தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

சாப்பிடும் உணவுகளில் உள்ள நன்மைகள், தீமைகள்!

நன்றி குங்குமம் தோழி

பால்: இதிலுள்ள நன்மை. ஏடு நீக்கப்பட்ட பாலை உபயோகிக்க வேண்டும். இதில் கொழுப்புச்சத்து குறைந்த அளவிலேயே உள்ளதால் அபாயமில்லாதது. இதிலுள்ள கால்சியம், எலும்புகளை உறுதியாக வைத்துக்கொள்ள பயன்படுகிறது.

தீமை: அதிக ஏடு உள்ள பால் மிக அதிகக் கொழுப்புச்சத்தைக் கொண்டுள்ளதால் ஆபத்தானது. அதிகமாகக் குடிக்கும் போது இதய நோய்கள், பக்கவாதம் ஏற்படும். வெண்ணெய்: இதிலுள்ள நன்மை. இதில் மிகக் குறைந்த அளவே ஏ வைட்டமினும், டி வைட்டமினும் உள்ளன.

தீமை: இதய நோய்கள் ஏற்பட காரணமாக உள்ளது. ரத்த ஓட்டம் சம்பந்தமான தொந்தரவுகளும் உண்டாகலாம்.பால் கட்டி: இதனால் உண்டாகும் நன்மை. மிகக் கெட்டியான பால் கட்டியில் வைட்டமின்கள், தாதுக்கள், புரோட்டீன்கள் ஆகியவை அபரிதமாய் உள்ளன.

தீமை: அதிகமான கொழுப்புச்சத்துள்ளதால் இதய நோய் ஏற்பட வாய்ப்புண்டு.

சர்க்கரை: இதனால் உண்டாகும் நன்மை. உடனடியாக சக்தியை கொடுக்கவல்லது.

தீமை: மிக அதிகமான கலோரிகள் உடையது. நாம் நமக்குத் தேவையான அளவைவிட அதிகமான சர்க்கரையை சாப்பிட்டுக் கொண்டிருக்கிறோம். டின்களில் அடைக்கப்படும் உணவுகளில் எல்லாம் சர்க்கரை சேர்க்கப்படுகிறது. அதிகமான சர்க்கரையால் பற்கள் சிதைகின்றன. குடல், மார்பக புற்று நோய் வர வாய்ப்புள்ளது.

உருளைக்கிழங்கு: இதனால் உண்டாகும் நன்மைகள். வைட்டமின்களும் நார்ச்சத்தும் நிரம்பியது. கார்போஹைட்ரேட் உள்ளது. வேக வைக்கும் போது தோலுடனேயே வேக வைத்து, பின்பு தோலுரிக்க வேண்டும். அப்போதுதான் வைட்டமின்கள், மற்ற சத்துக்கள் சிதையாமல் இருக்கும்.

தீமை: எண்ணெயில் வறுத்தெடுக்கும் போது ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும்.

உப்பு: இதனால் விளையும் நன்மை. ஓரளவு பயன்படுத்தலாம்.

தீமை: ரத்த அழுத்தம் அதிகமாக உள்ளவர்கள் உப்பை குறைத்துக் கொள்வது நல்லது. மாதவிலக்குக்கு முன் பலவிதமான உபத்திரங்களாகும் பெண்கள் கூடுமானவரை உப்பை குறைக்கவும்.

தொகுப்பு: ஆர்.ஜெயலெட்சுமி, திருநெல்வேலி.

 

Related News