தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

நோய் நாடி-நோய் முதல் நாடி

நன்றி குங்குமம் டாக்டர்

எடையே ஏன் குறைகிறாய்?

பொதுநல சிறப்பு மருத்துவர் டி.எம். பிரபு

நடிகர் விவேக் ஒரு திரைப்படத்தில் “எப்படி இருந்த நான் இப்படி ஆகிட்டேன்” என்ற வரியை காமெடி கலந்து கூறுவார். இன்றைக்கும் சிலநேரங்களில் காமெடியாக நம்முடைய வாழ்க்கை மாறி விட்டதை சந்தோசமாகவும், சில நேரங்களில் சோகமாகவும் இந்த வரியை நாமும் பயன்படுத்திக் கொண்டு தான் இருக்கிறோம். இந்த வரியை அப்படியே நம்முடைய மருத்துவ ரீதியில் கொஞ்சம் எப்படி இருக்கு என்பதைப் பார்க்கலாமா?

நாம் தினந்தோறும் பார்க்கும், சிலர் அவர்களின் உயரத்திற்கு ஏற்ற எடையுடன் ஆரோக்கியமாக, சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருப்பதை பார்த்துக் கொண்டிருப்போம். திடீரென்று, ஒரு நாள் அவர்களின் இயல்பான உடல் வாகையே மாற்றி சட்டென்று முகம் சுருங்கி, உடல் எடை குறைந்து, அவரது உருவத்தை அவரே சந்தேகப்படுமளவிற்கு மாறி மெலிந்து காணப்படுவார். அந்நேரத்தில், அவர்கள் நம்மிடம், “எப்படி இருந்த நான் இப்படி ஆகிட்டேன்” என்று சொல்வது சிலநேரங்களில் வேடிக்கையாக இருந்தாலும், சிலநேரங்களில் அவர்களது உடலின் மீதான குறைபாட்டை வெளிப்படுத்தும் ஆதங்கமாகதான் வெளிப்படும்.

மனிதர்களுக்கு பொதுவாக உடல் எடை குறைகிறது என்றாலே அது இரண்டு விதத்தில் மட்டுமே நடைபெறும். ஒன்று முறையான உடற்பயிற்சி மற்றும் ஆரோக்கியமான உணவு முறை, சீரான தூக்கம் என்று அவர்களின் வாழ்வியல் செயல்பாடுகளால் குறைவது. மற்றொன்று ஒரு சிலருக்கு எதுவும் செய்யாமல் இருக்கும் போதே தானாகவே உடல் எடை குறைவதை அவர்களால் உணர முடியும்.

இம்மாதிரி தானாக உடல் எடை குறைந்து விட்டது என்று நாம் சந்தோசப்படக் கூடாது, சந்தோசப்படவும் முடியாது. அது நம் உடலில் ஏற்பட்டுள்ள நோயின் தன்மையை வெளிப்படுத்தும் முறைகளில் மிக முக்கியமான அறிகுறியாக உடல் எடை குறைதலும் ஒன்றாகும். அதனால், உடல் எடை தானாக குறைகிறது என்றாலே மருத்துவத் துறையில் ஆபத்தான அறிகுறியாக மட்டுமே பார்க்கப்படும்.

உடல் எடை குறைகிறது என்றால், எந்த அளவில் நமது எடை மாற்றம் இருந்தால் ஆபத்தானது என்பதை தெரிந்து கொள்வது எப்படி என்று முதலில் நாம் தெரிந்து கொள்ள வேண்டும். உதாரணத்திற்கு, ஒருவரது எடை 60 கிலோ இருக்கிறது என்றால், தானாக உடல் எடை ஆறு மாதத்துக்குள் மூன்றிலிருந்து நாலரை கிலோவிற்கு மேல் குறைந்தால் நமது உடல் பிரச்சனைக்கு உள்ளாகியிருக்கிறது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

ஐம்பது சதவீத மக்களுக்கு தங்களுடைய உடல் எடை தானாக குறைகிறது என்பதை உணர முடியும். அவர்களுக்கு, பாடி இன்டெக்ஸ் வைத்து செக் பண்ணும் போது, சாதாரணமான எடை குறைப்பாக மட்டுமே இருக்க வாய்ப்பிருக்கிறது. உதாரணத்திற்கு காபி, டீ குடிப்பதை நிறுத்தியிருப்பார்கள் அல்லது முறையாக தூங்கியிருப்பார்கள் அல்லது ஜங்க் புட் என்று சொல்லக்கூடிய உணவுகளைக் கூட அவர்கள் நிறுத்தியிருப்பார்கள். இதில் ஏதாவது ஒன்று அவர்கள் இயல்பாக செய்திருந்தால் கூட, உடல் எடை பெரும்பாலும் குறைந்திருக்கும்.

