தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

பழம் தரும் பலம்!

நன்றி குங்குமம் தோழி

உணவே மருந்து, மருந்தே உணவு என்கின்ற பழமொழிக்கேற்ப நமது உடலை உணவு வகைகளால் முறையாக உண்டு வந்தால் 75% நோய் நம்மை நெருங்காது. இதில் பழ வகைகளும், கீரை வகைகளும் அதிகமாக சேர்த்துக் கொண்டால் நம் உடலுக்குத் தேவையான நோய் எதிர்ப்புச் சக்தி, இயற்கையாகவே கிடைக்கும்.வாழைப்பழம்: கார்போஹைட்ரேட் சத்துக்கள் நிறைந்தது. எளிதில் ஜீரணமாகும். மலச்சிக்கலைப் போக்கும். பேயன் வாழை குடல் கிருமிகளை அகற்றிடவும், நேந்திர வாழைகள் உடலில் உள்ள கோளாறுகளை நீக்கும். ரஸ்தாளி ஊட்டச்சத்து கொடுக்கும்.

மா : மாம்பழத்தினை தேன் கலந்து சாப்பிடுவது நல்லது. இதில் இரும்புச்சத்து, புரதச் சத்து, சுண்ணாம்புச் சத்து இருக்கின்றன.

பப்பாளி: பால் சேர்த்து சாப்பிடலாம். இதிலும் அதிகமான சத்துக்கள் இருப்பதால் எல்லோருமே சாப்பிடலாம். குறிப்பாக சர்க்கரை வியாதி உள்ளவர்கள்.

மாதுளை: உடலுக்கு குளிர்ச்சியை கொடுக்கும். குடல் கிருமிகளை வெளியேற்றவும், இதயத்திற்கு உறுதியையும் கொடுக்கும். ரத்தத்தை சுத்தம் செய்யும்.

அன்னாசி: இரைப்பை ரத்தத்தை சுத்தம் செய்யும். ரத்த விருத்தி ஏற்படுத்தும்.

திராட்சை: ரத்த விருத்திக்கும், அறிவு வளர்ச்சிக்கும் மிகவும் நல்லது.

ஆப்பிள்: உண்ட உணவை செரிக்க செய்யவும், உணவுப் பாதையை சுத்தம் செய்யவும் கூடியது.

கொய்யா: வைட்டமின் ‘சி’, கால்சியம், புரதச் சத்து உள்ளது. மலச்சிக்கலை போக்கும்.

சப்போட்டா: குளுக்கோடின் சக்தி நிறைந்தது. வயிற்றுப்போக்கு, வயிற்றுக் கடுப்பு போகும்.

ஆரஞ்சு: உடல் சத்துக் குறைவு உள்ளவர்கள் இதன் சாறுடன் தேன் கலந்து சாப்பிடலாம்.

பேரிக்காய்: சிறுநீரக அடைப்பு, சிறுநீரகக் கற்களை அகற்றும்.

சீத்தாப்பழம்: சுண்ணாம்புச் சத்து அதிகம் உள்ளது. இதயத்திற்கு நல்ல பலத்தைக் கொடுக்கும்.

எலுமிச்சை: இதில் சிட்ரிக் அமிலமும், கந்தகமும், மெக்னீசியமும் இருக்கின்றது. ரத்த சுத்திக்கும், வாய் துர்நாற்றத்தைப் போக்கும், வயிற்றுப் போக்கை நீக்கும்.

முலாம் பழம்: குடலிலுள்ள கொடிய விஷங்களை போக்கும்.

தர்பூசணி, வெள்ளரி: உடலுக்குத் ேதவையான நீர் சத்தினை கொடுக்கும்.

தொகுப்பு: எல்.நஞ்சன், நீலகிரி.