதேவி குமரேசன்