தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

டிராகன் பழம்!

நன்றி குங்குமம் டாக்டர்

Advertisement

சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்க சில பழங்கள் உதவுகின்றன. அவற்றில் ஒன்று தான் டிராகன் பழம். இதன் காரணமாகவே, இப்பழம் சமீபகாலமாகவே மக்களிடையே பிரபலமாக உள்ளது. இந்த டிராகன் பழத்தை பற்றி தெரிந்து கொள்வோம்:

சப்பாத்திக்கள்ளி பழத்தைப் போலவே காணப்படும் இது, கற்றாழை குடும்பத்தைச் சார்ந்த கொடி போன்ற ஒட்டுயிர் தாவரம் ஆகும். அடர் சிவப்பு நிறத்தில் காணப்படும் இந்தப் பழத்தின் சதைப் பகுதி சிறு கருப்பு விதைகளுடன் வெள்ளை நிறத்தில் காணப்படுகிறது. உலகில் வெப்ப மண்டல பகுதிகளில் இப்பழம் அதிகம் பயிரிடப்படுகிறது.

இனிப்பு மற்றும் புளிப்பு சுவை கலந்த இந்த பழம் அமெரிக்காவில் விளைந்து பின் கிழக்கு ஆசியாவில் அதிக அளவில் பயிரிடப்படும் பழமாக இருக்கிறது. தாய்லாந்து மற்றும் வியட்நாம் மக்கள் இந்த பழத்தை அதிகமாக விரும்பி சாப்பிடுகின்றனர். இதன் தோற்றம் டிராகன் போல் இருப்பதால் இதற்கு டிராகன் பழம் என்று பெயரிடப்பட்டது.டிராகன் பழம் உடலுக்கு குளிர்ச்சியை தரக் கூடியது. இப்பழத்தில் ஆன்டி ஆக்சிடன்டுகள் இருப்பதால், புற்றுநோய் வருவதைத் தடுக்கிறது. டிராகன் பழம் உயர்ரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது. இதயத்தில் உள்ள ரத்த நாளங்களை நன்றாகச் செயல்பட வைக்கிறது.

உடலின் கொலஸ்ட்ரால் அளவை குறைப்பதில் டிராகன் பழம் உதவுகின்றன.இப்பழத்தில் 90% நீரும், அதிக நார்ச்சத்தும் இருப்பதால், இவை உடலை அதிக நேரம் பசியின்றி வைத்திருக்க, அதிகம் உணவு உண்ணுவதை தடுக்க உதவுகின்றன.டிராகன் பழத்தில் வைட்டமின் சி சத்து அதிகம் இருப்பதால், அது மூச்சுக்குழாய் கோளாறுகளை குணப்படுத்த பயன்படுகிறது.இப்பழத்தில் இருக்கும் இரும்புச்சத்து ரத்த சிவப்பணுக்களின் உற்பத்திக்கு உதவுகிறது.

டிராகன் பழம் அதிகப்படியான நீர்ச்சத்தை கொண்டுள்ளதால், அது சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்திருக்க உதவும். குறிப்பாக வறண்ட சருமம் உள்ளவர்கள் இப்பழத்தை உண்ணுவது நலம் தரும். வைட்டமின் பி 3 இருப்பதால், உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளைக் குறைத்து, பருமன் இல்லாத சீரான உடலமைப்பை உருவாக்குகிறது. டிராகன் பழத்தில் கால்சியம், பாஸ்பரஸ் இருப்பதால் எலும்புகளை வலிமைப்படுத்துகிறது, பார்வைத் திறனையும், பற்களின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது.

தொகுப்பு: ரிஷி

Advertisement