தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

நோய் தீர்க்கும் காய்கறிகள்!

நன்றி குங்குமம் தோழி

நாம் சமையலில் பயன்படுத்தும் காய்கறிகள் உணவுக்கு சுவை தருவதுடன், நோய்கள் தீரவும் உதவுகின்றன. சில காய்கறிகளின் மருத்துவ குணங்களை அறிந்து கொள்வோம்.

* சாப்பிட்ட பின் ஒரு தக்காளிப் பழம் சாப்பிடுவதால் ஜீரண சக்தி கிடைக்கிறது. வாய்வுத் தொல்லை தீரும்.

* வெண்டைக்காய் உடல் சூட்டை கட்டுப்படுத்தும். இருமலை தடுக்கும். இதில் இரும்புச் சத்து உள்ளது.

* முருங்கைக் காயால் சூப் வைத்து பருகி வர மூட்டு வலி தீரும். ரத்தம் சுத்தப்படும்.

* பாகற்காய் வயிற்றுப்புண் ஆற்றும். மந்த நிலையை போக்கும். மஞ்சள் காமாலை நோய் வராமல் தடுக்கும்.

* முட்டைக்கோஸ் ரத்தத்தை சுத்தமாக்குகிறது. ரத்தம் விருத்தியாகும்.

* வாழைக்காயில் உள்ள இரும்புச்சத்து ரத்த சோகையை நீக்குகிறது. பித்த தலைவலி தீரும். கண் எரிச்சல், இருமல் தொல்லையை போக்கும்.

* புடலங்காய் உடல் சூட்டைத் தணிக்கும்.

* சின்ன வெங்காயத்தை மென்று தின்று, வெந்நீர் பருகினால் ஜல தோஷம் நீங்கிவிடும்.

* இஞ்சியை உணவில் சேர்ப்பதால் ஜீரண சக்தி பெருகும். சளி, இருமல், தொண்டை வலி தீர்க்கும்.

* கோவைக்காயை பச்சையாக மென்று சாப்பிட்டால் நாக்கில் ஏற்படும் புண் கொப்புளங்கள் ஆறும்.

* முள்ளங்கி சர்வரோக நிவாரணி. இருமல், சளி, குடல் நோய்களுக்கு மருந்தாகும். நீரிழிவு நோயும் கட்டுப்படும். முள்ளங்கியை துருவி வாணலியில் வதக்கி சாப்பிட களைப்பு நீங்கி சுறு

சுறுப்பு ஏற்படும். கண் பார்வை கூர்மையாகும். அஜீரணம் சரியாகும்.

* மணத்தக்காளி கீரை தேங்காய், வாய்புண், வயிற்றுப் புண்களை ஆற்றும்.

* கேரட், பீட்ரூட் இவைகளில் சூப் ெசய்து பருகி வர நோயிலிருந்து மீண்டவர்கள், உடல் நலம் தேறுவர். ஆரோக்கியம் பெறுவார்கள்.

* சிறிய வெங்காயம் 4 அல்லது 5ஐ மென்று தின்று, மோர் 2 கப் குடித்தால் சிறுநீர் கடுப்பு நீங்கும்.

* தேங்காய் எண்ணெயுடன் அதே அளவு எலுமிச்சம் பழச் சாறு கலந்து, சூடு வைத்து மூட்டுவலியுள்ள பகுதிகளில் தேய்த்தால் குணம் கிடைக்கும்.

தொகுப்பு: ஆர்.பத்மப்ரியா, திருச்சி.

Related News