வீட்டு மருத்துவம்!
நன்றி குங்குமம் தோழி
* வாயுப் பிரச்னை தீர சுக்கு மல்லி காபி நல்லது.
* சுக்கை ஏதாவது ஒரு வகையில் உணவில் சேர்த்துக் கொண்டால் வாயு சேராது.
* பசும்பாலில் பத்து பூண்டு பற்களைப் போட்டுக் காய்ச்சி குடித்தால் வாயு சேராது. இஞ்சியை அரைத்து பசும்பாலில் கலந்து குடிக்க எல்லாவித வாயுக் கோளாறும் தீரும்.
* புதினாக் கீரையை நெய் விட்டு வதக்கி உப்பு, புளி, மிளகாய், தேங்காய் சேர்த்து துவையல் அரைத்து உணவுடன் சாப்பிட்டு வர வாயு அகலும்.
* வெந்தயக்கீரை, தூதுவளைக்கீரை, வல்லாரை, முடக்கத்தான் இலை இவைகள் வாயுவைப் போக்கும்.
* ஓமம், கடுக்காய், வால்மிளகு, வெள்ளைப் பூண்டு, மிளகு, சுண்டைக்காய், சாதிப்பத்திரி, வெங்காயம் இவைகளும் வாயுவைப் போக்கும்.
* மலச்சிக்கல் ஏற்படாமல் பார்த்துக் கொள்வது நல்லது, லேசாக வாயு தோன்ற ஆரம்பித்த உடனே இரண்டொரு நாட்கள் பத்திய உணவை கடைபிடித்தால் வாயுவைத் தடுத்திட முடியும்.
தொகுப்பு: சுந்தரி காந்தி, சென்னை.