தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

நலம் சேர்க்கும் பானங்கள்!

நன்றி குங்குமம் டாக்டர்

Advertisement

நாம் சிறு வயதிலிருந்தே கொழுப்பு உணவுகளை விரும்பி உண்பதால், முதுமையில் வர வேண்டிய இதயநோய், ரத்த அழுத்தம், கொலஸ்டிரால் போன்றவை இளம் வயதிலேயே வந்துவிடுகிறது. அதுமட்டுமின்றி உடலில் கொழுப்புகள் சேர்வதனால் ரத்தக் குழாய்கள் மற்றும் பிற உறுப்புகளில் படியும் கெட்டக் கொழுப்புகள் ரத்த அழுத்தத்தை மிகைப்படுத்தி, இறுதியில் மாரடைப்பு, இறப்பு வரை கொண்டுவிட்டுவிடுகிறது.

ஒழுங்கற்ற லைஃப் ஸ்டைல், பாஸ்ட் ஃபுட் நிறைய சாப்பிடுவது, இன்ஸ்டண்ட் உணவுகளை விரும்பி உண்பது, அசைவ உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்வது, உடற்பயிற்சியின்மை, மன அழுத்தம் போன்ற பல காரணங்கள் உடல் நலிவடைய காரணமாகின்றன. இவற்றையெல்லாம் குறைக்க, பழரசங்கள், பானங்கள் உதவுகின்றன. அந்தவகையில் சில பானங்களை பற்றி பார்ப்போம். முட்டைகோஸ் ஜூஸ் குடிப்பதால், அதில் உள்ள டார்டாரிக் ஆசிட், உடலில் சேரும் சர்க்கரை கொழுப்புகளாக மாறுவதை தடுக்கும். மேலும் முட்டைகோஸில் வைட்டமின் சி மற்றும் ஏ அதிகமாக உள்ளது. இது இதயத்திற்கு மிகவும் நல்லது.

பார்ஸ்லி சாறு உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், உடலின் நச்சுகளை வெளியேற்றும். மேலும் இதில் வைட்டமின் சி மற்றும் ஏ அதிகளவில் உள்ளது. இந்த ஜூஸைக் குடிப்பதால் உடலில் அதிகப்படியான கொழுப்புகள் கரைவதோடு, எடையையும் குறைக்க உதவுகிறது.

எலுமிச்சைச் சாறு

வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சைசாறும், தேனும் கலந்து அருந்த தொப்பை குறைந்து, தட்டையான வயிறு கிடைக்கும்.

இலந்தைப்பழ இலைச் சாறு

இலந்தைப்பழ இலைகளில் கால்சியம், இரும்புச்சத்து, வைட்டமின் ஏ, சி மற்றும் பி2 போன்றவைகள் நிறைய உள்ளன. இந்த இலைகளை நீரில் ஊறவிட்டு, மறுநாள் எழுந்ததும் குடித்து வர, உடல் ஆரோக்கியம் மேம்படும்.

கேரட் ஜூஸ் கண்களுக்கு நல்லது. கொழுப்புகளை குறைத்து, மேனியை பளபளப்பாக்குகிறது. கண் தொடர்பான நோய்களை குணமாக்குகிறது.வெள்ளரி ஜூஸை குடித்துவர உடல் மெலியும். இதில் 90 சதவீத அளவு நீர்ச்சத்து உள்ளதால் உடலின் ஈரப்பதத்தை தக்க வைக்க உதவுவதோடு, தோலை இளமையாக வைத்திருக்கவும் உதவுகிறது.

ஆப்பிள் சீடர்

2 தேக்கரண்டி ஆப்பிள் சீடரை ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் கலந்து தினமும் 2 முறை குடித்து வர, கொழுப்புகள் கரையும்.

பீச் பழ ஜூஸ் குடித்து வர உடல் எடையை குறைக்க உதவும்.

கரும்பு ஜூஸ் சிறந்த மலமிளக்கியாகவும், உடல் கழிவுகளை நீக்குவதிலும் பெரிதும் துணைபுரிகிறது.

மாதுளம் பழச்சாறுடன் இஞ்சிச் சாறை சம அளவு கலந்து குடிக்க நாள்பட்ட வறட்டு இருமல் குணமாகும்.

தொகுப்பு: மகாலட்சுமி சுப்ரமணியன்

Advertisement

Related News