வெறும் வயிற்றில் லெமன் ஜூஸ் குடிப்பவரா? ஒரு நிமிஷம்..!
நன்றி குங்குமம் தோழி
காலையில் வெறும் வயிற்றில் லெமன் ஜூஸ் குடிப்பதை சிலர் வழக்கமாகக் கொண்டிருப்பார்கள். அதில் ஒரு சில நன்மைகள் இருந்தாலும், பல தீமைகளையும் உள்ளடக்கியது என்பதையும் அறிவது அவசியம்.
*இந்த ஜூஸில் சிட்ரிக் அமிலத்தின் அளவு அதிகம் என்பதால், பல் அரிப்பு, நெஞ்செரிச்சல், இரைப்பையில் புண்கள் ஏற்படுதல் போன்ற பிரச்னைகள் வர வாய்ப்புகள் அதிகம். எலக்ரோலைட் சமநிலையின்மை ஏற்படவும் வாய்ப்புள்ளது. ஆனால், உணவுக்குப் பின் குடித்தால் பல நன்மைகளை அளிக்கும்.
*உணவு சாப்பிட்ட முப்பது நிமிடங்களுக்கு பிறகு அல்லது லேசான காலை உணவுக்குப் பிறகு எலுமிச்சை ஜூஸ் குடிப்பது பாதுகாப்பானது.
*எலுமிச்சை ஜூஸை வெது வெதுப்பான நீரில் கலந்து, சிறிதளவு தேன் அல்லது ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து குடிப்பது சிறந்தது.
*பற்களை பாதுகாக்க, போதிய உணவு உட்கொண்ட பிறகு ஜூஸ் குடிப்பது சிறந்ததாக இருக்கும்.
*உடல் எடையை குறைக்க ஜூஸ் குடிக்கலாம். ஆனால், நமது ஆரோக்கியம் குறைக்கும் விதத்தில் இருந்தால் அதனையும் மனதில் கொண்டு அருந்துவது நல்லது.
நன்மை, தீமைகளை அறிந்து எலுமிச்சை ஜூஸை குடிப்பது சாலச் சிறந்தது என்பதை உணர்வோம். பலன்களைப் பெறுவோம்.
தொகுப்பு: எஸ்.ஜெயந்திபாய், மதுரை.