பிறப்பு முதல் 5 வயது வரை…
நன்றி குங்குமம் டாக்டர்
குழல் இனிது... யாழ் இனிது!
சென்ற வாரத் தொடர்ச்சி…
விளையாட்டு
இளம் குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கும் வளர்ச்சிக்கும் உடல் செயல்பாடு (பிசிக்கல் ஆக்டிவிடிஸ்) மிகவும் அவசியம். அந்தவகையில் 1-5 வயது வரை உள்ள குழந்தைகள் தினமும் 3 மணி நேரம் விளையாட வேண்டியது அவசியமானது.
விளையாடுவதால் ஏற்படும் நன்மைகள்
*குழந்தைகள் ஆரோக்கியமான உடல் எடையை பராமரிக்க உதவுகிறது.
*குழந்தைகளின் எலும்புகள், தசைகள், நுரையீரல் மற்றும் இதயத்தை வலுப்படுத்துகிறது.
*குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
*குழந்தைகள் வெற்றி, தோல்வியை சமமாக பார்க்கும் தன்மை ஏற்படுகிறது. மற்ற குழந்தைகளுடன் சேர்ந்து விளையாடும்போது சமூகத்துடன் பிணைப்பு ஏற்படுகிறது.
*சுயக்கட்டுப்பாட்டை கற்றுக் கொள்கிறார்கள்.
*பெரியவர்களாகும்போது ஏற்படும் உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய், உடல் பருமன், பதட்டம், மனச்சோர்வு போன்ற உடல் நல கோளாறு கள் வராமல் தடுக்கப்படுகிறது.
*தன்னம்பிக்கை அதிகரிக்கிறது.
*பசி உணர்வை நன்றாக தூண்டிவிடுகிறது.
*நன்கு விளையாடும் குழந்தைகள் ஆழ்ந்து தூங்குகின்றனர்.
*குழந்தைகள் நண்பர்களுடன் சேர்ந்து விளையாடுவதால் தொலைக்காட்சி, கைப்பேசியை அதிக நேரம் பார்ப்பது தவிர்க்கப்படுகிறது.
திரைநேரம்
*0-2 வயது வரை - அலைபேசி, தொலைக்காட்சி போன்றவற்றை குழந்தைகள் பார்ப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
*3-5 வயது வரை தினமும் ஒரு மணி நேரம் மட்டுமே திரை நேரம் ஒதுக்க வேண்டும்.
*ஒரு மணி நேரத்தில் பார்க்க வேண்டியவற்றை பெற்றோர் தேர்ந்தெடுக்க வேண்டும்.
*கல்வி சம்பந்தமான விஷயங்களை பார்க்க அனுமதிக்கலாம்.
அதிகமான திரை நேரத்தால் ஏற்படும் உடல்நல பிரச்னைகள்
*உடல் பருமன்
*போதுமான தூக்கமின்மை
*நடத்தை பிரச்னைகள்
*பேச்சு தாமதமாதல்
*ஆட்டிசம்
*கவனச்சிதறல்கள்
*பெற்றோர் குழந்தைகள் திரைநேரம் செலவிடுவதை கண்காணித்து கட்டுப்படுத்த வேண்டும்.
*அவர்களுக்கு வெளியில் சென்று நண்பர்களுடன் விளையாடும் வாய்ப்பை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்.
*பாட்டு பாடுவது, நடனம் ஆடுவது, ஓவியம் வரைவது போன்ற செயல்கள் திரைநேரத்தை குறைக்க மிகவும் உதவும்.
வளர்ச்சி மைல்கற்கள்
*12 மாதங்கள் - தனியாக நிற்க ஆரம்பிக்கும் கையைப் பிடித்துக் கொண்டு நடக்க ஆரம்பிக்கும்.
*அப்பா, அம்மா போன்ற வார்த்தைகளை பேச ஆரம்பிக்கும்.
*ஆள்காட்டி விரலால் பொருட்களை சுட்டிக்காட்டும்.
*18 மாதங்கள் - ஒரு கையால் பிடித்துக் கொண்டு படிக்கட்டுகளில் எழுவார்கள்.
*தானாக எடுத்து சாப்பிட ஆரம்பிப்பார்கள்.
*உடல் பாகங்களை சுட்டிக் காட்ட ஆரம்பிப்பார்கள்.