மேலும் இருபத்தைந்து சதவீத மக்களுக்கு மட்டுமே எடை குறையும் காரணத்தைக் கண்டறிய முடியும். மீதம் இருபத்தைந்து சதவீத மக்களுக்கு எதனால் எடை குறைகிறது என்ற காரணத்தை எளிதில் கண்டறிய முடியாது. அம்மாதிரி காரணத்தை கண்டறிய முடியவில்லை என்றால், பயப்பட வேண்டாம். ஏதோ ஒரு சில கால கட்டத்தில் அவர்களுக்கு உடல் எடை குறைந்தாலும், அடுத்த சில மாதங்களில் தாங்களாகவே சரியாகி விடுவார்கள்.

உடல் எடை எப்படியெல்லாம் குறையும்

மனிதர்களுக்கு பிறந்ததில் இருந்து முப்பது வயது வரை வளர்ச்சி வேகமாக இருக்கும். முப்பதிலிருந்து அறுபது வயது வரை வளரும் விதம் குறைவாக இருக்கும். அறுபதிலிருந்து தொண்ணூறு வயது வரை எடை சீராக இருக்கும். தொண்ணூறு வயதுக்கு பின் உடல் எடை குறைய ஆரம்பிக்கும். இது சராசரியாக ஒரு மனிதனின் வயதிற்கேற்றவாறு உடல் வளர்ச்சியும், எடையும் இருக்கும் முறையாகும்.

மேலும், பெரும்பான்மையான மனிதர்களுக்கு முப்பது வயதுக்கு பின் உடலின் எடை வருடத்திற்கு 300 கிராம் என்கிற அளவில் குறைந்து கொண்டேயிருக்கும். அதன்படி பார்த்தோமானால், ஒவ்வொரு தனி நபரும் 10 வருடத்திற்கு 3 கிலோ வரை எடை குறைவது என்பது உடலளவில் இயல்பான ஒன்றாக இருக்கும். அப்படி பார்த்தோமானால், அவர்களின் 60 வயதில் ஒன்பது கிலோ வரை எடை குறைந்திருப்பார்கள். ஆனால், இம்மாதிரி எடை குறைவது என்பது மனிதர்களின் உடலில் வெளியே தெரியாது. அதற்கு பதில் உடலில் இருக்கும் கொலஸ்ட்ரால் அதனை ஈடுகட்டியிருக்கும். 90 வயது வரை பாடி இன்டெக்ஸ் மாஸ் உடலின் தன்மைக்கேற்றவாறு இருக்கும். 90 வயதுக்கு பின் தான், உடல் எடை தானாக குறைய ஆரம்பிக்கும்.

உடல் எடை குறையக் காரணங்கள்

உடல் எடை தானாக குறைவதற்கு மிக முக்கியமான நான்கு காரணங்கள் இருக்கின்றன.

1.புற்றுநோய்

2.நாள் பட்ட நோய்கள் (காசநோய், அல்சர்)

3.மெட்டபாலிக் கண்டிஷன்ஸ்

4.மனநோய் சார்ந்த பிரச்னைகள்.

இவற்றைப் பற்றி விரிவாகப் பார்க்கலாம்

1.புற்றுநோய்: புற்றுநோய் ஏற்பட்டாலே மனிதர்கள் சோர்வடைவது, வலியால் அவஸ்தைப் படுவது என்பது முக்கியமான அறிகுறியாகும். அதனால் சிலருக்கு புற்றுநோயின் ஆரம்பக்கட்டமாக உடல் எடை குறைவது வெளியே தெரியும் அறிகுறிகளாக இருக்கும். அதிலும் வயிற்றுப்பகுதி மற்றும் உணவுக்குழாய், கர்ப்பப்பை புற்றுநோய், நுரையீரல் புற்றுநோய் இவற்றால், இன்னும் தீவிரமாக உடல் எடை குறையும். உடல் எடையை அதிகரிப்பதற்கு நியூட்ரிசனல் சப்ளிமென்ட்ஸ் கொடுப்பார்கள். அதாவது (நரம்பின் வழியாக சில நேரங்களில் ஊட்டச்சத்தை அதிகரிப்பதற்கு கொடுப்பார்கள்).

