தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

சின்ன சின்ன கை வைத்தியம்!

நன்றி குங்குமம் டாக்டர்

*வாழைப்பூவை நன்றாகப் பொடியாக நறுக்கி முருங்கைக் கீரையும் சேர்த்து சாப்பிட்டு வந்தால் குடல் புண், வாய்ப்புண் குணமாகிவிடும்.

*பசும்பாலைக் காய்ச்சினால் மேலே ஏடு படியும். அதையெடுத்து தடவினால் முகப்பருக்கள் மறையும்.

*பொன்னாங்கண்ணிக் கீரையுடன் பருப்பு சேர்த்து சமைத்து சாப்பிட்டு வர உடலில் மினுமினுப்பு உண்டாகும்.

*மாசிக்காயைத் தூளாக்கி மூக்கில் வைத்து உறிஞ்ச மூக்கில் ரத்தம் வருவது நின்றுவிடும்.

*வெங்காயத்தை விளக்கெண்ணெய்யில் வதக்கி உணவுக்கு முன் சாப்பிட வாய்ப்புண் குணமாகும்.

*முருங்கை இலைச் சாற்றைப் பிழிந்து சமஅளவு தேன் கலந்து சாப்பிட்டால் நீர்க்கோர்வை நீங்கும்.

*கேரட் சாறை காலை, மாலை அருந்தி வந்தால் சிறுநீரக நோய்கள் குணமாகும்.

*பொதுவாக, தயிரும், மோரும் உணவில் சேர்த்துக் கொள்வது நன்மையே. ஆனால், இரவில் உணவில் இவற்றை தவிர்ப்பது நல்லது.

*இலவங்கத்தை நெருப்பில் கருகாதபடி சுட்டு வாயில் அடக்கிக் கொண்டால் தொண்டைக் கமறல் நீங்கும். பல் ஈறுகள் வலுவடையும்.

*எலுமிச்சை சாற்றில் சீரகத்தை ஊற வைத்து உலர்த்தி அவ்வப்போது உண்டு வர வயிற்றுப் போக்கு குணமாகும்.

*அரைக்கீரையோடு பூண்டு, சீரகம், பச்சை மிளகாய் சேர்த்து புளி சேர்க்காமல் சமையல் செய்து சாப்பிட்டால் வாயுத் தொல்லை நீங்கும்.

*பூண்டுப் பல் ஒன்றைச் சுட்டு சிறிது சர்க்கரை சேர்த்து பாலில் இட்டு காய்ச்சி குழந்தைகளுக்கு கொடுத்தால் கபம் நீங்கும்.

*பூண்டுச்சாற்றையும், இஞ்சிச் சாற்றையும் சம அளவு கலந்து காலை, மாலை மூன்று நாட்கள் சாப்பிட நெஞ்செரிச்சல் நீங்கும்.

*பூண்டில் சிறிது எலுமிச்சைச் சாறுவிட்டு அரைத்து இருவேளை சாப்பிடக் கீல்வாதம் குணமாகும்.

*புடலங்காய், பாகற்காய் விதைகளை காயவைத்து எடுத்து சீயக்காயுடன் சேர்த்து அரைத்து தேய்த்து குளித்தால் பொடுகு, பேன் தொல்லை நீங்கும். தோல் வியாதிகளும் குணமாகும்.

*ரோஜா இதழ்களை பால்விட்டு அரைத்து தடவி வந்தால் உதடு வெடிப்பு நீங்குவதோடு, கருமையையும் போக்கும்.

*குளிக்கும் தண்ணீரில் 5 சிட்டிகை அளவு எலுமிச்சைச் சாறு கலந்து குளித்தால் உடல் புத்துணர்ச்சியாக இருப்பதோடு துர்நாற்றமும் அகலும்.

தொகுப்பு: இந்திராணி தங்கவேல்

Related News