2 வயது நன்றாக ஓடி விளையாடுவார்கள். அவர்களால் பந்தை உதைத்து விளையாட முடியும்.
2-3 வார்த்தைகளை சேர்த்து பேச தொடங்குவார்கள்.
*தாகம், பசி ஆகியவற்றை சொல்ல ஆரம்பிப்பார்கள்.
*கழிவறைக்கு செல்ல வேண்டியதை அவர்களால் சொல்ல முடியும்.
3 வயது
*மூன்று சக்கர மிதிவண்டி ஓட்டும் அளவு வலிமை இருக்கும்.
*படிக்கட்டுகளில் ஏறுவார்கள்
*தன்னுடைய பெயர், வயது, பாலினம் சொல்லத் தெரிந்து கொள்வர்.
4 வயது
*ஒற்றைக் காலில் குதிக்க முடியும். 4 -5 வார்த்தைகள் கொண்ட வாக்கியத்தை பேச தொடங்குவார்கள்.
*சுலபமான எளிய பாடல்களை பாடத் தொடங்குவர்.
5 வயது
*குதிப்பது, தாவுவது போன்றவற்றை எளிதாக அவர்களால் செய்ய முடியும்.
*கேள்விகள் கேட்க தொடங்குவர்.
*கற்பனைத் திறனுடன் விளையாடுவர்
*கதை சொல்லுவர்.
செயல்பாடுகள்
*12 மாதங்களில் - படங்கள் உள்ள புத்தகங்களை காண்பித்து அவற்றின் பெயர்களை சொல்லிக் கொடுக்கலாம்.
*வெளியே அழைத்துச் சென்று வெளி உலகை பற்றி சொல்லிக் கொடுக்கலாம்.
*விளையாடவும், நடக்கவும் ஊக்குவிக்கலாம்.
*18 மாதங்களில் - குழந்தைக்கு கதைகள் சொல்ல தொடங்கலாம்.
*படங்களை சுட்டிக்காட்டி அவற்றின் பெயர்களை கொடுக்கலாம்.
*பேனா பிடித்து தாளில் கோடுகள் வரைய கற்றுத் தரலாம்.
*ஒரே வயது உடைய குழந்தைகளுடன் விளையாடச் செய்யலாம்.
2 வயது செயல்பாடுகள்
*குழந்தைகள் சுறுசுறுப்பாக விளையாட வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.
*அவர்களின் படைப்பாற்றலை மேம்படுத்தும் விதமாக விளையாட்டு பொருட்களை கொடுத்து விளையாடச் செய்யலாம்.
*தொலைக்காட்சி, அலைபேசி கொடுப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
3-5 வயது செயல்பாடுகள்
*குழந்தையுடன் சேர்த்து நீங்களும் விளையாடுங்கள்.
*கதைகள் சொல்லிக் கொடுங்கள்.
*ஓவியம் வரைவது, பாடல் பாடுவது, களிமண்ணில் பொம்மைகள் செய்வது போன்ற செயல்களில் குழந்தைகளை ஈடுபடச் செய்ய வேண்டும்.
*குழந்தையை மற்ற குழந்தையுடன் விளையாட ஊக்குவிக்க வேண்டும்.
*குழந்தை உடல் ரீதியாக சுறுசுறுப்பாக இருக்க போதுமான இடத்தை வழங்குதல் வேண்டும்.
*வீட்டில் சின்ன சின்ன வேலைகளை பெற்றோருடன் சேர்ந்து செய்ய பழக்க வேண்டும்.
*தடுப்பூசிகள்
*தட்டம்மை
*தொண்டை அடைப்பான்
*ரணஜன்னி
*கக்குவான்
*சின்னம்மை
*மண்ணாங்கட்டி அம்மை
*ரூபெல்லா
*ஹெபடைடிஸ்
*டைபாய்டு
*போலியோ
*ஆகிய நோய்களுக்கு தடுப்பூசிகள் 1 முதல் 5 வயது வரையிலான குழந்தைகளுக்கு கொடுக்கப்பட வேண்டும்.
*இந்த வயது குழந்தைகள் துறுதுறுவென இருப்பதால் இவர்களை பெற்றோர் மிகுந்த கவனத்துடன் பார்த்துக் கொண்டால் அவர்கள் எந்தவொரு ஆபத்திலும் சிக்காமல் தவிர்க்கலாம்.
தொகுப்பு: ஸ்ரீதேவி