2.நாள்பட்ட நோய்கள்: அதாவது பல வருடங்களாக சில நோய்களுக்கு சிகிச்சை எடுத்துக் கொண்டிருப்பார்கள். அவர்களுக்கு திடீரென்று உடல் எடை தானாக குறைய ஆரம்பிக்கும். உதாரணத்திற்கு, கிட்னி பெயிலியர், காசநோய், ஹார்ட் பெயிலியர், பக்கவாதம் போன்ற காரணங்களால் இவர்களுக்கு உடல் எடை தானாக குறையும். இவர்களுக்கு மருத்துவரின் உதவியுடன் உடல் எடைக் குறைப்பிற்கும் சேர்த்து சிகிச்சை அளிக்கப்படும். மேலும் வயிற்றில் புண் இருப்பது, அல்சர், உணவை சரியாக எடுத்துக் கொள்ள முடியாத சூழ்நிலை இவர்களுக்கும் தானாக உடல் எடை குறைய ஆரம்பிக்கும்.

இவர்களுக்கும் மருத்துவரின் உதவியுடன் உடல் எடை குறைப்பிற்கு சிகிச்சை மூலம் சரி செய்ய முடியும். சிலர் அதனால் தான், காசநோய்க்கு சிகிச்சை முறையாக எடுத்தேன், தற்போது உடல் எடை அதிகரித்திருக்கிறது என்பார்கள். பெரும்பாலும் தொடர் சிகிச்சையில் இருப்பவர்களுக்கு அதற்கான சிகிச்சை முறைகள் மூலமாகவே உடல் எடை அதிகரிக்க ஆரம்பித்து விடும். சிலருக்கு உடல் எடை அதிகரிப்பதில் தாமதமாகும் போது மட்டும் ஊட்டச்சத்தை அதிகரிக்க நரம்பின் வழியாக நியூட்ரிசனல் சப்ளிமென்ட்ஸ்

வழங்கப்படும்.

3.மெட்டபாலிக் கண்டிஷன்ஸ்: அதாவது மெட்டாபாலிக் கண்டிஷன்ஸ் என்பது சுகர் மற்றும் தைராய்டு மற்றும் டயபடிக் உள்பட்ட மெட்டபாலிக் கண்டிஷன்ஸ் இருப்பவர்களுக்கு உடல் எடை தானாக குறையும். சுகர் மற்றும் தைராய்டு இதற்கு சரியான சிகிச்சை மேற்கொள்ளும் போது, உடல் எடை குறைவதும் எளிதில் சரி செய்ய முடியும். இம்மாதிரி உடல் எடை குறைபவர்களுக்கு இதற்கான சிகிச்சை எடுப்பதே சிறந்தது. இவர்களுக்கு நியூட்ரிசனல் சப்ளிமென்ட்ஸ் தேவைப்படாது.

4.மனநோய் சார்ந்த பிரச்னைகள்: மனம் சார்ந்த பிரச்னைகள் ஏற்படும் போது தீவிர மனசோர்வால் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமென்பதை மறந்து விடுவார்கள். அதனால் தங்களைத் தாங்களே தனிமைப்படுத்திக் கொள்ளுதல், இதன் மூலம் அவர்கள் சாப்பிடாமல், தூங்காமல் தங்களை கவனித்துக் கொள்ளாமல் இருப்பார்கள். அதனால் உடலில் பெரும்பாலும் அசைவே இல்லாமல், ஒரே இடத்தில் அமர்ந்து இருப்பதால் அவர்களின் உடலில் எதிர்மறையான மாற்றங்கள் ஏற்படும்.

அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பது போல், இவர்களின் மனரீதியான பிரச்னையால், தானாகவே உடல் எடை குறைய ஆரம்பிக்கும். அதற்கு முறையாக மனநல மருத்துவரின் உதவியோடு சரியான சிகிச்சை எடுத்தால், உடல் எடை குறைவதோடு மட்டுமில்லாமல், மனரீதியான பிரச்னையும் சரியாகி விடும்.

நம்மில் பெரும்பாலானோர் உடல் எடை அதிகரிப்பதை பற்றி அதிகம் கவலைப்பட்டு அதற்கான உடற்பயிற்சியினையும், உணவுப் பழக்க வழக்கங்களையும் முறையாக பின்பற்ற முயற்சி செய்கிறோம். இதுவே எந்தவித காரணமும் இல்லாமல் உடல் எடை குறைகிறது என்றால், அலட்சியப்படுத்தும் போக்கு தான் அதிகமாக இருக்கிறது. இனியாவது, உங்களுக்கும், உங்களைச் சுற்றியுள்ளவர்களுக்கும் தானாக உடல் எடை குறைகிறது என்றால், மருத்துவரை அணுகுமாறு பரிந்துரை செய்யுங்கள். அதுவே அவர்களுக்கு நீங்கள் செய்யும் மிகப்பெரிய உதவியாகும்.

Related News